Thursday 21 December 2017

புரட்சியாளர்கள் பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்யலாமா?

“ஜெர்மன் ‘இடதுசாரிகள்’’ தம்மைப் பொறுத்தவரை நிபந்தனையற்ற தீர்மானகரமான எதிர்மறையே இக் கேள்விக்குரிய பதிலாகுமெனக் கருதுகிருர்கள். கீழ்த்தரமான, சமூக-தேசியவெறி கொண்ட, சமரசவாத, லெகின் ரகத்தைச் சேர்ந்த புரட்சி-எதிர்ப்புத் தொழிற் சங்கங்களில் புரட்சியாளர்களும் கம்யூனிஸ்டுகளும் வேலை செய்யத் தேவையில்லை என்பதுடன், அவ்வாறு வேலை செய்வது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும் என்றும், ‘புரட்சி-எதிர்ப்பு', பிற்போக்குத்” தொழிற் சங்கங்களுக்கு எதிரான கண்டன முழக்கங்களும் ஆத்திரக் கூப்பாடுகளுமே (இவற்றுள் குறிப்பிடத்தக்க 'ஆதாரத்தோடும்', குறிப்பிடத்தக்க அசட்டு முறையிலும் அமைந்தவை கா. ஹோர்னெர் எழுப்பியவை) போதுமான ‘நிரூபணமாகும்' என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

இத்தகைய போர்த்தந்திரத்தின் புரட்சித் தன்மை குறித்து ஜெர்மன் ‘இடதுசாரிகள்’’ எவ்வளவுதான் திட நம்பிக்கை கொண்டிருந்த போதிலும், உண்மையில் இது அடிப்படையிலேயே தவறானது, வெற்றுச் சொல்லடுக்குகளைத் தவிர வேறு எதுவும் இல்லாதது.

("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-6)

No comments:

Post a Comment