Thursday 21 December 2017

எப்பொருளில் நாம் ருஷ்யப் புரட்சியின் சர்வதேச முக்கியத்துவம் குறித்துப் பேசலாம் - லெனின்

“ருஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சி யதிகாரம் வென்றதும் (அக்டோபர் 25 (நவம்பர் 71, 1917) ஆரம்ப மாதங்களில், பிற்பட்ட ருஷ்யாவுக்கும் மேலைய ஐரோப்பாவின் வளர்ச்சியுற்ற நாடுகளுக்கும் இடைப்பட்ட மிகுதியான வேறுபாடு காரணமாய், இந்நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சி சிறிதும் எங்களுடையதை ஒத்ததாக இராதென நினைக்கத் தோன்றியிருக்கலாம். இப்பொழுது நமக்குக் கணிசமான அளவில் சர்வதேச அனுபவம் கிடைத்திருக்கிறது; எங்களுடைய புரட்சியின் குறிப்பிட்ட சில அடிப்படை இயல்புகள் ஒரு மண்டலத்துக்கோ, தனியொரு தேசத்துக்கோ, ருஷ்யாவுக்கோ மட்டும் உரித்தான முக்கியத்துவத்துடன் கூட, சர்வதேச முக்கியத்துவமும் பெற்றவை என்பதை இந்த அனுபவம் திட்டவட்டமாகப் புலப்படுத்துகிறது.

சர்வதேச முக்கியத்துவம் என்பதாக இங்கு நான் கூறுவது இப்பதத்தின் விரிவான பொருளில் அல்ல; எங்களுடைய புரட்சியால் எல்லா நாடுகளுக்கும் ஏற்படும் விளைவுகளின் பொருளில், இப்புரட்சியின் முதல் நிலைக் கூறுகளில் சிற்சில மட்டுமின்றி யாவுமே, மற்றும் அதன் துணைக் கூறுகளில் பலவுங்கூட, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையே. இப்பதத்தின் மிகக் குறுகிய பொருளில் தான், எங்கள் நாட்டில் நடந்தேறியது சர்வதேச அளவில் பொருந்துவதாகும், அல்லது சர்வதேச அளவில் திரும்ப வும் நடைபெறுவது வரலாற்று வழியில் தவிர்க்க இயலாத தாகும் என்கிற பொருளில்தான், இதைப் பற்றி இங்கு நான் கூறுகிறேன். எங்களுடைய புரட்சியின் சில அடிப்படை இயல்புகள் இந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.”

("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-1)

No comments:

Post a Comment