Sunday 26 August 2018

அரசியல் போராட்டத்தை நடத்துவதின் இன்றியமையாமைப் பற்றி லெனின்:-


"தொழிலாளர்கள் தடையின்றி சுதந்திரமாய்க் கூட்டங்கள் நடத்தவும் சங்கங்கள் அமைக்கவும் தமது சொந்த செய்சியேடுகளைப் பெற்றிருக்கவும் தேசியச் சட்டமன்றங்களுக்குத் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும் உரிமையுடையோராய் இருந்தாலன்றி, ஜெர்மனியிலும் ஏனை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலார்களுக்கு இருந்து வரும் இந்த உரிமைகளை உடையோராய் இருந்தாலன்றி, எந்தப் பொருளாதாரப் போராட்டமும் தொழிலாளர்களுக்கு நீடித்த மேம்பாட்டைக் கிடைக்கச் செய்யவும் முடியாது, பெரிய அளவில் நடத்தப்படவுங்கூட முடியாது. ஆனால் இந்த உரிமைகளைவென்று கொள்ள வேண்டுமாயின் அரசியல் போராட்டம் நடத்துவது இன்றியமையாததாகும்."
(நமது வேலைத்திட்டம்)

Monday 6 August 2018

மார்க்ஸ், ஜென்னி ஆகியோரைப் பற்றி மார்க்சின் இளைய மகள் எலியனோர் :-



"ஜென்னி வான் வெஸ்ட்பாலென் இருந்திராவிட்டால் காரல் மார்க்ஸ் எத்தகையவராக இருந்தாரோ அத்தகையவராக இருந்திருக்க முடியாது என்று நான் கூறும் போது எதையும் மிகைப்படுத்தவில்லை. தலைசிறந்த இரண்டு பேரின் வாழ்க்கை ஒன்றிணைந்து ஒன்றுக்கு ஒன்று அணி செய்யும் வகையில், இவ்வாழ்க்கையைப் போல எவர் வாழ்வும் இருந்ததில்லை என்று கூறத்தக்கதாய் இருந்தது. அற்புதமான அழகையும், தனது அழகுக்கு இணையான அறிவாற்றலையும் ஞானத்தையும் பெற்றிருந்த ஜென்னி வான் வெஸ்ட்பாலென் லட்சத்தில் ஒரு பெண்மணியாகத் திகழ்ந்தார்.
...
அவர்கள் இருவருக்கும் இடையில் தொழிலாளர் நல்வாழ்வு என்ற லட்சியத்தில் இருந்த பிடிப்பு எவ்வாறு பொதுவான பிணைப்பாக இருந்ததோ அதைப் போலவே அவர்களது அளவற்ற நகைச்சுவை உணாச்சியும் பலமான பிணைப்பாக இருந்தது..
..
எத்தனையோ துயரங்கள் போராட்டங்கள், ஏமாற்றங்கள் இருந்தும் அவர்கள் ஒரு மகிழ்ச்சியான ஜோடியாவர்"
(மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக்குறிப்புகள், பக்கம்-374-375)