Monday 27 November 2017

மூலதன ஏற்றுமதி – லெனின்

“தடையில்லாப் போட்டி தனியாட்சி புரிந்த பழைய முதலாளித்துவத்தின் குறிப்பண்பாய் இருந்தது பண்டங்களின் ஏற்றுமதி, ஏகபோகங்கள் ஆட்சி புரியும் முதலாளித்துவத் தின் இன்றைய கட்டத்தின் குறிப்பண்பாய் இருப்பது மூல தனத்தின் ஏற்றுமதி.

தனது வளர்ச்சியின் உச்ச கட்டத்தை எட்டிவிட்ட பரிவர்த்தனைப் பண்ட உற்பத்திதான் முதலாளித்துவம்; இக்கட்டத்தில் உழைப்புச் சக்தியுங்கூட பரிவர்த்தனைப் பண்ட மாகிவிடுகிறது. உள்நாட்டுப் பரிவர்த்தனையின், குறிப்பாகச் சர்வதேசப் பரிவர்த்தனையின் வளர்ச்சி முதலாளித்துவத்துக் குரிய தனி இயல்பாகும். தனிப்பட்ட தொழில் நிலையங்களது. தனிப்பட்ட தொழிற் கிளைகளது, தனிப்பட்ட நாடுகளது ஏற்றத்தாழ்வான, இடையறுந்து சீரில்லா வளர்ச்சி முதலாளித்துவ அமைப்பில் தவிர்க்க முடியாததாகும். ஏனைய நாடுகளுக்கெல்லாம் முன்னதாக இங்கிலாந்து முதலாளித்துவ நாடாகிவிட்டது; பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் அது தடையில்லா வாணிபத்தை மேற்கொண்டு, ''உலகத்தின் தொழிற்கூடமாய்'' அமைந்து, எல்லா நாடுகளுக்கும் செய்பொருள்களை வழங்கும் நாடாகச் செயல்படுவதற்கு உரிமை கொண்டாடியது.

இந்தச் செய்பொருள்களைப் பெற்றுக் கொண்டு பிற நாடுகள் இவற்றுக்குப் பரிவர்த்தனையாக இங்கிலாந்துக்கு மூலப்பொருள்களை அளிக்க வேண்டி யிருந்தது. ஆனல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி இருபத்தைந்து ஆண்டுகளில், இங்கிலாந்தின் இந்த ஏகபோகத்துக்குக் குழி பறிக்கப்பட்டது; எப்படியெனில் பிற நாடுகள் "காப்பு வரிகள்'' மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ நாடுகளாக வளர்ச்சியடைந்தன. இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் புது வகைப்பட்ட ஏகபோகங்கள் நிறுவப்படக் காண்கிறோம்: முதலாவதாக, முதலாளித்துவ வழியில் வளர்ச்சியுற்ற எல்லா நாடுகளிலும் முதலாளிகளது ஏகபோகக் கூட்டுகள்; இரண்டாவதாக, மூலதனத் திரட்சி பிரம்மாண்டமான அளவுக்கு அதிகரித்துவிட்ட மிகப் பெருஞ் செல்வம் படைத்த ஒருசில நாடுகளின் ஏகபோக நிலை, முன்னேறிய நாடுகளில் மிதமிஞ்சிய அளவுக்கு ‘'உபரி மூலதனம்’’ திரண்டெழுந்துள்ளது.
…..
மூலதனத்தின் ஏற்றுமதி, எந்த நாடுகளுக்கு அது ஏற்றுமதி செய்யப்படுகிறதோ அந்நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி யின் மீது செல்வாக்கு செலுத்துகிறது, இந்த வளர்ச்சியை வெகுவாகத் துரிதப்படுத்துகிறது. ஆகவே, மூலதன ஏற்று மதியானது, மூலதன-ஏற்றுமதி நாடுகளின் வளர்ச்சியை ஒரளவுக்கு தடைப்படுத்தக் கூடும் என்ருலும், உலகெங்கும் மேலும் தொடர்ந்து முதலாளித்துவம் காணும் வளர்ச்சியை விரிவுபடுத்தியும் ஆழமாக்கியும் செல்வதன் மூலமே அது இதனைச் செய்ய முடியும்.
நிதி மூலதனம் ஏகபோகங்களது சகாப்தத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஏகபோகங்கள் ஏகபோகத்துக்குரிய கோட்பாடுகளை எங்கும் செயல்பட வைக்கின்றன; பகிரங்கச் சந்தையிலான போட்டிக்குப் பதில், லாபகரமான பேரங்களுக்காகத் "தொடர்புகள்'' பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. கொடுக்கப்படுகின்ற கடனில் ஒரு பகுதி, கடன் தருகிற நாட்டிலிருந்து பொருள்கள் வாங்குவதற்காக, குறிப்பாகப் போர்த் தளவாடங்கள் அல்லது கப்பல்கள் போன்றவற்றை வாங்குவதற்காகச் செலவிடப்பட வேண்டுமென நிபந்தனை இடுவது மிகவும் சகஜமாகிவிட்டது.
…..
மூலதன-ஏற்றுமதி நாடுகள் உலகத்தைத் தம்மிடையே பங்கிடப்பட்டுவிட்டதா உருவக முறையில் கூறலாம். ஆனல் நிதி மூலதனம் மெய் நடப்பில் உலகம் பங்கீடு செய்யப்படுவதற்கு வகை செய்திருக்கிறது.

(ஏகாதிபத்தயம்- முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்)

No comments:

Post a Comment