Thursday 28 March 2019

புரட்சிகரமான வாய்ச்சொல் பற்றி லெனின்


“புரட்சிகரமான போரைப் பற்றிய புரட்சிகரமான வாய்ச்சொல் நமது புரட்சியை.! நாசம் செய்யக் கூடும் என்று நான் ஒரு கட்சிக் கூட்டத்தில் சொன்ன போது என்னுடைய வாதத்தின் கூர்மைக்காக என்னைக் கடிந்து கொண்டார்கள். ஆனபோதிலும், ஒரு பிரச்சினையைக் கூர்மையாக எழுப்பித் தர வேண்டிய, விவகாரங்களைப் பச்சயாகச் சொல்லித் தீர வேண்டிய தருணங்கள் உண்டு; இல்லையேல் கட்சிக்கும் புரட்சிக்கும் நிவர்த்தி செய்ய முடியாது தீங்கு உண்டாக்கும் அபாயம் ஏற்படும்.

புரட்சிக் கட்சிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாட்டாளி வர்க்கச் சக்திகளும் குட்டி முதலாளி வர்க்கச் சக்திகளும் இணைந்த ஒரு சேர்க்கையாக, அல்லது கூட்டணியாக, அல்லது பரஸ்பாக் கலவையாக அமைகிற காலங்களிலும் புரட்சி நிகழ்ச்சிகளின் போக்கு பெரிய, வேகமான திருட்டங்களைக் காட்டும் போதும் புரட்சிக் கட்சிகள் பெரும்பாலாக அனுபவிக்கிற ஒரு வியாதியே! புரட்சிகரமான வாய்ச்சொல் வீச்சு ஆகும். புரட்சிகரமான வாய்ச்சொல் விச்சு என்பது நிகழ்ச்சிகளின் ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் இருக்கிற புறநிலைச் சந்தர்ப்பங்களையும் அந்தந்த நேரத்தில் இருக்கிற குறிப்பிட்ட விவகார நிலைகளையும் பார்க்காமல் புரட்சிகரமான முழுக்கங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதையே குறிக்கிறது. அந்தக் முழக்கங்கள் நேர்த்தியானவை, வசீகரமானவை, போதையூட்டுபவை, ஆனால் அவற்றிற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. புரட்சிகரமான வாய்ச்சொல்லின் இயல்பு இப்படிப்பட்டது.“
(புரட்சிகரமான வாய்ச்சொல்)

Tuesday 26 March 2019

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி- மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்


(தட்டச்சுப் பிழைகள் சரிபார்க்கப்படவில்லை- விரைவில் சரிபார்க்கப்படும்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 01
"முதலாளித்துவப் புரட்சி என்பது முதலாளி வர்க்கத்துக்கு மட்டுமே அனுகூலமாயிருக்க முடியும் எனும் கருத்து அவர்களின் வாதங்களிலே எப்போதும் இழையோடிக் கொண்டிருக்கிறது. எனினும் இதைவிட தவறான கருத்து வேறொன்று இருக்க முடியாது. முதலாளித்துவப் புரட்சி என்பது பூர்ஷ்வா - அதாவது, முதலாளிதுவ- சமுதாய- பொருளாதர அமைப்பு முறையின் கட்டுக்போப்பை விட்டு விலகாத ஒன்றாகும்.

முதலாளித்துவப் புரட்சி முதலாளித்துவ வளர்ச்சியின் தேவைகளை வெளியிடுகிறது. அது முதலாளித்துவதின் அடித்தளங்களை அழிப்பதற்குப் பதிலாக அவற்றை விரிவாக்குகிறது, ஆழப்படுத்துகிறது. எனவே, இந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை வெளியீடுகிறது. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் ஆட்சி செலுத்துவது தவிர்க்க முடியாது. ஆகையால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைவிட அதிகமாக முதலாளி வர்க்கத்தின் நலன்களையே வெளியிடுகிறது என்று முழு உரிமையுடன் சொல்ல முடியும். ஆனால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அறவே வெளியிடுவதில்லை என்று நினைப்பது சுத்த அபத்தமாகும். முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது. எனவே முதலாளித்துவ அரசியல் சுதந்திரம் நமக்குத் தேவையில்லை என்கிற பய நரோதியத் தத்துவத்துக்கோ அல்லது முதலாளித்துவ அரசியலிலும் முதலாளித்துவப் புரட்சியிலும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையிலும் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதத்துக்கோ இந்த அபத்தமான கருதது வந்து சேருகிறது."
(ஜனநாயப் புரட்சியில் சமூக-ஜன நாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 02
"அராஜகவாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு சமூக-ஜனநாயக உறுப்பினரும் செய்கின்ற ஒவ்வொரு தவறையும் அவர்கள் எல்லோரும் கண்டிக்கிறார்கள், பெபெல் கூட என்றோ ஒரு நாள் அநேகமாக தேசபக்த உணர்ச்சியில் பேசிவிட்டார். ஒரு தடவை விவசாயத் திட்டம் சம்பந்தமாகத் தவறான நிலையெடுத்தார், இன்னும் இப்படி பலவற்றை அவர்கள் எல்லோரும் உரத்த குரலில் சொல்கிறார்கள். பெபெல் கூட தன்னுடைய நாடாளுமன்றப் பணியில் சந்தர்ப்வாதத் தவறுகளைச் செய்தார் என்பது உண்மை. ஆனால் இது எதை நிரூபிக்கிறது? நாடாளுமன்றத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள் அனைவரையும் திரும்பக் கூப்பிட வேண்டும் என்பதை இது நிரூபிப்பதாக அராஜகவாதிகள் கூறுகிறார்கள். அராஜகவாதிகள் நாடாளுமன்றத்திலுள்ள சமூச-ஜனநாயக (கம்யூனிஸ்ட்) உறுப்பினர்களை ஏசுகிறார்கள். அவர்களோடு எந்தத் தொடர்பும் வேண்டாம் என்கிறார்கள், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியை, பாட்டாளி வர்க்கக் கொள்கையை, நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்க உறுப்பினர்களை வளர்ப்பதற்கு எதுவுமே செய்ய மறுத்து ஏசுகிறார்கள். அராஜவாதிகளின் வாய்வீச்சு நடைமுறையில் அவர்களைச் சந்தர்ப்பவாதத்தின் மிக உண்மையான துணைவர்களாக, சந்தர்ப்பவாதத்தின் மறு பக்கமாக மாற்றி விடுகிறது.

சமூக-ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) இத்தவறுகளிலிருந்து முற்றிலும் வேறுவிதமான முடிவுக்கு, உண்மையான சமூக-ஜனநாயகப் பிரதிநிதிகளைப் பயிற்றுவிப்பதில் கட்சியின் நெடுங்கால உழைப்பு இல்லாதிருந்தால் பெபெல் கூட பெபெலாக ஆகியிருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்கள்."
(போல்ஷிவிசத்துககு ஒரு கேலிச் சித்திரம்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 03
"..”டூமாவில் பயனற்ற வேலையில் சக்தியை வீணாக்குவதில் அர்த்தமில்லை, நம்முடைய எல்லாச் சக்திகளையும் கூடுதலான பலனளிக்கின்ற வழிகளில் நாம் உபயோகிப்போம்”. இது காரிய ரீதியான வாதமல்ல, குதர்க்கம். இதைச் சொல்பவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ இது அராஜகவாத முடிவுகளுக்குத் தவிர்க்க இயலாது இட்டுச் செல்கிறது. ஏனென்றால் எல்லா நாடுகளிலும் அராஜகவாதிகள் நாடாளுமன்றங்களின் சமூக-ஜனநாயகவாதிகளான (கம்யூனிஸ்டுகளான) உறுப்பினர்கள் செய்திருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டி “முதலாளித்துவப் பார்லிமெண்டரிசத்தோடான பயனற்ற வேலைகளில் சக்தியைச் செலவழிப்பதை” விட்டொழித்து "இந்தச் சக்திகள் அனைத்தையும்" ஸ்தாபனத்தின் "நேரடி நடவடிக்கையில்" ஒருமுகப்படுத்தும்படி அறைகூவிகிறார்கள். ஆனால் விரிவான அளவில் பன்முக வேலை செய்வதற்குப் பதிலாக இது சீர்குலைவிற்கும் கோஷங்களை - அவை தனித்து நிற்பதால் உபயோமற்றவை - கூச்சலிடுவதற்குமே இட்டுச் செல்கிறது. தங்களுடைய வாதம் புதுமையானது, மூன்றாவது டூமாவுக்கு மட்டுமே பொருந்துவது என்று ஒத்ஸோவிஸ்டுகளுக்கும் அல்டிமேடிஸ்டுகளுக்கும் தோன்ற மட்டுமே செய்கிறது. இது உண்மை அல்ல. இது ஐரோப்பா முழுவதிலுமே கேட்கப்படுகின்ற சாதாரணமான வாதம், அது சமூக-ஜனநாயக (கம்யூனிஸ்ட்) வாதம் அல்ல."
(போல்ஷிவிசத்துககு ஒரு கேலிச் சித்திரம்
அராசுகவாதமும் அராஜகவாத-சிண்டிககலிசமும்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 04
"வர்க்கத்துக்கும் பெருந்திரளான மக்களுக்கும் கட்சியின் உறவைப் பற்றிய கருத்துக்கள், முதலாளித்துவ நாடாளுமன்றங்களிலுடம் பிற்போக்கான தொழிற்சங்களிலும் கம்யுனிஸ்டுக் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமல்ல என்ற கருத்து தவறானது என்று மூன்றாவது அகிலதத்தின் இரண்டாவது காங்கிரஸ் கருதுகிறது"
(அடிப்படைக் கடமைகளைப் பற்றி கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 05
"சமூக-ஜனநாயகம் (கம்யூனிசம்) பார்லிமெண்டரிசத்தை (பிரதிநிதித்துவம் வாய்ந்த சபைகளில் பங்கெடுத்தல்), பாட்டாளி வாக்கத்துககு அறிவு தந்து, போதித்து அதை ஒரு சுதந்திரமான வாக்கக் கட்சியாக அமைப்பதற்குரிய பல வழிகளில் ஒன்றாக, தொழிலாளர்களின் விடுதலைக்காக நடத்தப்படும் அரசியல் போராட்டத்தில் பின்பற்றப்படும் முறைகளில் ஒன்றாகக் கருதுகிறது. இந்த மார்சிய நோக்கு சமூக-ஜனநாயகத்தை (கம்யூனிசத்தை) ஒரு பக்கத்தில் முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்தும் மறுபக்கத்தில் அராஜகவாதத்திலிருந்தும் தீவிரமான முறையில் வேறுபடுத்துகிறது.

முதலாளித்துவ மிதவாதிகளும் தீவிரவாதிகளும் பார்லிமெண்டரிசத்தைப் பொதுவாக அரசு விவகாரங்களை நடத்துகின்ற "இயற்கையான" முறையாக, ஒரே சகஜமான, சட்ட பூர்வமான முறையாகக் கருதுகிறார்கள், அவர்கள் வர்க்கப் பேராட்டத்தையும் நவீன பார்லிமெண்டரிசத்தின் தன்மையையும் மறுக்கிறார்கள். பார்லிமெண்டரிசம் என்பது முதலாளித்துவ ஒடுக்கு முறையின் கருவி என்பதைத் தொழிலாளர்கள் பார்ப்பதை தடுப்பதற்காக, வரலாற்று ரீதியில் பார்லிமெண்டரிசத்தின் குறுகிய முக்கியத்துவத்தை அவர்கள் உணருவதைத் தடுப்பதற்காக அவர்களுடைய கண்களை மூடி மறைப்பதற்காக முதலாளி வாக்கம் எல்லா முயற்சிகளையும் சாத்தியமான எல்லா வழிகளின் மூலமாகவும் சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செய்கிறது. அராஜகவாதிகளும் பார்லிமெண்டரிசத்தின் வரலாற்று ரீதியில் வரையறுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாதவதவர்களாக இருக்கிறார்கள், இந்தப் போராட்ட முறையை முற்றிலும் ஒதுக்கி விடுகிறார்கள்."
(சமூச-ஜனநாயகமும் தேர்தல் உடன்பாடுகளும்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 06
(பன்றித் தொழுவமான நாடாளுமன்றத்தைப் பற்றி லெனின்)

".. மார்க்சுக்குப் புரட்சிகர இயக்கவியலானது, பிளஹானவும காவுத்ஸ்கியும் ஏனையோரும் ஆக்கிக் கொண்டுவிட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகிலுப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை "பன்றித் தொழுவமே" ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய் நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதே முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மெய்யான சாரப் பொருள்- நாடாளுமன்ற- அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில் மட்டுமின்றி, மிகவும் ஜனநாயகமான குடியரசுகளிலுங்கூட இதுவேதான் நிலைமை."
(அரசும் புரட்சியும்)

"எடுத்துக்காட்டாக, மூன்றாவது நான்காவது டூமாவில் பங்கெடுக்க ஒத்துக்கொண்டது ஒரு சமரசமேயாகும், தற்காலிகமாகப் புரட்சிகரமான கோரிக்கைகளைக் கைவிடுவதேயாகும். ஆனால் இந்தச் சமரசம் முற்றிலும் நம் மீது நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டதேயாகும், ஏனெனில், சக்திகளின் பரஸ்பர நிலையானது நாம் வெகுஜனப் புரட்சிப் போராட்டத்தை நடத்துவதைத் தற்காலிகமாக அசாத்தியமாக்கிவிட்டிருந்தது, மேலும் இந்தப் போராட்டத்துக்கு ஒரு நீண்ட காலப்பகுதியில் தயாரிப்பு செய்யும் பொருட்டு நாம் இப்படிப்பட்ட ஒரு "பன்றிப்பட்டியின்" உள்ளேகூட இருந்து வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்சி என்கிற முறையில் போல்ஷிவிக்குகள் இப்பிரச்சினையை இவ்விதம் அணுகியதானது முற்றிலும் சரியே என்பதை சரித்திரம் நிரூபித்துள்ளது "
(சமரசங்கள் குறித்து)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 07
""பாய்ச்சல்களையும்" தொழிலாளி வர்க்க இயக்கம் கோட்பாட்டு வழியில் பழைய சமுதாயம் அனைத்துக்கும் பகைமையாய் இருப்பதையும் பற்றிய எல்லா வாதங்களையும் திருத்தல்வாதிகள் வெறும் வாய்வீச்சாய் கருதுகிறார்கள். சீர்திருத்தங்களை அவர்கள் சோஷலிசத்தின் பகுதியளவு நிறைவேற்றமாய்க் கருதுகிறார்கள். அராஜகவாத-சிண்டிக்கலிஸ்டுகள் "அற்பப் பணியை", குறிப்பாய் நாடாளுமன்ற மேடையைப் பயன்படுத்திக் கொள்வதை நிராகரிக்கின்றனர். பின்கூறிய போர்த்தந்திரம் நடைமுறையில் பார்க்கையில் "மகத்தான நாட்கள்" வருமெனக் கைகட்டிக் காத்திருப்பதும் மாபெரும் நிகழ்சசிகளைப் படைக்கும் சக்திகளைத் திரட்டும் திறனற்றிருப்பதுமே ஆகும்.

இரு வகையினரும் எது மிகவும் முக்கியமானதோ, அவசரமானதோ அது நடைபெறுவதற்கு- அதாவது, வர்க்கப் போராட்ட உணர்வு படைத்து தமது நோக்கங்களைத் தெளிவாய் உணர்ந்து மெய்யான மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் போதமும் பயிற்சியும் பெற்றவையும் எல்லா நிலைமைகளிலும் செவ்வனே இயங்கவல்லவையுமான, சக்தி மிக்க, பெரிய, நன்கு செயல்படும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஒன்றுசேர்க்கப்பவதற்குத் - தடையாகி விடுகின்றனர்"
(ஜரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி எங்கெல்ஸ் 08
"பாகுனிஸ்டுகளின் "அரசியல் துறவறம்" இதற்குத்தான் இட்டுச் செல்கிறது. சமாதான காலங்களில், பாட்டாளி வாக்கம் தன்னால் உச்சபட்சமாக அடையக் கூடியதெல்லாம், பார்லிமெண்டிற்கு சில பிரதிநிதிகளை அனுப்புவதுதான் என்பதையும், பார்லிமெண்டில் பெரும்பான்மையைப் பெற தனக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்பதையும் அறிந்திருக்கும் சமயத்தில்,தேர்தல்களின் போது வீட்டிலே உட்கார்ந்து கொண்டிருப்பது பெரும் புரட்சிகர நடவடிக்கை என்று தொழிலாளர்களை ஆங்காங்கே நம்பச் செய்வதும், பொதுவாக நாம் உயிர் வாழ்கின்ற நம்மை ஒடுக்குகின்ற அரசாங்கத்திற்குப் பதிலாக, எங்குமே இல்லாததும், எனவே தன்னைத் தற்காத்துக கொள்ளா முடியாததுமான ஒரு மாய அரசாங்கத்தைத் தாக்குவதும் சாத்தியமாக இருக்கலாம். மிகவும் எளிதாக மனோதைரியத்தை இழந்துவிடக் கூடிய மக்கள் முன் புரட்சிகர நாடகத்தை நடத்த இது மிகச்சிறந்த வழி.
..
எனினும் நிகழ்ச்சிகளின் போக்கு, பாட்டாளி வர்க்கத்தை முன்னணிக்குத் தள்ளும் போது, அரசியல் துறவறம் அப்பட்டமான கேலிக் கூத்தாகி, தொழிலாளி வர்க்கத்தின் நடைமுறைத் தலையீடு இன்றியமையாததாகிறது."
(பாகுனிஸ்களின் நடவடிக்கைகள் 1873 கோடைக் காலத்தில் ஸ்எபயினில் நடந்த புரட்சியைப் பற்றிய ஒரு விமர்சனம் முன்னுரை)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 09
"தோழர் பொர்டீகா இங்கே இத்தாலிய மார்க்சிவாதிகளின் கருத்தோட்டத்துக்காக வாதாட விரும்பியதாய்த் தெரிகிறது. ஆனால் அவர் பாராளுமன்ற வழயிலான செயற்பாட்டுக்கு ஆதரவாய்ப் பிற மார்க்சியவாதிகள் முன்வைத்த வாதங்களில் எதற்குமே பதிலளிக்கவில்லை.

வரலாற்று அனுபவத்தைச் செயற்கை முறையில் படைப்பித்துவிட முடியாது என்பதை தோழர் பொர்டீகா ஒத்துக்கொள்கிறார். போராட்டத்தைப் பிறிதொரு துறைக்கு எடுத்துச் சென்றாக வேண்டுமென்று அவர் நம்மிடம் கூறுகிறார். புரட்சிகர நெருக்கடி ஒவ்வொன்றுடன் கூடவும் பாராளுமன்ற நெருக்கடியும் தோன்றுவதை அவர் உணரவில்லையா, என்ன? போராட்டத்தைப் பிறிதொரு துறைக்கு, அதாவது சோவியத்துகளுக்கு எடுத்துச செல்ல வேடுமெனக் கூறுகிறார் என்பது மெய்தான். ஆனால் சோவியத்துகளைச் செயற்கை முறையில் படைப்பித்துவிட முடியாதென்பதை பொர்டீகாவே ஒத்துக் கொள்கிறார். புரட்சியின் போதோ, புரட்சியின் தருவாயிலோதான சோவித்துக்களை நிறுவ முடியுமென்று ருஷ்யாவின் உதாரணம் காட்டுகிறது. கேரென்ஸ்கியின் காலத்திலுங்கூட சோவியத்துகள் (அவை மென்ஷிவிக் சோவியத்துகளாகவே இருந்தன) பாட்டாளி வாக்க அதிகாரமாய் அமைய முடியாத முறையிலே தான் நிறுவப்பட்டன."
(பாராளுமன்ற முறை பற்றிய பொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 10
" பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டுதான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப போராட்டம் நடத்த முடிகிறது. போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும் - முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை - உபயோகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள் அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்."
(பாராளுமன்ற முறை பற்றிய பொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 11
"தொழிற் சங்கங்களுங்கூட சந்தர்ப்பவாதத் தன்மை கொண்டவையே, இவையும் ஓர் அபாயமே என்று கூறுகிறீர்கள். ஆனால் அதேபோது தொழிற் சங்கங்களைப் பொறுத்தவரை விதிவிலக்கு செய்து கொள்ள வேண்டும், ஏனெனில் இவை தொழிலாளர்களுடைய நிறுவனங்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் இது ஓரளவுக்கு மட்டுமே உண்மை. தொழிற் சங்கங்களிலுங்கூட மிகவும் பிற்பட்ட பகுதியோர் உள்ளனர், பாட்டாளிகளாக்கப்பட்ட குட்டிபூர்ஷ்வாக்களில் ஒரு பகுதியோரும் பிற்பட்ட தொழிலாளர்களும் சிறு விவசாயிகளும் உள்ளனர். இப்பகுதியோர் எல்லோரும் தமது நலன்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருப்பதாய் மெய்யாகவே நினைக்கிறார்கள். பாரளுமன்றத்தின் உள்ளிருந்து வேலை செய்வதன் மூலம், எது மெய்யென்பதை வெகுஜனங்களுக்குக் காட்டும் வண்ணம் உண்மை விவரங்களை எடுத்துரைப்பதன் மூலம் இந்தக் கருத்தினை எதிர்த்துப் போராடியாக வேண்டும். பிற்பட்ட மக்கள் திரள்களிடம் தத்துவம் பயனளிக்காது, இவர்களுக்கு நடைமுறை அனுபவம் அவசியம்."
(பாராளுமன்ற முறை பற்றிய பொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 12
"ருஷ்வாவின் உதாரணத்திலுங்கூட இதுவேதான் காணக்கிடக்கிறது. பாட்டாளி வர்க்கம் வெற்றி பெற்ற பிறகும்கூட நாங்கள் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டும்படி நேர்ந்தது, பிற்பட்ட நிலையிலிருந்த பாட்டாளிகளுக்கு இந்தச் சபையால் அவர்கள் பெறக் கூடிய அனுகூலம் ஒன்றிமில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காக நாங்கள் இதைச் செய்ய வேண்டியதாயிற்று. சோவியத்துகளுக்கும் அரசியல் நிர்ணய சபைக்குமுள்ள வித்தியாசத்தை உணர்த்தும் பொருட்டு ஸ்தூலமான முறையில் இரண்டையும் எதிரெதிரே வரச்செய்து, சோவியத்துக்கள் மட்டுமேதான் தீர்வாய் அமைய முடியுமென்பதைக் காட்ட வேண்டியிருந்தது"
(பாராளுமன்ற முறை பற்றிய பொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 13
"பாராளுமன்றத்தைத் தகர்ப்பது எப்படி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா நாடுகளிலும் ஆயுதமேந்திய எழுச்சியால் நீங்கள் அதைச் செய்ய முடியுமானால் நல்லதுததான். ருஷ்யாவில் நாங்கள் முதலாளித்துவப் பாராளுமன்றத்தை ஒழிப்பதில் எங்களுடைய உறுதியைத் தத்துவ வழியில் மட்டுமின்றி நடைமுறையிலும் நிரூபித்துக் காட்டடினோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் ஓரளவு நீண்ட நெடிய தயாரிப்புகள் இல்லாமல் இதைச் செய்ய இயலாது என்பதையும், பெரும்பாலான நாடுகளில் ஒரே அடியில் பாராளுமன்றத்தை வீழ்த்துவது இன்னமும் சாத்தியமாகிவிடவில்லை என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ளத் தவறிவிடுகிறீர்கள். பாராளுமன்றத்தை ஒழிக்க நாம் பாராளுமன்றத்தின் உள்ளிருந்து போராட்டம் நடத்தியாக வேண்டியிருக்கிறது. நவீன சமுதாயத்தில் எல்லா வர்க்கங்களின் அரசியல் கொள்கை வழியையும் நிர்ணயிக்கும் நிலைமைகளுக்கு மாற்றாய் உங்களுடைய புரட்சிகர மனவுறுதியைக் கொண்டுவிடப் பார்ககிறீர்கள்."
(பாராளுமன்ற முறை பற்றிய பொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 14:-
"ருஷ்யாவில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தை ஒழித்திடுமுன், எங்களுடைய வெற்றிக்குப் பிற்பாடுங்கூட முதலில் நாங்கள் அரசியல் நிர்ணய சபையைக் கூட்ட வேண்டியிந்ததை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். "ருஷ்யப் புரட்சியின் உதாரணம் மேலைய ஐரோப்பாவிலுள்ள நிலைமைகளுக்கு பொருந்தாதென்பது மெய்தான்" என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நமக்கு இதை நிரூபிக்க எந்தவொரு முக்கியவாதத்தையும் அளித்திடவில்லை. நாங்கள் முதலாளித்துவ ஜனநாயகத்துக்குரிய கட்டத்தின் வழியேதான் சென்றோம். இதனை நாங்கள் வேகமாய்க் கடந்து சென்றோம். அப்பொழுது நாங்கள் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களுக்காகக் கிளர்ச்சி நடத்தினோம். பிற்பாடு தொழிலாளி வர்க்க ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்த பிறகும் விவசாயிகள் முதலாளித்துவப் பாராளுமன்றம் அவசிமென்பதாகவே நம்பி வந்தனர்.

இந்தப் பிற்பட்ட பகுதியோரின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டு, நாங்கள் தேர்தல்களை அறிவித்து, மிகக் கடுமையான பசியாலும் பட்டினியாலும் எல்லோரும் அவதிப்பட்ட ஒரு தருணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையானது சுரண்டப்படும் வர்க்கங்களுடைய விருப்பங்களையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கவே இல்லை என்பதை உதாரணத்தின் மூலமும் உண்மைகளின் மூலமும் வெகுஜனங்களுக்குக் காட்ட வேண்டியிருந்தது. சோவியத் அரசாங்கத்துக்கும் முதலாளித்துவ அரசாங்கத்துக்குமுள்ள மோதல் இவ்விதம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகிய எங்களுக்கு மட்டுமின்றி, மிகப் பெரும்பாலான விவசாயிகளுக்கும் சிறு அலுவலகச் சிப்பந்திகளுக்கும் குட்டிபூர்ஷ்வாக்களுக்கும் இன்ன பிறருக்கும் தெட்டத்தெளிவாய்த் தெரியலாயிற்று."
(பாராளுமன்ற முறை பற்றிய பொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 15:-
" எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளி வர்க்கத்தில் பிற்பட்ட நிலையிலுள்ள பகுதியோர் இருக்கிறார்கள், பாராளுமன்றம் மக்களின் மெய்யான பிரதிநிதியாகும் என்று இவர்கள் நம்புகிறார்கள், அங்கே கையாளப்படும் அயோக்கிய முறைகளை இவர்கள் காண்பதில்லை. முதலாளித்துவ வர்க்கம் வெகுஜனங்களை ஏமாற்றத் துணைபுரியும் சாதனமாகவே பாராளுமன்றம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு எதிராய் எழுப்பப்பட வேண்டிய வாதம் இது. உங்களுடைய முடிவுகளுக்கு எதிராய் இது எழவே செய்கிறது.

முதலாளித்துவ வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டு வரும் மெய்யாகவே பிற்பட்ட பகுதியோரான வெகுஜனங்களுக்குப் பாராளுமன்றத்தின் உண்மையான தன்மையை எப்படி நீங்கள் புலப்படச் செய்யப் போகிறீர்கள்?

நீங்கள் பாராளுமன்றத்தில் இல்லையானால், நீங்கள் பாராளுமன்றத்துக்கு வெளியேதான் நிற்கப் போகிறீர்கள் என்றால், பல்வேறு பாராளுமன்ற சூழ்ச்சிகளையும் பல்வேறு கட்சிகளுடைய நிலைகளையும் எப்படி அம்பலம் செய்யப் போகிறீர்கள்?

நீங்கள் மார்க்சியவாதிகள் தான் என்றால், முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளுக்கும் கட்சிகளுக்கு இடையிலான உறவுகளுக்கும் நெருங்கிய இணைப்பு உண்டென்பதை நீங்கள் ஒத்துககொண்டாக வேண்டும். திரும்பவும் கேட்கிறேன், பாராளுமன்ற உறுப்பினர்களாய் இல்லையேல், பாராளுமன்ற வழியிலான செயற்பாட்டினை நிராகரிப்பீர்களாயின், இவற்றை எல்லாம் எப்படி புலப்படச் செய்யப் போகிறீர்கள்?

தொழிலாளி வர்க்கத்தினர், விவாசாயிகள், சிறு அலுவலகச் சிப்பந்திகள் ஆகிய வெகுஜனங்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவத்தின் வாயிலாகவே அன்றி, எந்த வாதங்களாலும் உண்மை நிலைமை உணர்த்திவிட முடியாது என்பதை ருஷ்யப் புரட்சியின் வரலாறு தெளிவாய்க் காட்டியிருக்கிறது."
(பாராளுமன்ற முறை பற்றிய பொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 16:-
"பாராளுமன்றப் போராட்டத்தில் ஈடுபடுவது வெறும் கால விரயமே என்பதாய் இங்கு வாதாடப்பட்டது. பாராளுமன்றத்தைப் போல, எல்லா வர்க்கங்களும் இந்த அளவுக்குப் பங்கெடுத்துக கொள்ளும் வெறொரு நிறுவனம் இருபபதாய்யாரும் நின்க்க முடியுமா? செயற்கை முறையிலே இப்படி ஒன்றை சிருஷ்டித்துவிட முடியாது. எல்லா வர்க்கங்களும் பாராளுமன்றப் போராட்டத்தினுள் கவர்ந்திழுக்கப்படுகின்றன என்றால், வர்க்க நலன்களும் மோதல்களும் பாராளுமன்றத்தில் பிதிபலிக்கப்படுவது தான் காரணம். உதாரணமாய், தீர்மானகரமான பொது வேலைநிறுத்தத்தை எங்கும் உடனடியாக உண்டாக்கி ஒரே அடியில் முதலாளித்துவத்தை வீழ்த்திரவிட முடியாமானால், பல நாடுகளிலும் ஏற்கெனவே புரட்சி நடைபெற்று முடிவுற்றிருக்குமே.

உண்மைகளை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும், பாராளுமன்றமானது வர்க்கப் போராட்ட அரங்காய் இருந்து வருகிறது. தோழர் பொர்டீகாவும் அவருடைய கருத்தோட்டங்களை ஏற்றுக்கொள்வோரும் வெகுஜனங்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுக் குழு ஒன்று செயல்படுவது சாத்தியமே என்தற்கு ஜெர்மனி சிறந்த உதாணரமாய் அமைகிறது. ஆகவே நீங்கள் ஒளிவுமறைவின்றி வெகுஜனங்களிடம் செல்ல வேண்டும், ""வலுவான நிறுவன ஒழுங்கமைப்பு கொண்ட ஒரு கட்சியைப் படைப்பிக்க நாங்கள் பலமற்றோராய் இருக்கிறோம்". இதுதான் சொல்லப்படவேண்டிய உண்மை. ஆனால் வெகுஜனங்களிடம் சென்று உங்கள் பலவீனத்தை நீங்கள் ஒப்புக் கொண்டால், அவர்கள் உங்கள் ஆதரவாளர்களாய் இருக்க மாட்டார்கள், எதிராளிகளாகவே இருப்பார்கள், அவர்கள் பாராளுமன்ற முறையின் ஆதரவாளர்களாகிவிடுவார்கள்.

"தொழிலாளித் தோழர்களே, நாங்கள் மிகவும் பலவீனமாயிருக்கிறோம், பாராளுமன்றத்திலுள்ள கட்சி உறுப்பினர்களைக் கட்சிக்குக் கீழ்ப்படிய வைக்கவல்ல கட்டுப்பாடுள்ள கட்சியினை எங்களால் அமைக்க முடியவில்லை" என்று சொல்வீர்களாயின், தொழிலாளர்கள் உங்களை விட்டுத் துறந்துவிடுவார்கள், "பலமில்லாத இந்த சோனிகளைக் கொண்டு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நாங்கள் நிறுவுவது எப்படி?" என்றுதான் அவர்கள் தம்மைத் தாமே கேட்டுக் கொள்வார்கள்."
(பாராளுமன்ற முறை பற்றிய பொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 17:-
" பாட்டாளி வர்க்கம் வெற்றிபெற்ற மறுதினமே அறிவுத் துறையினரும் மத்தியதர வகுப்பாகும் குட்டிபூர்ஷ்வாக்ளும் கம்யுனிஸ்டுகளாகிவிடுவார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது சிறு பிள்ளைத்தனமே ஆகும்.

இந்தப் பிரமை உங்களிடம் இல்லையானால், உடனே நீங்கள் பாட்டாளி வாக்கத்தை அதன் சொந்தக் கொள்கை வழியைக் கடைப்பிடிக்கும்படி வைப்பதற்குத் தயார் செய்தாக வேண்டும். அரசு விவகாரங்களில் எந்தக் கிளையிலும் இந்த வதிக்கு விலக்குகள் இல்லை என்பதைக் காண்பீர்கள். புரடசிக்கு மறுநாளன்றே நீங்கள் எங்கும் தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்பதாய்க் கூறிக்கொண்டு சந்தர்ப்பவாதத்தை கைக்கோள்வோரைக் காண்பீர்கள், அதாவது, கம்யூனிஸ்டுக் கட்சியின் அல்லது பாட்டாளி வர்க்க அரசின் கட்டுபபாட்டை அங்கீகரிக்க மறுக்கும் குட்டிபூர்ஷ்வாக்களைக் காண்பீர்கள். தனது எல்லா உறுப்பினர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படிக் கட்யப்படுத்தக் கூடியதான, மெய்யான கட்டுப்பாடு வாய்ந்த கட்சியை அமைத்திட நீங்கள் தொழிலாளர்களைத் தயார் செய்யாவிடில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாத்துக்கு உங்களால் ஒரு நாளும் தயார் செய்ய முடியாது. புதிய கம்யூனிஸ்டுக் கட்சிகள் மிகப் பலவும் பாராளுமன்றத்தில் பங்குகொண்டு செயல்படுவதை நிராகரிப்பதானது அவற்றின் பலவீனத்திலிருந்து எழும் போக்கே ஆகுமென்பதை நீங்கள் ஒத்துக கொள்ள விரும்பாததற்கு இதுவேதான் காரணமென நினைக்கிறேன். மெய்யாகவே புரட்சிகரமான தொழிலாளர்களில் மிகப் பெரும்பாலோர் எங்களைத்தான் பின்பற்றுவார்கள். உங்களுடைய பாராளுமன்ற – எதிர்ப்பு உரைகளை எதிர்த்துப் பேசுவார்கள் என்பதில் எனக்கு ஐயப்பாடு சிறிதும் இல்லை."
(பாராளுமன்ற முறை பற்றிய பொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

லெனின் 18:-
"ஆஸ்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி முதலாளித்துவ-ஜனநாயகப் பாராளுமன்றத்திற்கு நடக்கும் தேர்தல்களைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முடிவுற்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் முதலாளித்துவப் பாராளுமன்றங்களுக்கான தேர்தல்களிலும் இந்தப் பாராளுமன்றங்களின் வேலையிலும் பங்கெடுத்துக் கொள்வது பிழையற்ற போர்த்தந்திரம் என்று அங்கீகரித்தது.

ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரதிநிதிகளுடைய உரைகளைக் கொண்டு பார்க்கையில் அது கம்யூனிஸ்டு அகிலத்தின் முடிவைக் கட்சிகளில் ஒன்றின் முடிவுக்கு மேலாக வைக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் ஓடிவிட்டவர்களாகிய, சோஷலிசத்தின் துரோகிளாகிய ஆஸ்திரிய சமூக-ஜனநாயகவாதிகள் கம்யூனிஸ்டு அகிலத்தின் - அது ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் புறக்கணிப்பு முடிவுக்கு முரணாகயுள்ளது- மகிழ்ச்சி அடைவார்கள் என்பதிலும் சந்தேகம் இருகக முடீயாது."
(ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகளுக்குக் கடிதம்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 19:-
"ஆஸ்திரிய சமூக-ஜனநாயகவாதிகள் முதலாளித்துவப் பாராளுமன்றத்திலும், அதே போல் தங்கள் சொந்த பத்திரிகைகளும் அடங்கலாய்த் தமது "வேலைகளின்" எல்லாத் துறைகளிலும், எதாத்தத்தில் முதலாளி வர்க்கத்தையே முழுக்க முழுக்க சார்ந்திருக்கும் வகையில் முதுகெலும்பற்ற ஊசலாட்டத்திலே மட்டுமே திறனுள்ள குட்டிபூர்ஷ்வா ஜனநாயகவாதிகள் போல் நடந்துகொள்கிறார்கள். தொழிலாளர்களையும் உழைப்பாளி மக்களையும் வஞ்சிக்கும் ஊழல் மலிந்த இந்த முதலாளித்துவ ஸ்தாபனத்தின் வஞ்சகத்தை அதன் மேடையிலிருந்து அம்பலப்படுத்துவதற்காகவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் நுழைகிறோம்."
(ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகளுக்குக் கடிதம்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 20:-
"முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதை எதிர்த்து ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் வாதங்களில் ஒன்று இன்னும் கொஞ்சம் அதிகக் கவனமாய்ப் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். அந்த வாதம் பின்வருமாறு:-

"கம்யூனிஸ்களுக்குப் பாராளுமன்றம் ஒரு கிளர்ச்சி மேடையாக மட்டுமே முக்கியத்துவமுயடைது. ஆஸ்திரியாவிலுள்ள எங்களுக்குத் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் ஒரு கிளச்சி மேடையாக இருக்கிறது. எனவே, முதலாளித்துவப் பாராளுமன்றத்தின் தேர்தல்களில் நாங்கள் பங்கெடுக்க மறுக்கிறோம். ஜெர்மனியில் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் என்று மெய்யாகவே கருதத்தக்கது ஒன்றுமில்லை. அதனாலேதான் ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் மாறான போர்த்தந்திரத்தைப் பின்பற்றுகிறார்கள்."

இந்த வாதம் தவறாகுமெனக் கருதுகிறேன். முதலாளித்துவப் பாராளுமன்றத்தை நம்மால் ஒழிக்க முடியாதவரை நாம் அதை எதிர்த்து உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வேலை செய்ய வேண்டும். தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக முதலாளிகள் பயன்படுத்துகிற முதலாளித்துவ ஜனநாயகக் கருவிகளை உழைக்கும் மக்களில் (பாட்டாளிகள் மட்டுமின்றி, அரைப் பாட்டாளிகளும் சிறு விவசாயிகளும்) கணிசமான தொகையினர் நம்புகிறவரை, தொழிலாளர்களின் பிற்பட்ட பகுதியினர் - குறிப்பாகப் பாட்டாளி வர்க்கமல்லாத உழைப்பாளி மக்கள்- அதிமுக்கியமானதாகவும் செல்வாக்கு உள்ளதாகவும் கருதுகிற அதே மேடையிலிருந்து இந்த வஞ்சகத்தை நாம் விளக்க வேண்டும்."
(ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகளுக்குக் கடிதம்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 21
"கம்யூனிஸ்டுகளாகிய நாம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றித் தேர்தல்கள்- முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்த் தங்களுடைய சோவித்துக்களுக்காக உழைப்பாளி மக்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொள்ளும் தேர்தல்கள்- நடத்த முடியாதிருக்கிறவரை, முதலாளித்துவ வர்க்கம் அரசு அதிகாரத்தை வகித்து மக்களின் பல்வேறு வர்க்கங்களைத் தேர்தல்களில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறவரை, அந்தத் தேர்தல்களில், பாட்டாளி வாக்கம் மட்டுமின்றி எல்லா உழைப்பாளி மக்களிடையேயும் பிரசாரம் செய்யும்பொருட்டு, நாம் பங்கெடுப்பது நமது கடமையாகும். முதலாளித்துவப் பாராளுமன்றம், நிதி மோசடிகளையும் எல்லா விதமான லஞ்சங்களையும் மூடிமறைப்பதற்கு (பூர்ஷ்வாப் பாராளுமன்றத்தில் நடப்பது போல் வேறெங்கும் எழுத்தாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், மற்றவர்களின் விஷயத்தில் இவ்வளவு பெரிய அளவில் மிக “நயமான” வகைப்பட்ட லஞ்சம் கையளப்படுவதில்லை) “ஜனநாயகத்தைப்” பற்றிய வாய்ச்சொள்கறைப் பயன்படுத்தி, தொழிலாளிகளை வஞ்சிப்பதற்குரிய ஒரு சாதனமாக இருந்து வருகிறவரை, இதே நிறுவனத்தில் – அது மக்களின் சித்த்த்தை வெளியிடுவதாகக் கருதப்படுகிறது, ஆனால் பணக்காரர்கள் மக்களை ஏய்யப்பதை மூடிமறைப்பதே உண்மையில் அது ஆற்றும் பணியாகும் - கம்யூனிஸ்காளகிய நாம் இருந்து வஞ்சனையை முரணின்றி அம்பலப்படுத்துவதும் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகள் பக்கம் ஓடிப்போகிற ரென்னர்களின் கும்பல் புரியும் ஒவ்வொரு காரியத்தையும் அம்பலப்படுத்துவதும் நமது கடமையாகும்."
(ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகளுக்குக் கடிதம்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 22
"பாராளுமன்றத்திலே முதலாளித்துவக் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் இடையே உள்ள உறவுகள் மிக அடிக்கடி தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன, முதலாளித்துவ சமுதாயத்திலுள்ள எல்லா வாக்கங்களிடையேயும் நிலவும் உறவுகளை அவை பிரதிபலிக்கின்றன. எனவேதான், முதலாளித்துவப் பாராளுமன்றத்திலே, அதனுள் இருந்தே கம்யூனிஸ்டுகளாகிய நாம் கட்சிகள்பால் வர்க்கங்கள் கடைப்பிடடிக்கும் போக்கு, பண்ணைத் தொழிலாளிகள்பால் நிலப்பிரபுக்கள் கடைப்பிடிக்கும் போக்கு, ஏழை விவசாயிகள் பால் பணக்கார விவசாயிகள் கடைப்பிடிக்கும் போக்கு, அலுவலக ஊழியர்கள்பால், சிறு உடைமையார்கள்பால் பெரு முதலாளிகள் கடைப்பிடிக்கும் போக்கு, இப்படியே மற்றவற்றின் உண்மையை நாம் மக்களுக்கு விளக்க வேண்டும்.

முதலாளிகளின் கேடுகெட்ட, நாசுக்கான தந்திரங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கற்றுக் கொள்ளவும், குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தினர்மீதும் பாட்டாளி வர்க்கமல்லாத உழைக்கும் மக்கள் திரள்மீதும் செல்வர்க்குச் செலுத்தக் கற்றுக்கொள்ளவும், பாட்டாளி வர்க்கம் இதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் "பள்ளிப் பயிற்சி" இல்லாமல், பாட்டாளி வாக்கம் பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்தின் பொறுப்புக்களை வெற்றிகரமமாகச் சமாளிக்க முடியாது. காரணம், அப்போதுங்கூட, முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய புதிய நிலையிலிருந்து கொண்டு (ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்ட ஒரு வர்க்கம் என்ற நிலையிலிருந்து) பல வடிவங்களில் பல துறைகளில் விவசாயிகளை ஏமாற்றியும் அலுவலகச் சிப்பந்திகளை லஞ்சம் கொடுத்தும் பயமுறுத்தியும் வரும், "ஜனநாயகம்" பற்றிய வாய்ச்சொற்களைக் கொண்டுதன்னுடைய அசிங்கமான, சுயலாப அபிலாசைகளை மூடிமறைக்கும் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றும்"
(ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகளுக்குக் கடிதம்)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 23
"கோட்பாடு எனும் இந்தக் கருங்கல் அடித்தளத்தின்மீது எழுந்த போல்ஷிவிசமானது, மறுபுறத்தில், உலகில் வேறு எங்கும் ஒப்புவமை காண இயலாத அனுபவச் செழுமைவாய்ந்த பதினைந்து ஆண்டுக் கால (1903-1917) நடைமுறை வரலாற்றினைக் கடக்கலாயிற்று. அந்தப் பதினைந்து ஆண்டுகளின்போது இந்நாடு கண்ட புரட்சிகர அனுபவத்துக்கும், அதிவேகமாகவும் பல்வேறு வகைப்பட்டதாகவும் வரிசையாக வந்த வெவேறு இயக்க வகைகளுக்கும் - சட்டபூர்வமானதும் சட்டவிரோதமானதும், அமைதியானதும் புயலின் மூர்க்க கொண்டதும், தலைமறைவானதும பகிரங்கமானதும், சிறு குழுக்களின் அளவிலானதும் பரந்த வெகுஜன வீச்சு கொண்டதும், நாடாளுமன்ற வடிவிலானதும் பயங்கரவாத வடிவிலானதும் ஆகிய விதவிதமான இயக்க வகைகளுக்கும் - ஏறத்தாழ ஒப்பானவற்றையுங்கூட வேறு எந்த நாடும் கண்டதில்லை. வேறு எந்நாட்டிலும் நவீனச் சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களுக்கும் உரிய போராட்டத்தின் இத்தனை விதமான வடிவங்களும் வகைகளும் முறைகளும் இவ்வளவு குறுகிய கால வரம்பினுள் ஒன்று குவிந்ததில்லை.
.....
மாறிமாறிக் கையாளப்பட்ட நாடாளுமன்றப் போராட்ட முறைகளும் நாடானுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட முறைகளும், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பு செய்யும் போர்த்தந்திரமும் நாடாளுமன்றத்தில் பங்கு கொள்ளும் போர்த்தந்திரமும், சட்டபூர்வமான போராட்ட முறைகளும் சட்டத்துக்குப்புறம்பான போராட்ட முறைகளும், மற்றும் இவற்றுக்கிடையிலான உறவுகளும் தொடர்புகளும் அளவு கடந்த உள்ளடக்கப் பொருள் வளம் மிக்கதாய்த் திகழ்ந்தன. வெகுஜனங்களும் தலைவர்களும் அதேபோல் வர்க்கங்களும் கட்சிகளும் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகளில் போதனை பெறுவதைப் பொருத்தவரை, இந்தக் காலத்தின் ஒவ்வொரு மாதமும் "சமாதான பூர்வமான", "அரசியலாப்புச் சட்டக் கட்டுக்கோப்புக்கு உட்பட்டதான" வளர்ச்சிக்குரிய ஒரு முழு ஆண்டுக்கு ஈடானதாய் இருநதது. 1905 ஆம் ஆண்டின் "ஒத்திகை" நடந்திருக்காவிட்டால் 1917ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சி சாத்தியமாய் இருந்திக்காது. "
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 24
"நாடாளுமன்றத்தில் - மிகவும் பிற்போக்கான நாடாளுமனறம் தான் என்றாலுங்கூட - ஒருவர் எதிர்க் கட்சி ஒன்றின் தலைவராய் இருந்தார் எனற் உண்மையானது, பிற்பாடு புரட்சியில் அவர் பங்காற்றுவதற்கு வசதியாக இருந்தது."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 25
"மிகவும் பிற்போக்கான ஒரு "நாடாளுமன்றத்தில்" பங்கெடுத்துக் கொள்வதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளப் பிடிவாதமாய் மறுத்ததற்காக "இடதுசாரி" போல்ஷிவிக்குகள் 1908ல் எங்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர். இந்த "இடதுசாரிகள்"- இவர்களில் பலர் கம்யூனிஸ்டுக் கட்சியின் போற்றத்தக்க உறுப்பினர்களாகப் பிற்பாடு இருந்த (இன்னும் இருந்துவரும்) சிறந்த புரட்சியாளர்களாவர் - 1905ஆம் ஆண்டுப் புறக்கணிப்பின் வெற்றிகர அனுபவத்தைத் தமக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தனர். 1905 ஆகஸ்டில் ஆலோசனை அந்தஸ்துடைய "நாடாளுமன்றம்" கூட்டப்படுவதாக ஜார் பிரகடனம் செய்தபோது, போல்ஷிவிக்குகள் எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் மென்ஷிவிக்குகளுக்கும் எதிரான நிலையை ஏற்று, அதனைப் புறக்கணிக்கும்படி அறைகூவினர். உண்மையில் இந்த "நாடாளுமன்றம்" 1905 அக்டோபரில் மூண்ட புரட்சியால் துடைத்தெளியப்பட்டுவிட்டது.அக்காலத்தில், புறக்கணிப்பே பிழையற்றதாக இருந்தது. பிற்போக்கான நாடானுமன்றங்களில் பங்குகொள்ளாது இருப்பது பொதுவாகச் சரியானதே என்பதல்ல காரணம், எதார்த்த நிலைமையை நாங்கள் பிழையின்றி மதிப்பிட்டோம் என்பதே காரணம்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 26
"1905 போல்ஷிவிக்குகள் "நாடாளுமன்றத்தைப்" புறக்கணித்ததானது, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு மதிப்பிடற்கரிய அரசியல் அனுபவத்தை அளித்துச் செழுமைப்படுத்திற்று. சட்டபூர்வமான, சட்டவிரோதமான போராட்ட வடிவங்களும், நாடாளுமன்ற, நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட வடிவங்களும் ஒன்றிணைக்கப்படுகையில், சில நேரங்களில் நாடாளுமன்ற வடிவங்களைக் கைவிடுவது பயனளிப்பதாக இருப்பதுடன் அவசியமும ஆகிவிடுகிறது என்பதை அது தெளிவு படுத்திற்று. ஆனால் இந்த அனுபவத்தைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே காப்பியடிப்பதும், விமர்சனப் பார்வையின்றி பிற நிலைமைகளிலும் பிற சூழலகளிலும் அனுசரிப்பதும் பெருந் தவறாகிவிடும். 1906ல் போல்ஷிவிக்குகள் டூமாவைப் புறக்கணித்தது சிறிய பிழையே என்றாலும் பிழையே ஆகும். 1907லும் 1908லும் அடுத்து வந்த ஆண்டுகளிலும் டூமாவின் புறக்கணிப்பு மிகவும் கடுமையான, நிவர்த்தி செய்வது கடினமான தவறாகிவிட்டது. ஏனெனில் ஒரு புறத்தில், புரட்சி அலை வேகமாக உணர்ந்தெழுந்து, எழுச்சியாக மாறிவிடுமென்று எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. மறு புறத்தில், முதலாளித்துவ முடியாட்சி புதுபபிக்கப்பட்ட போது உருவான வரலாற்று நிலைமை சட்டபூர்வமான செயற்பாடுகளையும் சட்டவிரோதமான செயற்பாடுகளையும் ஒன்றிணைத்துக கொள்வதை அவசியமாக்கிவிட்டது. முழு நிறைவு எய்திவிட்ட இந்த வரலாற்றுக் கட்டம் இதற்குப் பிந்தைய கட்டங்களுடன் கொண்டுள்ள இணைப்பு இப்பொழுது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. முடிவுற்றுவிட்ட இக்கட்டத்தை இன்று நாம் திரும்பிப் பார்க்கையில், சட்டபூர்வமான போராட்ட வடிவங்களையும் சட்டவிரோதமான போராட்ட வடிவங்களையும் ஒன்றிணைத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும், மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனக்ஙளிலும் (நோய்க்கால உதவிச் சங்கங்கள் முதலானவை) பங்கெடுத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷிவிக்குகள் மிக உக்கிரமாய்ப் போராடி நிலைநிறுத்தியிராவிடில் 1908-1914ல் அவர்களால் பாட்டாளி வாக்கப் புரட்சிக் கட்சியின் உறுதியான மையப் பகுதியை (பலப்படுத்துவதும் வளர்த்திடுவதும் இருக்கட்டும்) சிதையாது பாதுகாத்துக் கொள்ளக்கூட முடியாமற் போயிருந்திருக்கும் என்று மிகத் தெளிவாய்த் தெரிகிறது."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 27
"எனதருமை புறக்கணிப்புவாதிகளே, நாடாளுமன்ற-எதிர்ப்பாளர்களே, நீங்கள் உங்களை "உக்கிரமான புரட்சியாளர்களாக" நினைத்துக் கொள்கிறீர்கள், ஆனால் உண்மையில் தொழிலாளி வாக்க இயக்கத்தினுள் தலைதூக்கும் முதலாளித்துவச் செல்வ்க்குகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒப்பளவில் அற்பமான இன்னல்களைக் கண்டு நீங்கள் நடுங்கிவிடுகிறீர்கள். ஆனால் உங்களுடைய வெற்றி- அதாவது முதலாளித்துவ வர்க்கத்தைக் கவிழ்த்துப் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தை வென்று கொள்வதானது- மேலும் பெரிய அளவில், எல்லையின்றிப் பெரிய அளவில் இதே இன்னல்களையே தோற்றுவிக்கும். இன்று உங்களை எதிர்நோக்கும் சிறிய இன்னலைக் கண்டு, சிறு பிள்ளைகளைப் போல நடுக்கமுறுகிறீர்கள், ஆனால் நாளைக்கும் அதற்கு மறு நாளும் இதே இன்னல்களை எல்லையின்றிக் கூடுதலான அளவில் சமாளிப்பதற்குக் கற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும், முழுமையாகவும் தீர்க்கமாகவும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும், என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை"
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை பற்றி லெனின் 28:-
(நாடாளுமன்றம் போன்ற சட்டபூர்வமான நிலைமைக்கு மட்டுமீறி பழக்கப்படுத்தியர்வகளை எதிர்த்து லெனின்)
".. ஒரு புறத்தில், கட்சியானது திடுதிப்பென்று சட்டபூர்வமான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு மாற்றப்பட்டு அதனால் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் வர்க்கங்களுக்கும் உள்ள வழக்கமான, முறையான, எளிய உறவுகள் குலைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலைக்குத் தாம் வந்துவிட்டதைக் கண்டதும், இவர்கள் குழம்பிவிட்டதாகத் தெரிகிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளைப்போலவே ஜெர்மனியிலும் சட்டபூர்வமான நிலைக்கு மக்கள் தம்மை மட்டு மீறிப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர். முறைப்படி நடைபெறும் கட்சிக் காங்கிரஸ்களில் "தலைவர்கள்" தங்கு தடையின்றி ஒழுங்கான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தல்கள், பொதுக கூட்டங்கள், பத்திரிகைகள், தொழிற்கங்கங்கள் மூலமாகவும், பிற நிறுவனங்கள் மூலமாகவும் வெளிப்படும் உணர்ச்சிகள் வாயிலாகக் கட்சிகளின் வர்க்க இயைபைச் சோதித்துப் பார்க்கும் வசதியான முறைக்கும், இன்ன பிறவற்றுக்கும் மட்டுமீறி மக்கள் தம்மைப் பழக்கப்படத்திக் கொண்டு விட்டனர்.

இவர்களது இந்த வழக்கமான செயல்முறைக்குப் பதிலாய், புரட்சிப் புயலின் வளர்ச்சி காரணமாகவும், உள்நாட்டுப போரின் வளர்ச்சி காரணமாகவும் சட்டபூர்வமான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு விரைவாய் மாறிச் சென்று, இரண்டையும் ஒன்றிணைத்துக கொண்டு, "தலைவர்களது குழுக்களைத்" தேர்வு செய்ய வேண்டிய அல்லது அமைக்க வேண்டிய அல்லது பாதுகாத்துக் கொள்ள வேண்டிய "வசதியற்ற", "ஜனநாயமல்லாத" முறைகளைக் கையாளவேண்டி வந்ததும் - இவர்கள் நிலை தடுமாறி, கலப்பற்ற அபத்தக் கற்பனையில் இறங்கத் தலைப்பட்டு விட்டனர். ஹாலந்துக கம்யூனிஸ்டுக் கட்சியின் சில உறுப்பினர்கள் மிகுந்த சலுகைக்கும் மிகவும் நிலையான சட்டபூர்வ அந்தஸ்துக்கும் உரிய மரபுகளையும் நிலைமைகளையும் கொண்ட ஒரு சிறு நாட்டில் பிறக்க வேண்டிய துரதிரஷ்டத்துக்கு உள்ளாகி, சட்டபூர்வ நிலையிலிருந்து சட்டவிரோத நிலைக்கான மாற்றத்தை என்றும் காணாதவர்களாய் இருந்துவிட்டதால், குழப்பத்துக்கு இரையாகி, சித்தப் பிரமை அடைந்து இந்த அபத்தக் கண்டுபிடிப்புகளைத் தோற்றுவிக்க உதவியதாகத் தெரிகிறது."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 29:-
"கட்சியானது இப்பொழுது பழைய வழியில் மட்டுமின்றி ஒரு புதிய வழியிலுங்கூட தொழிற் சங்கங்களுக்குப் போதமளித்து வழிகாட்டியாக வேண்டும். அதேபோதில் தொழிற் சங்கங்கள் அத்தியாவசியமான "கம்யூனிசப் பயிற்சிப் பள்ளியாகவும்" பாட்டாளி வாக்கத்தினர் சர்வதிகாரத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்குப் பயிற்சி தரும் தயாரிப்புப் பள்ளியாகவும், நாட்டின் பொருளாதாரம் முழுவதுக்குமான நிர்வாகம் படிப்பாயகத் தொழிலாளி வர்க்கத்துக்கும் (தனித்தனிப் பணிப் பிரிவுகளுக்கல்ல), பிற்பாடு உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் மாற்றப்படுவதற்கு அத்தியாவசியமான தொழிலாளர் ஒற்றுமைக்கான வடிவமாகவும் இருக்கின்றன, நெடுங்காலத்துக்கு அவ்வாறு இருக்கவும் செய்யும் என்பதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட பொருளில், பாட்டாளி வர்க்கச் சார்வாதிகரத்தில் தொழிற் சங்கங்கள் ஒருவகை "பிற்போக்குத் தன்மை" கொண்டவையாய் இருப்பது தவிர்க்க முடியாததாகும். இதைப் புரிந்து கொள்ளத் தவறுவது, முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துககு மாறிச் செல்வதற்கான இடைக்காலத்துக்குரிய அடிப்படை நிலைமைகளைப் புரிந்து கொள்ள முற்றாகத் தவறுவதே ஆகும். அதனைத் தட்டிக் கழிக்க அல்லது தாவிச் செல்ல முயலுவதோ படுமோசமான மடமையே ஆகும். ஏனெனில் தொழிலாளி வர்ககத்தின், விவசாயிகளின் மிகவும் பிற்பட்ட பிரிவினரையும் பெருந் திரளினரையும் பயிற்றுவித்து, போதமளித்து, அறிவொளிபெறச் செய்து, புது வாழ்வினுள் ஈர்த்திடுவதென்ற பாட்டாளி வர்க்க முன்னணிப் படைக்குரிய அந்தப் பணியைக் கண்டு அஞ்சுவதாகவே இதற்கு அர்த்தம்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 30:-
"பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்ய மறுப்பதானது, தொழிலாளர்களில் போதிய அளவுக்கு வளர்ச்சி பெறாத அல்லது பிற்பட்ட பகுதியோரைப் பிற்கோக்குத் தலைவர்கள் அல்லது முதலாளித்துவ வர்க்கக் கைக்கூலிகள் அல்லது தொழிலாளர் பிரபுக்குலத்தோர் அல்லது "முற்றிலும் முதலாளித்துவமயமாகிவிட்ட தொழிலாளர்கள்" (பிரிட்டிஷ் தொழிலாளர்கள் குறித்து 1858ல் மார்க்சுக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தைப் பார்க்கவும்) செல்வாக்கிலே விட்டு வைப்பதையே குறிக்கிறது.

கம்யூனிஸ்டுகள் பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்யக் கூடாதென்னும் இந்த நகைக்கத்தக்கத் "தத்துவம்", "வெகுஜனங்களை" வயப்படுத்தும் பிரச்சினையை "இடதுசாரி" கம்யுனிஸ்டுகள் எவ்வளவு துச்சமாய் மதிக்கிறார்கள் என்பதையும், "வெகுஜனங்களைப்" பற்றிய கூப்பாட்டை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதையும் மிகத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. "வெகுஜனங்களுக்கு" உதவி செய்வதற்கும், "வெகுஜனங்களின்" நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவதற்கும் தெரிந்து கொள்ள விரும்புவீர்களானால், நீங்கள் இன்னல்களையும் இந்தத் "தலைவர்களால்" ஏற்படும் தொல்லைகளையும் புரட்டுகளையும் அடக்குமுறையையும் கண்டு அஞ்சாமல், நிச்சயம் வெகுஜனங்கள் காணப்படும் இடங்களில் எல்லாம் வேலை செய்தாக வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் முன்னுள்ள பணி பிற்பட்ட பகுதியோரின் நம்பிக்கையைப் பெறுவதும், அவர்களுக்கிடையே வேலை செய்வதுமேயன்றி, செயற்கைத் தன்மை வாய்ந்த சிறுபிள்ளைத்தனமான "இடதுசாரிக்" கோஷங்களைக் கொண்ட அவர்களிடமிருந்து தம்மைப் பிரிந்து விலக்கிவேலை கட்டிக் கொள்வதல்ல."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 31:-
"7. முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா?
மகா அலட்சியமாய், சிறிதும் பொறுப்புணர்வின்றி, ஜெர்மன் "இடதுசாரி" கம்யூனிஸ்டுகள் இக்கேள்விக்கு எதிர்மறையில் பதிலளிக்கிறார்கள். அவர்களடைய வாதங்கள் யாவை? மேலே எடுத்துரைக்கப்பட்ட மேற்கோளில் பார்த்தோமே:-

"... வரலாற்று வழியிலும் அரசியல் வழியிலும் காலாசதியாகிவிட்ட நாடாளுமன்றப் போராட்ட வடிவங்களுக்குச் சரிந்து செல்லும் எவ்வகையான பின்னடைவையும்... தீர்மானமாய் நிராகரித்தே ஆக வேண்டும்..."

நகைக்கத்தக்க ஆடம்பரத்துடன் இது கூறப்படுகிறது. கண்கூடாகவே தவறானது இது. நாடாளுமன்ற முறைக்குச் "சரியும் பின்னடைவு" என்கிறார்கள்! ஜெர்மனியில் ஏற்கனவே சோவியத் குடியரசு ஒன்று உதித்துவிட்டதா, என்ன? அப்படி ஒன்றும் தெரியவில்லையே! "சரியும் பின்னடைவு" என்பதாகப் பேசுகிறார்களே, எப்படி அது? பொருளற்றச் சொல்லடுக்கேயன்றி வேறு என்ன?

நாடாளுமன்ற முறை "வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்ட" ஒன்று தான். பிரசார அர்த்தத்தில் இது மெய்தான். ஆனால் நடைமுறையில் அதனை வெற்றிகொள்ளும் நிலையை வந்தடைய இன்னும் நெடுந் தொலைவுள்ளதென்பது யாவரும் அறிந்ததே. முதலாளித்துவத்தையும் "வரலாற்று வழியில் காலாவதியாகி விட்ட" ஒன்றாக மிகப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, முழு நியாயத்துடன் அறிவித்திருக்கலாம். ஆயினும் அது, முதலாளித்துவத்தின் அடிப்படைமீது மிக நீண்ட, மிகவும் விடாப்பிடியான ஒரு போராட்டத்துககான அவசியத்தை நீக்கிவிடவில்லையே."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 32:-
"ஜெர்மன் "இடதுசாரிகள்", நாடாளுமன்ற முறை "அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது" என்று 1919 ஜனவரியிலேயே கருதியது நமக்குத் தெரிந்ததே. "இடதுசாரிகளின்" இந்தக் கருத்து தவறானது என்பதும் நாம் அறிந்ததே. நாடாளுமன்ற முறை "அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது" என்னும் நிர்ணயிப்பை ஒரே அடியில் ஒழித்திட இந்த ஒர் உண்மையே போதும். அக்காலத்தில் சர்ச்சைக்கு இடமில்லாததாய் இருந்த அவர்களது தவறு, இனி தவறல்ல என்றானது எப்படி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இந்த "இடதுசாரிகளுடையது" ஆகும். இதை நிரூபிக்க அவர்கள் துளிக்கூட சான்று அளிக்கவில்லை. இதை நிரூபிக்க அவர்கள் துளிக்கூட சான்று அளிக்கவில்லை, அளிக்கவும் முடியாது. ஓர் அரசியல் கட்சி தன்னுடைய தவறுகள் குறித்து அனுசரிக்கும் போக்கு, அக்கட்சி எந்த அளவுக்குப் பொறுப்புணர்ச்சி கொண்டுள்ளது என்பதையும், அதன் வர்க்கத்துக்கும் உழைப்பாளி வெகுஜனங்களுக்கும் அதற்குள்ள கடமைகளை நடைமுறையில் எந்த அளவுக்கு அது நிறைவேற்றுகிறது என்பதையும் மதிப்பிட்டு முடிவு செய்வதற்கான மிகமுககியமான, நம்பகமான வழிகளில் ஒன்றாகும்.

தவறை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்ளுதல், அத்தவறுக்குரிய காரணங்களை நிச்சயித்துக் கொள்ளுதல், அதனை நோக்கி இட்டுச் சென்ற நிலைமைகளைப் பகுத்தாய்தல் அதைச் சரிவெசய்தற்குரிய வழிகளை ஆராய்தறிந்து வகுத்துக் கொள்ளுதல் - இவையே பொறுப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்சிக்குரிய அடையாளம், இவ்வாறுதான் அது தனது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும், இவ்வாறுதான் அது தனது வர்க்கத்துக்கும் பிறகு வெகுஜனங்களுக்கும் போதமளித்துப பயிற்றுவிக்க வேண்டும். ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள "இடதுசாரிகள்" இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது தவறை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம், தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்கள் கட்சி அல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.
..
ஜெர்மனியிலுள்ள "இடதுசாரிகள்" தமது விருப்பத்தை, தமது அரசியல்-சித்தாந்தப் போக்கை எதார்த்த உண்மையாகத் தவறாய் நினைத்துக் கொண்டு விட்டனர் என்பது விளங்குகிறது. புரட்சியாளர்கள் செய்யக் கூடிய மிகவும் அபாயகரமான தவறாகும் இது."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 33:-
"ஜெர்மனியிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு நாடாளுமன்ற முறை "அரசியல் வழியில் காலாவதியானது தான்" ஆனால்- இதுவே இங்குள்ள முக்கிய விஷயம்- நமக்குக் காலாவதியாகிவிட்டதால் அது வர்க்கத்துக்கும் வெகுஜனங்களுக்கும் காலாவதியாகிவிட்டதாகும் எனக்கருதக் கூடாது. "இடதுசாரிகளுக்கு" ஒரு வர்க்கத்தின் கட்சியாக, வெகுஜனங்களின் கட்சியாகச் சிந்தனை செய்யத் தெரியவில்லை, அவ்வாறு செயல்படத் தெரியவில்லை என்பதையே திரும்பவும் இங்கு காண்கிறோம். வெகுஜனங்களுடைய நிலைக்கு, வர்க்கத்தின் பிற்பட்ட பகுதியின் நிலைக்கு, நீங்கள் சரிந்துவிடக்கூடாது. அதில் சர்ச்சைக்கு இடமில்லை. அவர்களுக்குக் கசப்பான உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். அவர்களுடைய முதலாளித்துவ ஜனநாய, நாடாளுமன்றவாதத் தப்பெண்ணங்களை, அவை தப்பெண்ணங்கள் என்று சுட்டிக் காட்ட வேண்டியதுதான் உங்களுடைய கடமை. ஆனால் அதேபோதில் (வர்க்கத்தின் கம்யூனிஸ்டு முன்னணிப் படை மட்டுமின்றி) வர்க்கம் அனைத்தின், (உழைப்பாளி மக்களின் முன்னேறிய பகுதியோர் மட்டுமின்றி) உழைப்பாளி மக்கள் அனைவரின் வாக்க உணர்வு, தயார் நிலை இவற்றின் எதார்த்த நிலவரத்தை நீங்கள் நிதானமாய்க் கவனித்து மதிப்பிட்டாக வேண்டும்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 34:-
"ஆலைத் தொழிலாளர்களின் "லட்சக் கணக்கானோரும்" "எண்ணற்றோரும்" வேண்டாம், ஒரளவு பெரிதான சிறுபான்மையினர் மட்டும்தான் கத்தோலிக்கப் பாதிரிமார்களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றாலுங்கூட- கிராமாந்தரத் தொழிலாளர்களிலும் இதேபோன்ற சிறுபான்மையினர் மட்டும்தான். நிலப்பிரபுக்களையும் பணக்கார விவசாயிகளையும் பின்பற்றுகிறார்கள் என்றாலுங்கூட- ஜெர்மனியில் நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் இன்னமும் காலாவதியாகிவிடவில்லை என்பதையே, புரட்சிகரப் பாட்டாளி வாக்கக் கட்சி அதன் சொந்த வர்க்கத்தின் பிற்பட்ட பகுதியோரைப் போதம் பெறச் செய்யும் பொருட்டும், அடக்கி ஒடுக்கப்படும், வளர்ச்சியில்லாத, அறியாமையில் ஆழ்ந்த கிராமாந்தர வெகுஜனங்களைப் போதம் பெறச் செய்து அறிவொளி தரும் பொருட்டும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற அரங்கில் நடைபெறும் போராட்டத்திலும் பங்கெடுத்துக் கொள்வது இக்கட்சியின் கடமையாகும் என்பதையே, இது சந்தேகத்துககு இடமின்றி குறிப்பிடுகிறது. முதலாளித்துவ நாடாளுமன்றங்களையும் இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை, அவற்றில் நீங்கள் வேலை செய்தே ஆகவேண்டும், ஏனெனில் பாதிரிமார்களால் ஏமாற்றப்பபட்டும், கிராம வாழ்ககை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு வேலை செய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்.
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு –)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 35:-
"... "இடதுசாரி" கம்யூனிஸ்டுகள் போல்ஷிவிக்குளாகிய எங்களைப் புகழ்ந்து நிறையவே பேசுகிறார்கள். எங்களைப் புகழ்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, போல்ஷிவிக்குகளுடைய போர்த்தந்திரத்தை மேலும் நன்கு தெரிந்து கொள்ள முயலுங்கள் என்பதாக அவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்று சில நேரங்களில் தோன்றுகிறது.

ருஷ்ய முதலாளித்துவ நாடாளுமன்றமான அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில், 1917 செப்டம்பர்-நவம்பரில், நாங்கள் பங்கெடுத்துக கொண்டோம். எங்களுடைய போர்தந்திரம் சரியா தவறா? சரியல்ல என்றால், இதனைத் தெளிவாக எடுத்துரைத்து நிரூபிக்க வேண்டும், சர்வதேசக் கம்யூனிசத்தின் பிழையற்ற போர்த்தந்திரத்தை வகுத்து உருவாக்குவதற்கு இது அவசியமாகும். அது சரியானதே என்றால், இதிலிருந்து சில முடிவுகளைக் கிரகித்துக் கொண்டாக வேண்டும். ருஷ்யாவின் நிலைமைகளும் மேற்கு ஐரோப்பாவின் நிலைமைகளும் ஒன்றெனக் கொள்ளலாகாது என்பது உண்மையே. ஆனால் "நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது" என்ற நிர்ணயிப்பின் பொருள் பற்றிய இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையைப் பொறுத்தவரை, எங்களுடைய அனுபவத்தைத் தக்கபடி கணக்கில் எடுத்துக கொண்டாக வேண்டும். ஏனெனில் ஸ்தூலமான அனுபவம் கணக்கில் எடுக்கப்பட்டாலொழிய இது போன்ற நிர்ணயிப்புகள் பொருளற்ற வெற்றுச் சொல்லடுக்குகளாக எளிதில் மாறிவிடும்.

1917 செப்டம்பர்-நவம்பரில், நாடாளுமன்ற முறை ருஷயாவில் அரசியல் விழயில் காலாவதியாகிவிட்டதாகக் கருத ருஷ்ய போல்ஷிவிக்குகளான எங்களுக்கு மேலையக் கம்யூனிஸ்டுகள் யாரையும்விட அதிக அளவு நியாம் இருக்கவில்லையா? இருந்ததென்பதில் ஐயத்துக்கு இடமில்லை. இங்கு எழும் கேள்வி முதலராளித்துவ நாடாளுமன்றங்கள் அதிக காலம் இருந்துள்ளனவா அல்லது சிறிது காலமாய்த்தான் உள்ளனவா என்பதல்ல, பெருந் திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக் கொள்ளவும், முதலாளித்துவ - ஜனநாயக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் (அல்லது அது கலைக்கப்பட அனுமதிக்கவும்) எந்த அளவுக்கு (சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறையிலும்) தயாராய் இருக்கிறார்கள் என்பதே இங்கு எழும் கேள்வி. 1917 செப்படம்பர்-நவம்பரில் ருஷ்யாவில் நகரத் தொழிலாளி வர்க்கமும படைவீரர்களும் விவசாயிகளும், விசேஷ நிலைமைகள் பலவும் காரணமாய், சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும், முதலாளித்துவ நாடாளுமன்றங்களிலே மிகவும் ஜனநாயகமானதைக் கலைத்திடவும், மிகவும் சிறப்பான அளவுக்குத் தயார் நிலையில் இருந்தனர் என்பது கிஞ்சித்தும் மறுக்க முடியாத, நூற்றுக்கு நூறு நிலைநாட்டப்பெற்ற வரலாற்று உண்மையாகும். இருந்தபோதிலும் போல்ஷிவிக்குகள் அரசியல் நிர்ணய சபையை புறக்கணிக்கவில்லை, அதற்குப் பதில் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொள்வதற்கு முன்வும் பிற்பாடும் தேர்தல்களில் பங்கெடுத்துக கொண்டனர். ருஷ்யாவில் அரசியல் நிர்ணய சபையின் தேர்தல் முடிவுகள் விவரமாகப் பகுத்தாயும் மேற்கூறிய கட்டுரையில், இந்தத் தேர்தல்கள் மதிப்பிடற்கரிய (பாட்டாளி வர்க்கத்துககு மிகமிகப் பயனுள்ள) அரசியல் பலன்களை அளித்தன என்பது என்னால் நிரூபிக்கப் பட்டிருக்கிறதென நான் திடமாக நம்புகிறேன்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு –)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 36:-
"சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சில வாரங்கள் முன்னதாகவும், இந்த வெற்றிக்குப் பிற்பாடுங்கூட, முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கெள்வதானது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துககுத் தீங்கிழைப்பதற்குப் பதிலாய், இது போன்ற நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட வேண்டியது எப்படி அவசியமென்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனப் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும், இந்நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய்க் கலைக்கப்படுவதற்கு வகை செய்கிறது என்பதும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை "அரசியல் வழியில் காலாவதியாக்குவதற்குத்"துணை புரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன. இந்த அனுபவத்தை உதாதசீனம் செய்துவிட்டு, அதே நேரத்தில் கம்யூனிஸ்டு அகிலத்துடன் - தனது போர்த்தந்தரத்தைச் சர்வதேசரீதியில் (குறுகலான, அல்லது தனிப்பட்ட தான எந்தவொரு தேசத்துககுமான போர்த்தந்திரமாயிராது, சர்வதேசப் போர்த்தந்திரமாய்) வகுத்துக் கொள்ள வேண்டிய கம்யுனிஸ்டு அகிலத்துடன் - இணைப்புரிமை கொண்டாடுவதானது மிகக் கொடுந்த தவறிழைப்பதாகவும், சர்வதேசியத்தைச் சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில் கைவிடுவதாகவுமே அமைகிறது."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 37:-
"வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மை இல்லாமல், இந்த மனப்பான்மை வளர்வதற்கு அனுசரணையான நிலைமைகள் இல்லாமல், புரட்சிகர போர்த்தந்திரம் ஒருநாளும் செயல் நிலைக்கு வளர்ச்சியுற முடியாது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் ருஷ்யாவில் ரத்தம் தோய்ந்த நீண்டநெடிய கொடிய அனுபவமானது, புரட்சிகரப் போர்த்தந்திரத்தைப் புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கிவிட முடியாதென்ற உண்மையை எங்களுக்குப் போதித்துள்ளது.

குறிப்பிட்ட அரசிலும் (அதைச் சுற்றிலுமள்ள அரசுகளிலும் மற்றும் உலகெங்குமுள்ள அரசுகளிலும்) இருக்கும் வர்க்க சக்திகள் யாவற்றையும், மற்றும் புரட்சி இயக்கங்களது அனுபவத்தையும் பற்றிய நிதானமான, முற்றிலும் புறநிலை நோக்குடன்கூடிய மதிப்பீட்டையே போர்த்தந்திரம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால் மட்டுமோ, நாடானுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது "புரட்சிகர" மனோபாவத்தை வெளிப்படத்திக் கொண்டு விடுவது மிகமிச் சுலபம். ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது கடினமான, மிகமிகக் கடினமான ஒரு பிரச்சினைக்குரிய தீர்வாகிவிடுவதில்லை."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 38:-
"சோஷலிசப் புரட்சியைத் துவக்குவது எங்களைக் காட்டிலும் மேற்கு ஐரோப்பாவுக்கு அதிகக் கடினமாயிருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாம். பிற்போக்கு நாடாளுமன்றத்தைப் புரட்சிகர நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் கடுமையான பணியைத் "தட்டிக்கழிபபதன்" மூலம் இந்தக் கடின நிலைமையைச் "சமாளிக்க" முயலுவதானது முற்றிலும் சிறுபிள்ளைத்தனமானதே ஆகும். நீங்கள் ஒரு புதியசமுதாயம் சமைக்க விரும்புகிறீர்கள், ஆயினும் திடநம்பிக்கையும் பற்றுதியும் கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்டுகளாகலான சிறந்த நாடாளுமன்றக் குழு ஒன்றினைப் பிற்போக்கு நாடாளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதிலுள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்! இது சிறுபிள்ளைத்தனம் அல்லவா?

ஜெர்மனியில் கால் லீப்க்னெஹ்டும் ஸ்வீடனில் ஹோக்லண்டும் அடியிலிருந்து வெகுஜன ஆதரவு இல்லாமலேயே பிற்போக்கு நாடாளுமன்றத்தை மெய்யாகவே புரட்சிகரமாய்ப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னுதாரணமாய்த் திகழ முடிந்ததெனில், விரைவாக வளர்ந்து வரும புரட்சிகர வெகுஜனக் கட்சி ஒன்று யுத்தப் பிற்காலத்தில வெகுஜனங்களிடையே பிரமைகள் நீங்கி கசப்புணர்ச்சி மேலோங்கியிருக்கும் நிலைமையில், படுமோசமான நாடாளுமன்றங்களாயினும் அவற்றிலும் கம்யூனிஸ்டுக் குழு ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியாமற் போவது ஏன்?! தொழிலாளர்களின் பிற்பட்ட பகுதிகளும் இன்னும் அதிகமாய்ச் சிறு விவசாயிகளின் பகுதிகளும், ருஷ்யாவில் இருந்ததைவிட மேற்கு ஐரோப்பாவில் மேலும் கூடுதலாய் முதுலராளித்துவ-ஜனநாயகத் தப்பெண்ணங்களிலும் நாடாளுமன்றவாதத் தப் பண்ணங்களிலும் ஊறியிருக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். இதனால் முதலாளித்துவ நாடாளுமன்றங்களைப் போன்ற அமைப்புகளுக்கு உள்ளிருந்து தான் கம்யூனிஸ்டுகள் எவ்விதமான இடையூறுகளாலும் கலக்கமடையாமல் இந்தத் தப்பெண்ணங்களை அம்பலம் செய்யவும் களையவும் முறியடிக்கவும் விடாப்பிடியான நீண்ட போராட்டம் நடத்த முடியும், நடத்தவும் வேண்டும்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 39:-
"ஜெர்மன் "இடதுசாரிகள்" தமது கட்சியில் மோசமான "தலைவர்கள்" இருப்பது குறித்து புகார் கூறுகிறார்கள், அவநம்பிக்கைக்கும் சோர்வுக்கும் இடந் தருகிறார்கள், "தலைவர்களை" "மறுத்தொதுக்கும்" நகைக்கத்தக்க நிலையினையுங்கூட வந்தடைகின்றனர். ஆனால் "தலைவர்களைத்" தலைமறைவாக ஒளித்து வைத்து கொள்வது அடிக்கடி அவசியமாகிவிடும் நிலைமைகளில் சிறந்த "தலைவர்களை" சோதித்து எடுககப்பட்ட நம்பகமான, செல்வாக்குடைய "தலைவர்களை" உருவாக்குவது மிகவும் கடினமாதாகிவிடுகிறது.

சட்டபூர்வமான வேலைகளையும் சட்டவிரோதமான வேலைகளையும் ஒன்றிணைத்துக் கொள்ளாமல், வேறுபல வழிகளோடு நடாளுமன்றங்களிலும் "தலைவர்களைச்" சோதித்துப் பார்க்காமல் இதிலுள்ள கஷ்டங்களை வெற்றிகரமாய்ச் சமாளிக்க முடியாது. குற்றவிமர்சனம் - மிகவும் கடுமையான, தாட்சண்யமற்ற, சமரசத்துக்கு இடமில்லாத குற்றவிமர்சனம் - நாடாளுமன்றவாதம் அல்லது நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கு எதிராய் அல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல்களையும் நாடாளுமன்ற அரங்கையும் புரட்சிகரமான, கம்யூனிஸ்டு முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாத தலைவர்களுக்கு எதிராய் - இன்னும் அதிகமாய் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுக்கு எதிராய் - திருப்பி விடப்பட வேண்டும். இத்தகைய குற்றவிமர்சனம் தான் - இதோடுகூட தகுதியற்ற தலைவர்களை நீக்கித் தகுதியுடையோரை அவர்களிடத்தில் அமர்த்த வேண்டுமென்பதைக் கூறத் தேவையில்லை- "தலைவர்களுக்குத்" தொழிலாளி வர்க்கத்துககும் உழைபபாளி மக்கள் அனைவருக்கும் லாயக்கானவர்களாக இருக்கும்படிப் போதமளித்துப் பயிற்றுவித்து, அதேபோதில் வெகுஜனங்களுக்கும் அரசியல் நிலைமையையும் அந்நிலைமையிலிருந்து எழும் பல சந்தர்ப்பங்களில் மிகவும் குளறுபடியான, சிக்கலான பணிகளைச் சரிவரப் புரிநது கொள்ளும்படிப் போதமளித்துப் பயிற்றுவிக்கக் கூடியதான பயனுள்ள செழுமை வாய்ந்த புரட்சிகரச் செயற்பாடாய் அமைய முடியும்"
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 41:-
"கண்கூடான காரணங்களில் ஒன்று ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுடைய தவறான போர்த்தந்திரமாகும். இவர்கள் அச்சமின்றியும் நேர்மையுடனும் இந்தப் பிழையை ஏற்றுக் கொண்டு இதனைத் திருத்திக் கொள்ளக் கற்றுக் கொண்டாக வேண்டும். பிற்போக்கான முதலராளித்துவ நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான தொழிற் சங்கங்களிலும், பங்கெடுத்துக் கொள்வதன் அவசியத்தை இவர்கள் மறுத்ததில் இந்தத் தவறு அடங்கியிருக்கிறது. "இடதுசாரி" இளம்பருவக் கோளாறின் எண்ணற்ற வெளிப்பாடுகளில் இது அடங்கியிருந்தது. இந்த "இடதுசாரி" இளம் பருவக் கோளாறு இப்பொழுது வெளியே தெரியும்படி வெளிப்பட்டுவிட்டது, இதனால் இது முன்னிலும் தீர்க்கமாகவும் விரைவாகவும் உடலுக்கு இன்னும் கூடுதலான அனுகூலம் உண்டாகும் முறையிலும் குணப்படுத்தப்படும்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 42:-
"பாட்டாளி வர்க்கம் அதன் குறிக்கோள்களை வந்தடைய வகைசெய்யும் சாதனம் தொழிலாளர்களது சோவியத்துகளே அன்றி நாடாளுமன்றமல்ல என்பதை இக்கடிதத்தின் ஆசிரியர் நன்கு உணருகிறார். இதுவரை இதனை உணரத் தவறியோர், அவர்கள் மெத்தப் படித்தவர்களாகவும் மிகுந்த அனுபவமுடைய அரசியல்வாதிகளாகவும் மனப்பூர்வமான சோஷலிஸ்டுகளாகவும் நன்கு கற்றுத் தேர்ந்த மார்க்சியவாதிகளாகவும் நேர்மையான குடிமக்களாகவும் நல்ல தந்தையராகவும் இருந்த போதிலும், கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளே ஆவர். ஆனால் சோவியத்துகளுக்கு ஆதரவான அரசியல்வாதிகளை நாடாளுமன்றத்தின் உள்ளே வரச் செய்யாமல், உள்ளிருந்தே நாடாளுமன்ற முறையைச் சிதைவுறச் செய்யாமல், நாடாளுமன்றத்தைக் கலைத்திடுவதற்காக சோவியத்துக்கள் மேற்கொள்ளப்போகும் பணியில் சோவியத்துகளின் வெற்றிக்காக நாடாளுமன்றத்தின் உள்ளிருந்து வேலை செய்யாமல், நாடாளுமன்றத்தின் மீது சோவித்துகள் வெற்றி பெறுவது சாத்தியம்தானா என்று இக்கடிதத்தின் ஆசிரியர் கேட்கவே இல்லை - இவ்வாறு கேட்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு ஏற்படவில்லை. ஆயினும் பிரிட்டனில் கம்யூனிஸ்டுக் கட்சியானது விஞ்ஞானக் கோட்பாடுகளையே ஆதாரமாகக் கொண்டு செயல்பட வேண்டுமென்ற முற்றிலும் சரியான கருத்தை இந்தக் கடிதத்தின் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். விஞ்ஞானம் முதலாவதாகப் பிறநாடுகளின் அனுபவத்தை - முக்கியமாய் முதலாளித்துவ நாடுகளேயான இந்தப் பிற நாடுகள் இதே மாதிரியான அனுபவத்தைக் கண்டு வருமாயின், அல்லது அண்மையில் கண்டிருக்குமாயின் - கணக்கில் எடுத்துக கொள்ள வேண்டுமென்று கோருகிறது, இரண்டாவதாக, அது அந்தந்த நாட்டிலும் செயல்படும் எல்லாச் சக்திகளையும் கோஷ்டிகளையும் கட்டிசிகளையும் வர்க்கங்களையும் வெகுஜனங்களையும் கணக்கில் எடுத்துக கொள்ள வேண்டுமென்றும், மற்றும் ஒரேவொரு கோஷ்டி அல்ல்து கட்சியின் விருப்பங்களையும் அபிப்பிராயங்களையும் வர்க்க உணர்வின், போர்க்குணத்தின் நிலைமையும் மட்டும் கொண்டு கொள்கையை நிர்ணயித்துவிடக் கூடாதென்றும் கோருகிறது."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 43:-
".. மிகப் பெருவாரியான பிரிட்டிஷ் தொழிலாளர்கள் இன்னமும பிரிட்டிஷ் கேரென்ஸ்கிகள் ஷெய்டெம்ன்களின் தலைமையையே பின்பற்றி வருகிறார்கள், இவர்களாலான அ ரசாங்கம் குறித்து இன்னமும் அவர்களுக்கு அனுபவம் ஏற்பட்டாகவில்லை - தொழிலாளர்கள் வெகுஜன அளவில் கம்யூனிசத்துக்கு மாறி வருவதற்கு ருஷ்யாவிலும் ஜெர்மனியிலும் இந்த அனுபவம் அசியமாயிருந்தது - என்னும் இவ்வுண்மை, இதற்கு நேர்மாறாக, பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள் நடாளுமன்றச் செயற்பாட்டில் பங்கு கொண்டு ஆக வேண்டும், நாடாளுமன்றத்தின் உள்ளிருந்து கொண்டு ஹெண்டர்சன், ஸ்னோடன் அரசாங்கத்தின் விளைவுகளைத் தொழிலாளி வெகுஜனங்கள் நடைமுறையில் கண்டுணருவதற்குத் துணை புரிய வேண்டும், லாயிட் சுர்ஜ், சர்ச்சில் இவர்களது ஒன்றுபட்ட சக்திகளைத் தோற்கடிக்க ஹெண்டர்சன்களுக்கும் ஸ்னோடன்களுக்கும் உதவ வேண்டும் என்பதையே சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்துகிறது. வேறுவிதமாய்ச் செயல்படுவதானது, புரட்சி லட்சியத்துக்கு ஊறு செய்வதாகவே இருக்கும். ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தில் பெரும் பாலோரது அபிப்பிராயங்களில் மாற்றம் உண்டாக்காமல் புரட்சி சாத்தியமன்று. இந்த மாற்றத்தை வெகுஜனங்களுடைய அரசியல் அனுபவத்தால் உண்டாக்க முடியுமேயன்றி, பிரச்சாரத்தினால் மட்டுமே ஒரு நாளும் உண்டாக்கிவிட முடியாது."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 44:-
"இந்தப் போர்தந்திரம் மிகவும் "நுட்பமானது" அல்லது மிகவும் சிக்கலானது, வெகுஜனங்களால் இதனைப் புரிந்து கொள்ள முடியாது என்றும், இந்தப் போர்தந்திரம் நமது சக்திகளைப் பிளவுபடுத்திச் சிதறடித்துவிடும். சோவியத் புரட்சியிலே அவற்றை நாம் ஒருசேரத் திரட்டி ஈடுபடுத்த முடியாதபடிச் செய்துவிடும் என்றும், இன்ன பலவாறாகவும் ஆட்சேபம்எழுப்பப்படுமானால், இந்த "இடதுசாரி" ஆட்சேபக்காரர்களைப் பார்த்து, உங்களுடைய வறட்டுச சூத்திரவாதத்தை வெகுஜனங்களுக்கு உரியதாகக் கூறாதீர்கள் என்றுதான் நான் பதிலளிப்பேன்! ருஷ்யாவிலுள்ள வெகுஜனங்கள் பிரிட்டனிலுள்ள வெகுஜனங்களைக் காட்டிலும் கல்வி கேள்வியில் சிறந்தவர்களல்ல என்பது தெளிவு, உண்மையில் அவர்களைக் காட்டிலும் பிற்பட்டவர்களே. ஆயினும் வெகுஜனங்கள் போல்ஷிவிக்குகளைப் புரிந்து கொள்ளவே செய்தனர். சோவியத் புரட்சிக்குச் சிறிது காலமே முன்னதாய், 1917 செப்டம்பரில், போல்ஷிவிக்குகள் முதலாளித்துவ நாடாளுமன்றத்துக்கு (அரசியல் நிர்ணயச் சபைக்கு) தமதுவேட்பாளர்களை நிறுத்தினர், 1917 நவம்பரில் சோவியத் புரட்சிக்கு மறுதினம் இந்த அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில் பங்கு கொண்டனர் - 1918 ஜனவரி 5ல் இந்த அரசியல் நிர்ணய சபையைக் கலைத்தனர் - என்பது போல்ஷிவிக்குகளுக்குத் தடங்கலாகிவிடவில்லை. மாறாக அவர்களுக்கு உதவியே செய்தது."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 45:-
"ருஷ்பாவிலுங்கூட தேர்தல்களில் சந்தர்ப்பவாதமும், முற்றிலும் முதலாளித்துவ தில்லுமுல்லுகளும் கள்ளத்தனமும் சூதுவாதும் எப்பொழுதும் மலிந்தே இருந்தன. மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கம்யூனிஸ்டுகள் வழக்கத்துககு மாறான, சந்தர்ப்பவாதமல்லாத, பதவிவேட்டையாக அமையாத ஒரு புதிய ரக நாடாளுமன்ற முறையைத் தோற்றுவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுக் கட்சிகள் தமக்குரிய கோஷங்களை வெளியிட வேண்டும், மெய்யான பாட்டாளி வர்க்கத்தினர் நிறுவன ஒழுங்கமைப்பு பெறாத, ஒடுக்கி வதைக்கப்படும் ஏழைகளுடைய உதவியுடன் துணடுப் பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும், தொழிலாளர்களுடைய வீடுகளுக்கும் கிராமப் பாட்டாளிகளின், இருள் மண்டிய கிராமங்களிலுள்ள விவசாயிகளின் குடில்களுக்கும் சென்று அவர்களுடைய ஆதரவைத் திரட்ட வேண்டும் (ருஷ்யாவைக் காட்டிலும் அதிருஷ்டவசமாய் ஐரோப்பாவில் பல மடங்கு குறைவான இருள் மண்டிய கிராமங்களே உள்ளன, பிரிட்டனில் இவற்றின் எண்ணிக்கை இன்னும் குறைவு) அவர்கள் சாராயக் கடைகளுக்குச் சென்றும், பாமர மக்களின் சங்கங்களுக்குள்ளும் கழகங்களுக்குள்ளும் தற்செயலான கூட்டங்களினுள்ளும் ஊடுருவியும் இம்மக்களுடன் பேச வேண்டும்- மெத்தப் படித்தவர்களது (அல்லது நாடானுமன்றத்துக்குரிய) மொழியிலல்ல, அவர்களது நாடானுமன்ற "இடங்களைப் பிடிக்க" முயற்சி செய்யலாகாது, அதற்குப் பதில் மக்களைச் சிந்திக்க வைப்பதற்கே எங்கும் முயற்சி செய்ய வேண்டும், வெகுஜனங்களைப் போராட்டத்தில் இறங்கும் படிக் கவர்ந்திழுக்க வேண்டும், முதலாளித்துவ வர்க்கத்தை அதன் சொற்களைக் கொண்டே மடக்க வேண்டும், அது அமைதுள்ள ஏற்பாட்டையும் நடத்தி வரும் தேர்தல்களையும் மக்களுக்கு அது விடுத்துள்ள வேண்டுகோள்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், போல்ஷிவிசம் என்றால் என்னவென்பதை மக்களக்கு விளக்க முயல வேண்டும்- இவ்வாறு விளக்குவது (முதலாளித்துவ ஆதிக்கத்தில்) தேர்தல் காலங்கள் அல்லாத பிற காலங்களில் சாத்தியமாய் இருந்ததில்லை (பெரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற காலங்கள் மட்டும் இதற்கு விதவிலக்கு, ருஷ்யாவில் இக்காலங்களில் மக்களிடையே விரிந்த அளவில் கிளர்ச்சி நடத்துவதற்காக, தேர்தல் காலத்தில் இயங்கியதை ஒத்த அமைப்பு ஒன்று இன்னுங்கூட தீவிரமாய் இயங்கிற்று). மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இதைச் செய்வது மிகக் கடினம், மிகமிகக் கடினம். என்றாலும் இதனைச் செய்ய முடியும், செய்தே ஆகவும் வேண்டும், அருமுயற்சி இல்லாமல் கம்யூனிசத்தின் குறிக்கோள்களைச் சாதிக்க முடடியாது. மேலும் மேலும் நானாவிதமான, சமுதாய வாழ்வின் எல்லாக் கிளைகளுடனும் மேலும் மேலும் நெருங்கிய இணைப்புக் கொண்ட நடைமுறைப் பணிகளை நிறைவேற்றி, முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து ஒவ்வொரு கிளையாக, ஒவ்வொரு துறையாக கைப்பற்ற நாம் பாடுபட்டாக வேண்டும்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 46:-
"நாடாளுமன்ற - எதிர்ப்பாளர்களாகிய "இடதுசாரிகளுடனான" (இவர்கள் எந்த அரசியல் கட்சியையும் தொழிற் சங்கங்களில் பணியாற்றுவதையுத் எதிர்ப்பதால் ஒரளவுக்கு அரசியலையே எதிர்ப்பவர்களுமாவர்) இந்தப் பிளவு, "மையவாதிகளுடனான" (அதாவது, காவுத்ஸ்கிவாதிகள், லொங்கேவாதிகள், சுயேச்சையாளர்கள் முதலானோர்) பிளவைப் போலவே சர்வதேச நிகழ்ச்சிப் போக்காகிவிடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அப்படியே தான் நடைபெறட்டுமே, எப்படியும் குழப்பத்தைவிட பிளவு மேலானதே. குழப்பத்தால் கட்சியின் சித்தாந்த, தத்துவவார்த்த, புரட்சிகர வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் தடை ஏற்படுகிறது, கட்சியின் இசைவான, மெய்யாகவே ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறைப் பணிக்கு - இந்தப் பணிதான் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகரத்துக்குப் பாதையைச் செப்பணிடுகிறது - குந்தகம் உண்டாகிறது.

"இடதுசாரிகள்" தேச அளவிலும் சர்வதேச அளவிலும் தம்மை நடைமுறைச் சோதனைக்கு உட்படுத்திப் பார்க்கட்டும். கண்டிப்பான முறையில் மத்தியத்துவப்படுத்தப்பட்டு, உருக்கு உறுதி கொண்ட கட்டுப்பாடுடைய கட்சி இல்லாமல், அரசியல், கலாசாரப் பணியின் ஒவ்வொரு துறையிலும் கிளையிலும் அதன் ஒவ்வொரு வகையிலும் தலைமையாளர்களாகிவிடும் ஆற்றலின்றி, அவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்குத் தயார் செய்தும், பிறகு அதனைச் செயல்படுத்தியும் பார்க்கட்டும். நடைமுறை அனுபவம் விரைவில் அவர்களுக்குப் புத்தி புகட்டும்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 47:-
"..தோழர் பொர்டீகாவும் அவருடைய "இடதுசாரி" நண்பர்களும் டுராட்டி கோஷ்டியைப் பற்றிய அவர்களுடைய சரியான குற்றவிமர்சனத்திலிருந்து, நாடாளுமன்றத்தில் பங்கு கொள்வதே கோட்பாட்டு,= வழியில் தீங்கானதென்ற தவறான முடிவை வந்தடைகிறார்கள். இந்தக் கருத்துக்கு ஆதரவாய் ஆழமுள்ள எந்தவொரு வாதத்தையும் இம்மியளவுங்கூட இத்தாலிய "இடதுசாரிகளால்" முன்வைக்க முடியவில்லை. முதலாளித்துவ நாடாளுமன்றங்களை மெய்யாகவே புரட்சிகரமாய்க் கம்யூனிஸ்டுவழியில் பயன்படுத்திக் கொள்வதற்குரிய சர்வதேச உதாரணங்கள் அவர்களுக்குத் தெரியவேயில்லை (அல்லது அவற்றை மறந்துவிட முயலுகின்றனர்) முதலாளித்துவ நாடாளுமன்றங்களை இவ்வழியில் பயன்படுத்தியதானது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தயார் செய்வதற்கு உதவியாக இருந்தது மறுக்க முடியாததாகும். இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கான "புதிய" வழி எதனையும் அவர்களால் சிந்தித்துதப் பார்க்கக்கூட முடியவில்லை, ஆகவே போல்ஷிவிக் வழியல்லாத "பழைய" வழியைப் பற்றி முடிவின்றித் திரும்பத் திரும்பக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்"
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 48:-
"நாடாளுமன்றத்தில் பங்கு கொள்வதை "நிராகரிப்பவர்கள்" தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள்ளே முதலாளித்துவ ஜனநாயகத்தின் செல்வாக்குள் செயல்படுவதை எதிர்த்திடும் கடினமான பிரச்சினைக்கு இது போன்ற "சிக்கலற்ற", "சுலபமான", புரட்சிகரமானதென்று கூறிக் கொள்ளப்படும் முறையில் "தீர்வு கண்டு விடலாம்" என நினைப்பதில் அவர்களுடைய சிறுபிள்ளைத்தனம் தான் காணக்கிடக்கிறது. உண்மையில் அவர்கள் தமது சொந்த நிழல்களிடமிருந்து ஓடிவிட முயலுகிறார்கள், இன்னல்களைக் காண விரும்பாது கண்களை மூடுடிக் கொள்கிறார்கள், வெறும் சொற்களைக் கொண்டு இவற்றை ஒட்டிவிட எத்தனிக்கிறார்கள். மான வெட்கமற்ற படுமோசமான பதவி மோகம், நாடாளுமன்ற இடங்களை முதுலாளித்துவ வழியில் பயன்படுத்திக் கொள்ளுதல், நாடாளுமன்றச் செயலாய் மாற்றுதல், மட்டரகமான குட்டிமுதலாளித்துவப் பழமைவாதம் ஆகிய இவை யாவும் எங்கும் - தொழிலாளி வர்கக இயக்கத்துக்கு வெளியே மட்டுமின்றி அதனுள்ளும்- முதலாளித்துவத்தால் தோற்றிவிக்கப்படும் சகஜமான, பெருவழககான இயல்புகள் என்பது மறுக்க முடியாததாகும். இதே முதலாளித்துவமும் அது தோற்றுவிக்கும் முதலாளித்துவச் சுற்றுச்சார்பும் (முதலாளித்துவ வர்க்கம் கவிழ்க்கப்பட்ட பிறகுங்கூட இது மிகமிக மெதுவாகவே மறைகிறது, ஏனெனில் விவசாயிகள் இடையறாது முதலாளித்துவ வர்க்கத்தை உயிர் பெறச் செய்கிறார்கள்) செயற்பாடு, வாழ்க்கை இவற்றின் எல்லாத் துறைகளிலும் சாராம்சத்தில் இதே போன்ற முதலாளித்துவப் பதிவி மோகத்தையும் தேசியவெறிப் போக்கையும் குட்டிமுதலாளித்துவ கொச்சைத்தனத்தையும் இன்ன பிறவற்றையும் உண்டாக்குகின்றன. "
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 49:-
"சோவியத் பொறியாளர்களிடையிலும், சோவியத் பள்ளி ஆசிரியர்களிடையிலும், சலுகைகள் பெற்றுள்ள - அதாவது மிக உயர்ந்த தேர்ச்சி பெற்று மிகச் சிறந்த நிலையிலுள்ளவர்களான- சோவியத் ஆலைத் தொழிலார்களிடையிலும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறைக்குரிய தீய இயல்புகள் யாவும் இடையறாது அப்படியே புத்துயிர் பெற்றெழுவதை நாம் காண்கிறோம். இந்தத்தீமையைப் படிப்படியாகத்தான் - பாட்டாளி வாக்க நிறுவன ஒழுங்கமைப்பு, கட்டுப்பாடு இவற்றின் அடிப்படையில் நடைபெறும் அயராத, இடைவிடாத, நீண்ட போராட்டத்தைத் திரும்பவும் நடத்துவதன் மூலமே - வெற்றி கொண்டு வருகிறோம்.

முதலாளித்துவ வாக்கத்தின் ஆதிக்கத்தில் நம்முடைய, அதாவது தொழிலாளர்களுடைய கட்சியிலிருந்து, முதலாளித்துவப் பழக்க வழக்கங்களைக் களைந்திடுவது மிகவும் "கடினமானதே" முதலாளித்துவத் தப்பெண்ணங்களால் படுமோசமாய் ஊழல்படுத்தப்பட்ட வழக்கமான நாடாளுமன்றத் தலைவர்களைக் கட்சியிலிருந்து விலக்குவது "கடினமானதுதான்" முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து வரும் (சொற்பமே ஆயினும்) அத்தியாவசிய எண்ணிக்கையோரைப் பாட்டாளி வர்க்கக் கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்படியச் செய்வதும் "கடினமானதே". கம்யூனிஸ்டு நாடாளுமன்றத்தினர் முதலாளித்துவ நாடாளுமன்ற வெற்றுப் பணிகளில் ஈடுபடாது வெகுஜனங்களுக்கு இடையிலான பிரசாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு ஆகிய அவசர அவசியப் பணிகளில் கவனம் செலுத்தும்படி உறுதி செய்து கொள்வதும் "கடினமானதுதான்" இவையாவும் "கடினமானவை" என்பதில் ஐயமில்லைதான். ருஷ்வாவில் இவை கடினமானவையாகத்தான் இருந்தன, முதலாளித்துவ வர்க்கம் மேலும் பன்மடங்கு பலம் படைத்தாகவும், முதலாளித்துவ ஐனநாயகப் பாரம்பரியங்கள் மேலும் வலிமை மிக்கனவாகவும், இன்ன பிற நிலைமைகளுக்குமுரிய மேலைய ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவை மிகமிகக் கடினமானவையாகவே இருக்கும்.
..
நாடாளுமன்ற-எதிர்ப்பாளர்களும் "இடதுசாரித்" தோழர்களும் இது போன்ற ஒரு சிறிய இன்னலை இப்பொழுது சமாளிக்கத் தெரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைச் சாதிக்கும் திறனற்றவர்களாகவும் முதலாளித்துவ அறிவுத்துறையினரையும் முதலாளித்துவ ஏற்பாடுகளையும் விரிவான அளவில் கீழ்ப்படச் செய்யவும் புனரமைக்கவும் முடியாதோராயுமே இருக்க வேண்டும், அல்லது அவர்கள் அவசர அவசரமாய்த் தமது பயிற்சியை நிறைவுறச் செய்ய வேண்டியதாகி, இந்த அவசரத்தின் விளைவாய்ப் பாட்டாளி வர்க்க லட்சியத்துக்குப் பெருமளவில் தீங்கிழைப்போரும், வழக்கமானதைவிட அதிகமான தவறுகள் இழைப்போரும், சராசரி அளவைக் காட்டிலும் கூடுதலான பலவீனத்தையும் திறனின்மையையும் வெளிப்படுத்துவோருமாகவே இருக்க வேண்டுமென்று துணிந்து கூறலாம். "
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 50:-
"முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது, எனவே முதலாளித்துவ அரசியல் சுதந்திரம் நமக்குத் தேவையில்லை என்கிற பழைய நரோதியத் தத்துவத்துக்கோ அல்லது முதலாளித்துவ அரசியலிலும் முதலாளித்துவப் புரட்சியிலும் முதலாளித்துவப் பார்லிமெண்டரிசத்திலும் பாட்டாளி வாக்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதத்துக்கோ இந்த அபத்தமான கருத்து வந்து சேருகிறது.

தத்துவத்தின் நிலையிலிருந்து பார்த்தால், பண்ட உற்பத்தி அடைப்படையில் முதலாளித்துவ வளர்ச்சியின் தவிர்க்கவியலாத் தன்மை பற்றிய மார்க்சியத்தின சாதாரணமான முன்கூற்றுகளை இக்கருத்து புறக்கணிக்கிறது. பண்ட உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டும் நாகரிகமடைந்த முதலாளித்துவ நாடுகளோடு வர்த்தகத் தொடர்பு வைத்துக கொண்டும் இருக்கும்ப்டியான ஒரு சமுதாயம் தன்னுடைய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவப் பாதையில் சென்று தீர வேண்டும் என்று மார்க்சியம் நமக்குப் போதிக்கிறது. எடுத்துககாட்டாக, முதலாளித்துவத்தின் அடிப்படையிலும் கட்டுக்கோப்புக்குள்ளும் இருந்தபடியே ருஷ்பா முதலாளித்துவ வளர்தச்சியை விட்டு விலகிச் செல்ல முடியும் என்றும் முதுலாளித்துவத்தினின்று தப்பிக்க முடியும் என்றும் அல்லது வர்க்கப் போராட்ட வழி அல்லாத வேறெதாவதொரு வழியில் முதலாளித்துவ வளர்ச்சியைத் தாண்டிச் செல்ல முடியும் என்றும் கூறும் நரோதிய, அராஜகவாதப் பிதற்றிலிருந்து முறித்துக் கொண்டு மார்க்சியம் மாற்றவெண்ணா வகையிலே பிரிந்து விட்டுள்ளது......"
(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தநதிரங்கள்)