Sunday 10 December 2017

மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும் - ஸ்டாலின்

“ஒரு தேசம் தன் விதியைத் தானே சுதந்திரமாக தீர்மானித்துக் கொள்ள உரிமையுண்டு. தனக்குப் பொருந்தக்கூடிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அதற்கு உரிமையுண்டு. ஆனால் இவ்வாறு செய்வதற்கு மற்ற தேசிய இனங்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்க வேண்டும் என்பது ஒரு போதும் தேவையில்லை இது சந்தேகத்திற்கிடமற்ற ஒன்று

ஒரு தேசிய இனமானது, தன்னுடைய பெரும்பான்மையினருடைய நலனை, அதற்கும் மேலாக பாட்டாளி வர்க்கத்தின் நலனை மனதில் கொண்டிருக்கும் பட்சத்தில் அது எவ்வாறு தன்னுடைய சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்? எதிர்காலத்தில் அதன் சட்ட அமைப்பு எந்த வடிவங்களில் இருக்கும்?

தன்னாட்சி அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒரு தேசிய இனத்திற்கு உரிமையுண்டு; பிரிந்து செல்கின்ற உரிமையும் அதற்கு உண்டு. அதே நேரத்தில் எல்லாச் சூழ்நிலையிலும் இதைச் செய்யவேண்டும் என்று அர்த்தமல்ல. தன்னாட்சி அல்லது பிரிந்து செல்லுதல் என்பது எப்போதும், எல்லா இடத்திலும் ஒரு தேசிய இனத்தின் பெரும்பான்மையினருக்கு அதாவது உழைக்கும் மக்களுக்கு பயன்தருவதாய் இராது.”
(மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்)

No comments:

Post a Comment