Wednesday 29 November 2017

டூமா தேர்தல்களில் முதலாளித்துவக் கட்சிகளின் போக்கும் தொழிலாளர் கட்சியின் போக்கும் (பகுதி) – லெனின்

(ருஷ்ய நாடாளுமன்ற வடிவமான டூமா தேர்தல்களில் முதலாளித்துவக் கட்சியின் போக்குக்கும், தொழிலாளர் கட்சியின் போக்குக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை லெனின் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக நாடாளுமன்றத்தில் இடங்கள் பெறுவது நமக்கு முக்கியமல்ல, மாறாக, நாடாளுமன்றத்தில் பெற்ற இடங்களைக் கொண்டு வெகுஜனங்களுடைய அரசியல் உணர்வை உயர்த்த உதவிட வேண்டும் என்கிறார்.)

“அரசாங்கத்தை ஆதரிக்காதோர் அனைவரும் வாக்காளர் வெகுஜனங்களையே தமது நம்பிக்கைக்கு ஆதாரமாய்க் கொண்டுள்ளனர். ஆனால் வெகுஜனங்களிடம் வைக்கப்பட்டிருக்கும் இந்த நம்பிக்கையின் உண்மை சொரூபம் என்ன, பல்வேறு கட்சிகளும் வெகுஜனங்களிடம் கொண்டுள்ள போக்கு என்ன என்பதைக் கவனமாய் ஆராய்ந்தால், முதலாளித்துவக் கட்சிகளுக்கும் பாட்டாளி வர்க்கக் கட்சிக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாட்டை நீங்கள் காண்பீர்கள்.

காடேட்டுகள் மிதவாத-முதலாளித்துவக் கட்சிகளின் தலைமையில் உள்ளனர். முதலாவது டூமாவுக்குத் தேர்தல்கள் நடைபெற்றபோது இவர்கள் மானவெட்கமின்றி துரோகமிழைத்துப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தனர், புறக்கணிப்பில் பங்கு கொள்ள மறுத்துவிட்டனர். அடக்க ஒடுக்கமாய் இவர்கள் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டதோடு அனுபவமில்லாத வெகுஜனங்களையும் தம் பின்னல் அழைத்துச் சென்றனர். இப்பொழுது இவர்கள் இந்த வெகுஜனங்களின் ஊக்கமில்லாத மனப்பான்மையையும், கிளர்ச்சியின் மீதும் இடதுசாரிக் கட்சிகளின் தேர்தல் இயக்கத்தின் மீதும் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுகளையும் தம் நம்பிக்கைக்கு ஆதாரமாய்க் கொள்கின்றனர்.

வெகுஜனங்களிடம் காடேட்டுக்குள்ள நம்பிக்கை வெகுஜனங்களது முதிர்ச்சியின்மையிலும் அடிமை வாழ்விலுமான நம்பிக்கையே ஆகும். அவருடைய வாதம் இதுதான்:- வெகுஜனங்கள் எங்களுடைய வேலைத்திட்டத்தையும் போர்த்தந்திரத்தையும் புரிந்து கொள்ளப் போவதில்லை, சமாதான வழியிலான, சட்ட வழியிலான, மிக மிக அமைதியான, இலேசான கண்டனம் தெரிவிப்பதற்குமேல் அவர்கள் போக மாட்டார்கள்-போக விருப்பமில்லை என்பதால் அல்ல, அதற்குமேல் போக அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதால், எங்களுக்குத்தான் அவர்கள் வாக்களிப்பார்கள். ஏனெனில் இடதுசாரிகளிடம் செய்தியேடுகள் இல்லை, அவர்கள் கூட்டங்கள் நடத்தவோ துண்டுப் பிரசுரங்கள் போடவோ முடியாது, சட்டத்திற்குப் புறம்பான முறை யில் கைது செய்யப்படுவதிலிருந்தும் அடக்குமுறைக்கு இரையாவதிலிருந்தும் அவர்களுக்குப் பரதுகாப்பு ஏதுமில்லை.

இது வேதான் காடேட்டின் நினைப்பு. ஆகவே அவர் பெருமையாய் விண்ணுலகை நோக்கிப் பார்வையை உயர்த்தியவாறு கூறுகிரறார்: தேவனே, வாழ்க நீ! நான் அந்த 'தீவிரவாதிகளில்" ஒருவனாய் இல்லாததற்காக உனக்கு என் நன்றி! நான் புரட்சியாளன் அல்ல, அரசு நடவடிக்கை எதற்கும் நான் தண்டமிட்டுக் கீழ்ப்படிந்து தக்கபடி நடந்து கொள்ளும் வல்லமை படைத்தவன். தேர்தல் மனுக்களை சமாதானப் புனரமைப் பாளர்கள் இடமிருந்துகூடப் பெறக் கூடியவன்.

எனவே, காடேட்டுகளின் தேர்தல் இயக்கம் அனைத்துமே கறுப்பு நூற்றுவரால் எழும் அபாயத்தையும் தீவிர இடது சாரிக் கட்சிகளால் ஏற்படும் அபாயத்தையும் காட்டி வெகு ஜனங்களைப் பீதியுறச் செய்வதையும், குட்டிபூர்ஷ்வாவின் அற்பவாதத்துக்கும் கோழைத்தனத்துக்கும் தளர்ச்சிக்கும் இவ்வியக்கத்தைத் தகவமைத்துக் கொள்ளுதலையும், காடேட்டுகள்தான் மிகவும் நம்பத்தகுந்த பணிவன்புடைய மிதவாதப் பண்பு மிக்க நன்னடத்தையுடையோரென இந்த அற்பவாதக் குட்டி பூர்ஷ்வாவுக்கு அறிவுறுத்துவதையும் நோக்கமாய்க் கொண்டுள்ளது.
அரசியல் உணர்வு பெறும்படி வெகுஜனங்களுக்கு அறிவொளி அளிக்க வேண்டாம், வெகுஜனங்களைத் தட்டியெழுப்ப எந்தக் கிளர்ச்சியும் வேண்டாம், முரணற்ற ஜனநாயகக் கோஷங்களை முன்வைத்து விளக்க வேண்டாம், பீதியுற்ற குட்டிபூர்ஷ்வா அற்பவாதிகளின் முதுகுக்குப் பின்னுல் சட்டமன்ற இடங்களுக்காகப் பேரம் நடத்தினால் போதும் இதுவேதான் கட்சிசார்பில்லாத மக்கள் (தவாரிஷினுடையது) முதல் ஜனநாயகச் சீர்திருத்தக் கட்சி வரையிலான மிதவாத முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் யாவும் நடத்தும் தேர்தல் இயக்கம்.

வெகுஜனங்களிடம் தொழிலாளர் கட்சி கொண்டுள்ள போக்கு இதற்கு நேர் மாமுனதாகும். பேரங்களின் மூலம் டூமாவில் இடங்கள் பெறுவது நமக்கு முக்கியமானதல்ல. மாறாக, டூமாவில் பெறும் இடங்கள் வெகுஜனங்களுடைய அரசியல் உணர்வை உயர்த்த உதவுவதால்தான், அந்த அளவுக்குத்தான், அவை முக்கியமானவை. வெகுஜனங்களை மேலும் உயர்வான அரசியல் உயர்வு நிலைக்கு உயர்த்துவதற்கு, அவர்களை ஒழுங்கமைப்பதற்கு-அற்பவாதக் குட்டி பூர்ஷாவா அர்த்தத்தில் நல்வாழ்வுக்காகவும், 'அமைதிக்காகவும்", 'ஒழுங்குக்காகவும்', ' சமாதான (முதலாளித்துவ) இன்ப நிலைக்காகவும்" அல்ல, போராட்டத்துக்காக, எல்லா விதச்சுரண்டலிலிருந்தும் எல்லாவித ஒடுக்குமுறையிலிருந்தும் உழைப்பு முழுநிறை விடுதலை பெறுவதற்கான போராட்டத்துக்காக இதைச் செய்ய வேண்டியிருக்கிறது-டூமாவிலான இடங்கள் நமக்கு முக்கியத்துவமுடையவை.

இதற்காக மட்டுமே, இதைச் சாதிக்க எந்த அளவுக்கு அவை நமக்கு உதவுகின்றனவோ அந்த அளவுக்கு மட்டுமே, டூமாவில் இடங்களும், தேர்தல் இயக்கம் அனைத்தும் நமக்கு முக்கியத்துவ முடையவை-தொழிலாளுர் கட்சி தனது நம்பிக்கை அனைத்துத்கும் வெகுஜனங்களையே ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது. இந்த வெகுஜனங்கள் பீதியுற்றவர்கள் அல்ல, செயலற்றோராய்ப் பணிந்து விடுகிறவர்கள் அல்ல, பணிவுடன் ஒடுக்கு முறையை ஏற்றுக் கொள்வோர் அல்ல; இவர்கள் அரசியல் உணர்வு படைத்தவர்கள், எதிர்த்துக் கேட்பவர்கள், போர்க் குணம் கொண்டவர்கள். கறுப்பு நூற்றுவர் அபாயமென்று பூச்சாண்டி காட்டிக் குட்டிபூர்ஷாவா அற்பர்களைப் பீதியுறச் செய்யும் வழக்கமான மிதவாத முறையினைத் தொழிலாளர் கட்சி அருவருப்புடன் நிராகரிக்க வேண்டும். வெகுஜனங்களை மெய்யான அபாயம் குறித்து, போராட்டத்தின் உண்மை நோக்கங்கள் குறித்து-டூமாவைத் தமது பலத்தின் இருப்பிடமாய்க் கொள்ளாமல், டூமா விவாதங்களில் முழு அளவுக்கு வெளியீடாகாமல், டூமாவுக்கு வெளியிலேதான் ருஷ்யாவின் ஏதிர்காலத்தை முடிவு செய்யப் போகின்ற அந்த சக்திகளுடைய போராட்டத்தின் உண்மை நோக்கங்கள் குறித்து-உணர்வு பெறச் செய்வதில்தான் சமூக-ஜனநாயக வாதிகளது பணி அடங்கியிருக்கிறது.

ஆகவே தொழிலாளர் கட்சி காடேட்டுகளான முதலாளிகளினுடைய இரகசியத் தேர்தல் தந்திரங்கள் குறித்து, கறுப்பு நூற்றுவர் அபாயத்துக்கு எதிராய்ப் போராடும் பணியை வழக்கறிஞர்களும் பேராசிரியர்களும் அறிவொளி படைத்த நிலப் பிரபுக்களுமாகிய எங்களிடம் ஒப்படையுங்கள் என்று அரசியல் உணர்வினைப் பாழ்படுத்தும் முறையில் இவர்கள் எழுப்பும் கூச்சல் குறித்து வெகுஜனங்களை எச்சரிக்கை செய்கிறது.

தொழிலாளர் கட்சி வெகுஜனங்களிடம் கூறுவதாவது:- உங்களுடைய சோஷலிச ஒழுங்கமைப்பையுமே நீங்கள் நம்பிச் செயல்பட வேண்டும். போராட்டத்தில் முதன்மை நிலையையும் போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் உரிமையையும் மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தாரிடம் ஒப்படைப்பதானது, சுதந்திர இலட்சியத்தை நாடக பாணியிலான சொல்லடுக்குகளுக்காக, புது மோஸ்தரில் அமைந்து கண்ணைப் பறிக்கும் விளம்பர ஜோடனைகளின் போலி மினுக்குக்காக விற்பதற்கே ஒப்பாகும். கண்ணை மூடிக் கொண்டு மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினரையும் அதன் கோஷங்களையும் வேட்பாளர் பட்டியல்களையும் கொள்கையையும் பின்பற்றும் வெகுஜனங்களின் அரசியல் உணர்வு பாழ்படுத்தப்படுவதைக் காட்டி லும் ஒரு பெருங் கேடு டூமாவில் கறுப்பு நூற்றுவரால் எழக் கூடிய எந்த அபாயத்தாலும் ஏற்பட்டுவிட முடியாது.

தொழிலாளர் கட்சி அறைகூவி அழைக்கும் வெகுஜனங்களில் விவசாயிகளும் பல்வேறு குட்டிபூர்ஷ்வாப் பகுதிகளைச் சேர்ந்தோரும்தான் எண்ணிக்கையில் அதிகமானோர். இவர்கள் காடேட்டுகளைக் காட்டிலும் உறுதியும் நேர்மையும் கொண்டவர்கள், காடேட்டுகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகம் போராடக்கூடியவர்கள். ஆனால் அரசியலில் அடிக்கடி இவர்கள் காடேட்டு வாய்வீச்சுக்காரர்களின் பின்னால் சென்றுவிடுகிறார்கள். இப்பொழுதுங்கூட இவர்கள் போர்க்குணம் படைத்த பாட்டாளி வர்க்கத்துக்கும் சமரசவாத முதலாளித்துவ வர்க்கத்தினருக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஓட்டாண்டிகளாய் வறுமையுற்று நிர்க்கதியாகி வரும் நகரப்புறக் குட்டிபூர்ஷ்வாக்களும் மற்றும் விவசாயிகளுமான வெகுஜனங்களை மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினரின் கருத்துக்கள், தப்பெண்ணங்களது செல்வாக்கிலிருந்து விடுவிப்பது தொழிலாளர் கட்சியின் முன்னுள்ள மற்றொரு பெரிய கடமையாகும். காடேட்டுகளுடன் கூட்டணிகளை ஆதரிப்போர் இந்தக் கடமையின் நிறைவேற்றத்துக்கும் தடங்கலாகி விடுகின்றனர். விவசாயிகளே, இவர்கள் மிதவாதிகளிடமிருந்து பிரிந்து வரச் செய்யவில்லை; சுதந்திர இலட்சியத்துக்கும் பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்கும் நாசம் உண்டாக்கும், இயற்கைக்கு விரோதமான இந்த இணைப்பை வலுவடையவே செய்கின்றனர். மிதவாதிகளது புழைக்கடை அரசியலை எதிர்த்து (அல்லது இன்னும் சரியாய்ச் சொல்வ தெனில் டூமாவில் இடங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அவர்கள் செய்யும் அரசியல் சூழ்ச்சியை எதிர்த்து) விவசாயி வெகுஜனங்களை எச்சரிக்கை செய்யவில்லை; அதில் பங்குகொள்வதன் மூலம் இந்த சூழ்ச்சிக்கு அங்கீகாரமே அளிக்கின்றனர்.

இந்தக் கூட்டணிகள் யாவும் ஒழிக! தொழிலாளர் கட்சி சொல்லில் மட்டுமின்றி செயலிலும் சுயேச்சையாய்த் தனது தேர்தல் இயக்கத்தை நடத்த வேண்டும். சித்தாந்தத்திலிருந்து பிறழாது துணிவுடனும் முரணின்றியும் விமர்சிப்பதில் அது மக்கள் அனைவருக்கும் மற்றும் குறிப்பாய்ப் பாட்டாளி வர்க்க வெகுஜனங்களுக்கும் முன்மாதிரியாய்த் திகழ வேண்டும். இவ்வழியிலேதான், இவ்வழியில் மட்டுமேதான் நாம் வெகுஜனங்களை சுதந்திரப் போராட்டத்தில்-சுதந்திரத்துக்குத் துரோகம் புரியும் காடேட்டுகளுடைய விளையாட்டு மிதவாதத்தில் அல்ல-பயனுள்ள முறையில் பங்கு கொள்ள ஒன்று திரட்டுவதில் வெற்றி பெறுவோம்.”

1906 டிசம்பர் 31

(வெகுஜனங்களிடையே கட்சியின் பணி – தொகுப்பு நூல்)

No comments:

Post a Comment