Monday 24 July 2017

அரசு முதலாளித்துவம் என்பது அரசு சோஷலிசம் அல்ல என்பது பற்றி லெனின்:-

நவீன முதலாளித்துவத்தின், அதாவது ஏகாதிபத்தியத்தின் கோட்பாட்பாட்டு மதிப்பீட்டின் மிக முக்கிய சாராம்சம், அதாவது முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாகி விடுகிறது என்பது இங்கு நமக்கு எடுத்துரைக்கப்படுகிறது. ஏனெனில் ஏகபோக முதலாளித்துவம் அல்லது அரசு-ஏகபோக முதலாளித்துவமானது முதலாளித்துவமாய் இருக்கவில்லை, இப்பொழுது அதை “அரசு சோஷலிசம்” என்பதாய் அழைக்கலாம் என்றும் இன்னும் பலவாறாகவும் கருதும் தவறான முதலாளித்துவ-சீர்திருத்தவாதக் கூற்று மிக சகஜமாகிவிட்டது.

முழுநிறைவாய்த் திட்டமிடுவதற்கு டிரஸ்டுகள் என்றுமே ஏற்பாடு செய்ததில்லை, இப்பொழுதும் செய்யவில்லை, செய்யவும் முடியாது. ஆனால் அவை எவ்வளவுதான் திட்டமிட்ட போதிலும், எவ்வளவு மூலதன அதிபர்கள் தேசிய அளவிலும், ஏன் சர்வதேசிய அளவிலுங்கூட பொருளுற்பத்தப் பரிமாணத்தை முன்கூட்டியே கணக்கிட்டு கொண்ட போதிலும், எவ்வளவுதான் அவர்கள் இந்தப் பரிமாணத்தைத் திட்டமிட்டு ஒழுங்கு செய்து கொண்ட போதிலும், இன்னமும் நாம் இருப்பது முதலாளித்துவமேதான்- புதிய கட்டத்தை வந்தடைந்துவிட்ட முதலாளித்துவம் என்பது மெய்தான், ஆயினும் இன்னமும் அது சந்தேகத்துக்கு இடமின்றி முதலாளித்துவமேதான். இத்தகைய முதலாளித்துவம் சோஷலிசத்துக்கு “அண்மையதாய் இருப்பதானது” பாட்டாளி வர்க்கத்தின் மெய்யான பிரதிநிதிகளுக்கு சோஷலிசப் புரட்சி அண்மையதும் எளியதும் நடைமுறை சாத்தியமானதும் அவசர அவசியமானதும் ஆகிவிட்டதை நிரூபிப்பதற்குரிய வாதமாய் அமைய வேண்டுமே ஒழிய, இந்தப் புரட்சி புறக்கணிக்கப்படுவதற்கும். முதலாளித்துவத்தைக் கவர்ச்சியுடைதாய்க காட்டுவதற்கான முயற்சிக்கும்- எல்லா சீர்திருத்தவாதிகளுக்கும் இந்தப் பணியில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள்- இடந்தரும் வாதமாய் ஒருபோதும் ஆகிவிட முடியாது.

(அரசும் புரட்சியும்)