Monday 4 December 2017

படுமோசமான நாடாளுமன்றங்களாயினும் அவற்றில் கம்யூனிஸ்டுக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டியது பற்றி லெனின்

“பிற்போக்கு நாடாளுமன்றத்தைப் புரட்சிகர நோக்கங்களுக்காப் பயன்படுத்திக் கொள்ளும் கடுமையான பணியைத் “தட்டிக்கழிப்பதன்” மூலம் இந்தக் கடின நிலைமையைச் “சமாளிக்க” முயலுவதானது மற்றிலும் சிறுபிள்ளைத்தனமானதே ஆகும். நீங்கள் ஒரு புதிய சமுதாயம் சமைக்க விரும்புகிறீர்கள், ஆயினும் கம்யூனிஸ்டுகளாலான சிறந்த நாடாளுமன்றக் குழு ஒன்றினைப் பிற்போக்கு நாடாளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதிலுள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறிர்கள்! இது சிறுபிள்ளைத்தனம் அல்லவா?
…படுமோசமான நாடாளுமன்றங்களாயினும் அவற்றிலும் கம்யூனிஸ்டுக் குழு ஒன்றை உருவாக்கி கொள்ள முடியாமற் போவது ஏன்? தொழிலாளர்களின் பிற்பட்ட பகுதிகளும் இன்னும் அதிகமாய்ச் சிறு விவசாயிகளின் பகுதிகளும், ருஷ்யாவில் இருந்ததைவிட மேற்கு ஐரோப்பாவில் மேலும் கூடுதலாய் முதலாளித்துவ – ஜனநாயகத் தப்பெண்ணங்களிலும் நாடாளுமன்றவாதத் தப்பெண்ணங்களிலும் ஊறியிருக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். இதனால் முதலாளித்துவ நாடாளுமன்றங்களைப் போன்ற அமைப்புகளுக்கு உள்ளிருந்து தான் கம்யூனிஸ்டுகள் எவ்விதமான இடையூறுகளாலும் கலக்கமடையாமல் இந்தத் தப்பெண்ணங்களை அம்பலம் செய்யவும் களையவும் முறியடிக்கவும், விடாப்பிடியான நீண்ட போராட்டம் நடத்த முடியும், நடத்தவும் வேண்டும்.”

 (“இடதுசாரி” கம்யூனிசம்-இளம் பருவக்கோளாறு)

No comments:

Post a Comment