Thursday 30 November 2017

கட்சியைத் தூய்மைப்படுத்துவதைப் பற்றி – லெனின்

(புரட்சிக்குப் பின் போல்ஷிவிக் கட்சியில் சேர்ந்த மென்ஷிவிக்களில் நூறில் தொண்ணூற்று ஒன்பது பேரிடமிருந்து கட்சியைத் தூய்மைபடுத்துவது பற்றி லெனின் 1921 ஆம் ஆண்டு எச்சரித்திருக்கிறார். இதனை முழுமையாகக் கண்காணித்து தூய்மைப்படுத்தியிருந்தால் சோவியத் யூனியன் இன்று இந்த நிலைக்கு ஆகியிருக்காது)

கட்சியைத் தூய்மைப்படுத்தும் பணி அநேகமாக கருத்தாழமுள்ள, மிக முக்கியமான பணியாக வளர்ந்து விட்டது.

முக்கியமாக அனுபவத்தையும் கட்சியைச் சாராத தொழிலாளர்களின் குறிப்புக்களையும் ஆதாரமாகக் கொண்டு அவர்களது குறிப்புக்களின் வழிநின்று கட்சியைச் சாராத வெகுஜனங்களின் பிரதிநிதிகளைக் கணக்கில் கொண்டு கட்சியைத் தூய்மைப்படுத்திய இடங்கள் உண்டு. இதுதான் மிக மதிப்புள்ளதும் மிக முக்கியமானதுமாகும். இவ்வாறக “முகஸ்துதி பார்க்காதுமேலிருந்து கீழாக கட்சியைத் தூய்மைப்படுத்த உண்மையிலேயே நம்மால் முடிந்தால் மெய்யாகவே புரட்சியின் வெற்றி மகத்தானதாயிருக்கும்.

ஏனெனில் புரட்சியின் வெற்றிகள் முன்பிருந்ததைப் போன்றே இப்போது இருக்க இயலாது. போர்க்களத்திலிருந்து பொருளாதாரக் களத்தை நோக்கிய மாறுகாலத்தைப் பொறுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையை நோக்கிய மாறுகாலத்தைப் பொறுத்தும், உழைப்பின் உற்பத்தி திறனை உயர்த்தவும் உழைப்புக் கட்டுப்பாட்டை உயர்த்தவும் முதற்கண் தேவைப்படும் சூழ்நிலைகளைப் பொறுத்தும் இவை தமது தன்மையை நிச்சயம் மாற்றிக்கொள்ளும்.

இந்தக் காலத்தில் புரட்சியின் முக்கிய வெற்றியாக உள் மேம்பாடு, பிரகாசமற்ற, கண்ணில்படாத, உடனடியாகத் தெரியாத உழைப்பு மேம்பாடு, அதன் அமைப்பின், அதன் முடிவுகளின் மேம்பாடு உள்ளது; இந்த மேம்பாடு பாட்டாளி வர்க்கத்தையும் கட்சியையும் சிதைக்கக் கூடிய குட்டிமுதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவ-அராஜகவாதக் கட்டுப்பாடற்ற சூழ்நிலையின் தாக்கத்திற்கு எதிரான போராட்டத்தைக் குறிக்கிறது. இத்தகைய மேம்பாட்டை நடைமுறையாக்க வெகுஜனங்களிடமிருந்து பிரிந்து போகுபவர்களை அகற்றி கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும் (வெகுஜனங்களின் கண்களின் முன் கட்சியை இழிவுபடுத்து பவர்களைப் பற்றிக் கூறவே வேண்டியதில்லை).

வெகுஜனங்களின் எல்லா குறிப்புக்களுக்கும் நாம் கீழ்படிய வேண்டியதில்லை என்பது உண்மையே, ஏனெனில் வெகுஜனங்கள் கூட சில நேரங்களில்-குறிப்பாக மிக அயர்ச்சியான ஆண்டுகளிலும், அபரிதமான பாரமும் வேதனையும் தரும் அளவிற்கதிகமான களைப்பேற்படும் ஆண்டுகளிலும்-சிறிதும் முற்போக்கில்லாத மனநிலைக்கு உட்படுவார்கள். ஆனால் மக்களை எடை போடுவதில், “கட்சியில் வந்து ஒட்டிக்கொண்ட”, “கட்டளையிடும் மனப்பான்மையுள்”', “அதிகார மனப்பாங் குடைய” நபர்களின் மேலான எதிர்மறையான தொடர்பில் கட்சியைச் சாராத பாட்டாளி வர்க்க வெகுஜனங்களின் குறிப்புக்களும், பல சந்தர்ப்பங்களில் கட்சியைச் சாராத விவசாயி வெகுஜனங்களின் குறிப்புக்களும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. உழைப்பாளி வெகுஜனங்கள், நேர்மையான, தங்களை அர்ப்பணித்த கம்யூனிஸ்டுகளுக்கும் நெற்றி வியர்வையை சிந்தி உணவைப் பெறும் மனிதனுக்கு, எந்தவிதமான சலுகைகளும், எந்தவிதமான ''தலைமையதிகாரிகளுக் கான வழிகளும்'' இல்லாத மனிதனுக்கு அருவருப்பை ஊட்டுபவர்களுக்கும் இடையேயுள்ள மாறுபாட்டை மிகக் கூர்மையாகப் புரிந்து கொள்கின்றர்கள்.

கட்சியைச் சாராத உழைப்பாளிகளின் கருத்துக்களைக் கணக்கில் கொண்டு கட்சியைத் தூய்மைப்படுத்துவது ஒரு மாபெரும் செயலாகும். இது நமக்குக் கருத்தாழமுடைய பயன்களைத் தரும். இது கட்சியை முன்பிருந்ததைவிட பன் மடங்கு அதிக சக்திவாய்ந்த வர்க்க முன்னணிப்படையாக, வர்க்கத்தோடு அதிக உறுதியாக தொடர்பு கொண்டுள்ள முன்னணிப்படையாக, அதை பல்வேறு இன்னல்கள், ஆபத்துகளுக்கிடையே வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் திறமை வாய்ந்ததாக செய்யும்.

கட்சியை முந்தைய மென்ஷிவிக்குகளிடமிருந்து தூய் மைபடுத்த வேண்டியதை, கட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் ஒரு தனிப்பட்ட கடமையாக நான் குறிப்பிடுவேன். எனது கருத்துப்படி 1918ஆம் ஆண்டின் ஆரம்பத்திற்குப் பிறகு கட்சியில் சேர்ந்த மென்ஷிவிக்குகளிலிருந்து, கிட்டத் தட்ட நூற்றில் ஒருவருக்கு மேற்படாத விகிதத்தில்தான் கட்சியில் வைத்திருக்க வேண்டும், அப்போது கூட அவ்வாறு தக்கவைக்கும் ஒவ்வொருவரையும் மூன்று முறை, நான்கு முறை சோதித்துப் பார்க்க வேண்டும். ஏன்? ஏனெனில் மென்ஷிவிக்குகள், ஒரு போக்கு என்ற முறையில் 1918க்கும் 1921க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தங்களது இரு குணங்களை நிரூபித்தார்கள்: முதலாவது -தொழிலாளர்கள் மத்தியில் ஒங்கியிருக்கக் கூடிய போக்குடன் கைதேர்ந்த முறையில் பழகி 'ஒட்டிக்' கொள்வது; இரண்டாவது இன்னமும் திறமையாக நம்பிக்கையோடு, உண்மையோடு வெண்படையினருக்குச் சேவை செய்வது, வார்த்தைகளால் அவர்களிடமிருந்து விலகி செயல் மூலம் உண்மையிலேயே அவர்களுக்குச் சேவை செய்வது.

இந்த இரு குணங்களுமே மென்ஷிவிக் வாதத்தின் முழு வரலாற்றில் இருந்து வெளிப்படுகிறது: அக்செல்ரோதின்தொழிலாளர் காங்கிரசையும்காடேட்டுகள் பால் (முடியாட்சியின் பாலும்) மென்ஷிவிக்குகளுக்கு வார்த்தைகளில் உள்ள உறவையும் நடைமுறையில் உள்ள தொடர்பையும், இதைப் போன்ற பல விஷயங்களையும் நினைவு கூர்வது தகும். மென்ஷிவிக்குகள் ருஷ்யாவின் கம்யூனிஸ்டுக் கட்சியுடன் 'இழைவது' மக்கியா வெல்லிசத்தினுல்" மட்டுமின்றி, ஏன், இந்த அளவிற்கு மட்டுமின்றி (பூர்ஷ்வா ராஜதந்திர நடவடிக்கைகளின் படி 1903 ஆம் ஆண்டிலிருந்தே மென் ஷிவிக்குகள் இத்துறையில் முதல் தரமான நிபுணர்கள் என்பதை நிரூபித்துள்ளார்கள்), அவர்களது 'பழக்கத் திறமையாலும்' ஆகும். எந்த ஒரு சந்தர்ப்பவாதியும் தனது பழக்கத் திறமையால் மாறுபட்டு நிற்கிறார் (ஆனல் எல்லா பழக்கத் திறமையும் சந்தர்ப்ப வாதம் ஆகாது), சந்தர்ப்பவாதிகளான மென்ஷிவிக்குகள், தொழிலாளர்கள் மத்தியில் மேலோங்கியிருக்கும் போக்கிற்கு ''கோட்பாட்டு ரீதியாக'' தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றனர், பனிக்காலத்தில் முயல் வெந்நிறமாக ஆவது போல் பாதுகாப்பு நிறத்தை மீண்டும் பூசிக்கொள்கின்றனர். மென் ஷிவிக்குகளின் இந்த தனிக்குணத்தைத் தெரிந்து அதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

இதைக் கணக்கில் கொள்வது என்றால்-ருஷ்யாவின் கம்யூனிஸ்டும் கட்சியில் 1918ஆம் ஆண்டிற்குப் பின், அதாவது போல்ஷிவிக்குகளின் வெற்றி முதலில் சாத்தியமானதாயும் பின்னர் சந்தேகத்திற்கிடமற்ற தாயும் ஆனதே அதற்குப் பின்னல், சேர்ந்த மென்ஷிவிக்குகளில் கிட்டத்தட்ட நூறில் தொண்ணூற்று ஒன்பது பேரிடமிருந்து கட்சியைத் தூய்மைபடுத்துவது என்று பொருள்.

கட்சியைப் பித்தலாட்டக்காரர்களிடமிருந்தும் அதிகாரவர்க்க மனப்பாங்கு கொண்ட, நேர்மையற்ற, உறுதியற்ற கம்யூனிஸ்டுகளிடமிருந்தும் ''முகப்பை'' மட்டும் மாற்றி விட்டு உள்ளத்தால் மென்ஷிவிக்குகளாக இருப்பவர்களிட மிருந்தும் தூய்மைபடுத்த வேண்டும்.

செப்டெம்பர் 20, 1921
(ஊழியர் பயிற்சி- தொகுப்பு நூல்)



Wednesday 29 November 2017

சோஷலிசக் கருத்துக்களை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளுதல் பற்றி லெனின்

(சோஷலிசக் கருத்துக்களை புரிந்து கொள்வதில் தொழிலாளர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார் லெனின். மேலும் முன்னணித் தொழிலாளர்களிடைய தோன்றக் கூடிய அறிவுஜீவிகளைப் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதாரப் போராட்டத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை மறப்பவர்களையும், தொழிலாளர் இயக்கத்தை அரசியல் கட்சிப் போராட்டமாக மாற்றும் அவசியத்தை மறப்பவர்களையும் கண்டிக்கிறார்)

முன்னணித் தொழிலாளர்கள்தான் சோஷலிச கருத்துக்களை மற்ற எல்லோரையும் விட முன்னதாகவும் எளிதாகவும் ஏற்றுக் கொள்கின்றர்கள் என்பதை அனைத்து நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறும் காண்பிக்கிறது. இத்தகையவர்களின் மத்தியில் இருந்துதான் எந்த ஒரு தொழிலாளர் இயக்கமும் முன்கொணரக்கூடிய தலைசிறந்த தொழிலாளர்களும், தொழிலாளர் வெகுஜனங்களின் முழு நம்பிக்கையையும் பெறக்கூடிய திறமை உள்ள தொழிலாளர்களும், பாட்டாளி வர்க்கத்திற்குக் கல்வி புகட்டி அதை ஒன்றுபடுத்தும் லட்சியத்திற்கு தங்களை முற்றிலும் அர்ப்பணிக்கும் தொழிலாளர்களும், முழு சுய உணர்வோடு சோஷலிசத்தை ஏற்று தாங்களாகவே சோஷலிச தத்துவங்களை வளர்க்கக் கூடிய தொழிலாளர்களும் வருகின்றனர்.

கற்றறிந்த சமூகம் நியாயமான, சட்ட விரோதமான இலக்கியத்தின் மேல் ஆர்வத்தை இழந்துவரும் நேரத்தில் தொழிலாளர்கள் மத்தியில் ஞானத்தின் மேலும் சோஷலிசத்தின் மேலும் தீவிரமான நாட்டம் வளர்ந்து வருகிறது; தங்களது இழிகேடான வாழ்க்கை நிலைகளையும் ஆலைகளில் தங்களது கடுமையான, இடுப்பை முறிக்கும் வேலையையும் பொருட்படுத்தாது, இடையருது தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கவும் தங்களே சுய உணர்வு மிக்க சமூக-ஜனநாயகவாதிகளாகவும்  தொழிலாளி வர்க்க அறிவுஜீவிகளாகவும்' மாற்றிக்கொள்ளவும் தேவையான குணாம்சத்தையும் இலட்சிய வேட்கையையும் தங்களிடம் வளர்த்துக் கொள்ளும் மெய்யான வீரர்கள் தொழிலாளர்கள் மத்தியில் இருந்துதான் வெளிப்படுகின்றர்கள்.
..எல்லா ருஷ்ய சமூக-ஜனநாயக வாதிகளின் ஏடாக மாறும் விருப்பமுள்ள பத்திரிகை முற்போக்குத் தொழிலாளர்களின்தரத்தில் நிற்க வேண்டும்; இப்பத்திரிகை தனது தரத்தைச் செயற்கையாகக் குறைக்கக் கூடாதது மட்டுமல்ல, மாறாக தனது தரத்தை இடையறாது வளர்க்க வேண்டும், சர்வதேச சமூக-ஜனநாயக இயக்கத்தின் எல்லா நடைமுறைத் தந்திர, அரசியல், தத்துவப் பிரச்சினைகளையும் கவனித்து வர வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் அறிவுஜீவிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்; அவர்களே ருஷ்யத் தொழிலாளர் இயக்கத்தையும் அதன் பயணுக ருஷ்யப் புரட்சிப் பணியையும் தங்களது கைகளில் எடுத்துக் கொள்வார்கள்.

எண்ணிக்கை ரீதியாகக் குறைவான முன்னணித் தொழி லாளர்களையடுத்து பரவலான நடுத்தரத் தொழிலாளர்கள் வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களும் சோஷலிசத்தை மிக்க ஆர்வத்துடன் நாடுகின்றனர், தொழிலாளர் குழுக்களில் பங்கேற்கின்றனர், சோஷலிசப் பத்திரிகைகளையும் நூல்களையும் படிக்கின்றனர், பிரச்சாரங்களில் கலந்து கொள்கின்றனர், சமூக-ஜனநாயக தொழிலாளர் இயக்கத்தின் முழுச் சுயேச்சையான தலைவர்களாக இவர்களால்  ஆக முடீயாத என்ற விதத்தில்தான் இவர்கள் முந்தையப் பிரிவினரில் இருந்து மாறுபடுகின்றனர். கட்சியின் ஏடாக இருக்கக் கூடியப் பத்திரிகையின் ஒரு சில கட்டுரைகள் நடுத்தரத் தொழிலாளிக்குப் புரியாது, சிக்கலான தத்துவ அல்லது நடைமுறை ரீதியான பிரச்சினையில் அவனுக்குப் பூரணத் தெளிவு பிறக்காது. இதனால் பத்திரிகை தனது வாசகர்களின் தரத்திற்கு இறங்கிவர வேண்டும் என்று பொருளாகாது. மாறாக பத்திரிகை அவர்களது தரத்தை உயர்த்த வேண்டும். நடுத்தரத் தொழிலாளர்களில் இருந்து முன்னணித் தொழிலாளர்களைக் கொணர உதவிபுரிய வேண்டும். அந்தந்த இடத்தின் நடைமுறை நடவடிக்கைகளில் ஊன்றிப்போய் தொழிலாளர் இயக்கத்தின் செய்திகள் மற்றும் பிரச்சார விஷயங்கள் ஆகியவைகளில் ஆர்வம் கொண்ட இத்தகையத் தொழிலாளி, தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் ருஷ்ய தொழிலாளர் இயக்கம் முழுவதைப் பற்றிய சிந்தனையுடனும் அதன் சரித்திரக் கடமை, சோஷலிசத்தின் இறுதி லட்சியம் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனைகளுடனும் இணைக்க வேண்டும்; எனவே நடுத்தர தொழிலாளர்களைப் பரவலான வாசகர்களாகக் கொண்டுள்ளப் பத்திரிகை, ஒவ்வொரு குறுகிய உள்ளூர்ப் பிரச்சினையையும்-சோஷலிசத்துடனும் அரசியல் போராட்டத்துடனும் இணைக்க வேண்டும்.

இறுதியாக, நடுத்தரப் பிரிவினரையடுத்து பாட்டாளி வர்க்கத்தின் கீழ் மட்ட பிரிவினர் வருகின்றனர். சோஷலிசப் பத்திரிகை இவர்களுக்கு முற்றிலும் அல்லது கிட்டத்தட்ட முற்றிலும் எட்டாததாயிருக்கும் என்பது முழுவதும் சாத்தியமே (மேற்கு ஐரோப்பாவில் சமூக-ஜனநாயக வாக்காளர்களின் எண்ணிக்கை சமூக-ஜனநாயக பத்திரிகை வாசகர் களின் எண்ணிக்கையைவிட எவ்வளவோ அதிகம்). ஆனால் சமூக-ஜனநாயகவாதிகளின் பத்திரிகை தொழிலாளர்களின் இயன்ற அளவு குறைவான தரத்திற்கு இறங்கிவரத்தான் வேண்டும் என்று இதிலிருந்து முடிவெடுப்பது அபத்தமாகும். இத்தகைய பிரிவினர்களுக்காக எளிமையாக எழுதப்பட்ட சிறு நூல்கள், வாய்மொழிப் பிரச்சாரம், குறிப்பாக உள்ளூர் நிகழ்ச்சிகளைப் பற்றிய துண்டுப்பிரசுரங்கள் போன்ற மற்றப் பிரச்சார வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவுதான் இதிலிருந்து பிறக்கிறது.

சமூக-ஜனநாயகவாதிகள் இதனேடு நின்றுவிடக் கூடாது; கீழ்மட்டத் தொழிலாளர்களின் மத்தியில் சுயஉணர்வு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய முதல் முயற்சிகள் சட்டபூர்வமான கல்வி புகட்டும் நடைமுறைகளோடு தொடர்பு கொண்டவைகளாக இருக்கக்கூடும் என்பது முற்றிலும் சாத்தியமே. இந்த நடவடிக்கைகளை பயன்படுத்துவதும் இவைகள் எங்கு அதிகமாகத் தேவைப்படுகின்றதோ, குறிப்பாக அங்கு அவைகளை அனுப்புவதும் சமூக-ஜனநாயக பிரச்சாரக்கர்த்தாக்கள் பின்னர் சென்று பணியாற்றத்தக்க முன்னேற்பாடுகளைச் செய்ய சட்டரீதியாக இயங்கக்கூடிய பிரதிநிதிகளை அனுப்புவதும் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். பிரச்சாரக்கர்த்தாக்களின் தனித்தன்மைகளுக்கும் அந்தந்த இடத்தின், வேலையின் விசேஷத் தன்மைகளுக்கும் மற்றவைகளுக்கும் கீழ்மட்டத் தொழிலாளர்கள் மத்தியிலான பிரச்சாரம் மிக அதிகமான இடத்தைத் தரவேண்டும்.
….
அரசியல் போராட்டத்தை நடத்தக் கூடியப் புரட்சிக் கட்சியின் தோற்றம் பிரச்சாரத்தை தடுத்துவிடும், இதை இரண்டாவது இடத்திற்குத் தள்ளிவிடும், அல்லது பிரச்சாரக்கர்த்தாக்களின் சுதந்திரத்தைப் பறித்துவிடும் என்று நினைப்பவர்களின் அச்சம் எவ்வளவு ஆதாரமற்றது என்பதை இந்தச் சொற்கள் காட்டுகின்றன. மாறாக, பரவலான பிரச்சாரத்தை நடத்தவும் பிரச்சாரக்கர்த்தாக்களுக்குத் தேவையான தலைமையையும் எல்லா அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிய தகவல்களையும் தரவும், பிரச்சாரத்தின் ஒவ்வொரு ஸ்தல வெற்றியையும் எல்லா ருஷ்யத் தொழிலாளர்களுக்காகவும் பயன்படுத்தவும் மிக வெற்றியுடன் பிரச்சாரக்கர்த்தாக்கள் எங்கெல்லாம் செயல்பட முடியுமோ, அந்த இடங்களுக்கு அனுப்பவும் ஸ்தாபன ரீதியான கட்டுக்கோப்பான கட்சியால்தான் முடியும்.

கட்டுக்கோப்பான கட்சியில்தான் பிரச்சாரத் திறமை கொண்டவர்கள் தங்களே இந்த லட்சியத்திற்கு பிரச்சாரத்தின் வெற்றிக்கும் சமூக-ஜனநாயக பணியின் மற்ற அம்சங்களின் வெற்றிக்கும்-முற்றிலும் அர்ப்பணிக்க இயலும் பொருளாதாரப் போராட்டத்தின் பின் அரசியல் பிரச்சாரத்தைப் பற்றி மறப்பவர்களும் தொழிலாளர் இயக்கத்தை அரசியல் கட்சிப் போராட்டமாக மாற்றும் அவசியத்தை மறப்பவர்களும், மற்ற எல்லாவற்றோடும் சேர்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் கீழ் மட்டத்திலுள்ளவர்களைத் தொழிலாளர் இயக்க லட்சியங்களுக்கு கவர்ந்திழுப்பதை நிலையாக, வெற்றிகரமாகச் செய்யும் வாய்ப்பைக் கூட இழக்கின்றர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

(1899ம் ஆண்டு கடைசியில் எழுதப்பட்டது)

(ருஷ்ய சமூக-ஜனநாயகத்தின் பின்வாங்கும் போக்கு-(பகுதி))
(ஊரியர் பயிற்சி- தொகுப்பு நூல்)