Monday 19 December 2016

அரசியல் சுதந்திரம் பற்றி லெனின்

சமூக ஜனநாயகவாதிகளின் (கம்யூனிஸ்டுகளின்) முதல் கோரிக்கையும் முதன்மையான கோரிக்கையும் அதுதான். “அரசியல் சுதந்திரம் வேண்டும்என்று அவர்கள் எழுப்பும் முதல் கோரிக்கையின் பொருள் இது தான்:-
அரசியல் சுதந்திரம், நாடாளுமன்றத்துக்கு சுதந்திரமான தேர்தல், கூட்டம்கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மட்டும் உழைக்கும் மக்களை அவர்கள் சந்திக்கும் வறுமையில் இருந்தும், அடங்கு முறையில் இருந்தும் உடனடியாக விடுவித்து விடாது என்பதை நாம் அறிவோம். பணக்காரர்களின லாபத்துக்காக வேலை செய்ய வேண்டிய சுமையில் இருந்து நகர்ப்புற ஏழைகளையும், கிராமப்புற ஏழைகளையும் விடுவிக்கக்கூடிய உடனடியான சாத்தியக் கூறுகள் அவற்றுக்கு இல்லை என்பது உண்மையே. உழைக்கும் மக்கள் தங்கள் மீதுதான் நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும். வேறு எவரையும் நம்பியிருக்க முடியாது. உழைப்பாளி தன்னைத் தானே வறுமை நிலையில் இருந்து விடுவித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு எவறும் அவனை விடுவிக்க மாட்டார்கள். அவ்வாறு உழைப்பாளிகள் தங்களைத் தாங்களே விடுவித்துக கொள்ள வேண்டுமானால் ருஷ்யாவிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே சங்கமாக ஒரே கட்சியாக ஒன்றுபட வேண்டும். சர்வாதிகார போலீஸ் ஆட்சி, கூட்டங்களுக்கு தடை விதித்தது என்றால், உழைப்பாளிகளின் பத்திரிகைகளுக்கு தடை வித்தது என்றால், உழைப்பாளர்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்க தடை விதித்து என்றால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுபட முடியாது. உழைப்பாளிகள் ஒன்றுபட வேண்டுமானால் அனைத்து விதமான சங்கங்கள் அமைக்கும் உரிமை அவர்களுக்கு வேண்டும். ஒன்றுபடுவதற்கான உரிமை வேண்டும். அரசியல் சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

அரசியல் சுதந்திரம் உடனடியாக தொழிலாளர்களை அவர்களின் வறுமை நிலையில் இருந்து விடுவிக்காது என்பது சரிதான். ஆனால் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஆயுதத்தை அரசியல் சுதந்திரம் உழைப்பாளிகளுக்கு அளிக்கும். வறுமையை எதிர்த்துப் போராட உழைப்பாளிகளின் ஒற்றுமைதான ஒரே வழி. வேறுவழி எதுவும் இல்லை, இருக்கவும் முடியாது. அரசியல் சுதந்திரம் இல்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுபடுதல் சாத்தியமானதாக இருக்காது.”
கிராமப்புற ஏழைகளுக்கு - பக்கம்21-22

Sunday 18 December 2016

அடித்தளத்தின் தீர்மானகர பாத்திரமும் மேற்கட்டமைப்பின் தாக்கமும் பற்றி மார்க்ஸ்:-

ஊதியமிலா உபரி-உழைப்பு நேரடி உற்பத்தியாளர்களிடம் இருந்து கறக்கப்படுவதற்கு பயன்படும் பிரத்தியேகமான பொருளாதார வடிவம்தான், ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்குமான உறவு முறையைத் தீர்மானிக்கிறது, ஏனென்றால் இந்த உறவு முறை நேரடியாக பொருளுற்பத்தியில் இருந்தே விளைவதும் அதனை நிர்ணயிக்கும் கூறுகளில் ஒன்றாகி அதன் மீது எதிர்வினை புரிவதுமாகும். உள்ளபடியான உற்பத்தி உறவுகளில் இருந்து எழுகிற பொருளாதாரச் சமூகத்தின் அமைப்பு முறை அனைத்தும், பிரத்தியேகமான அரசியல் வடிவமும் கூட இந்த உறவு முறையையே அடித்தளமாய் கொண்டுள்ளது. எப்போதுமே உற்பத்திச் சாதன உடைமையாளர்களுக்கும் நேரடி உற்பத்தியாளர்களுக்குமான நேரடி உறவு முறைதான்- இயல்பாகவே எப்போதும் உழைப்பு முறையின் வளர்ச்சியில் குறிப்பிட்ட ஒரு கட்டத்துக்கும், எனவே அதன் சமூக உற்பத்தித் திறனுக்கும் ஏற்ப அமைகிற இந்த உறவுமுறைதான் சமூகக்கட்டமைப்பு அனைத்தின் உள் இரகசியத்தை அதில் மறைந்து இருக்கும் அடிப்படையை வெளிப்படுத்துகிறது, அதோடு இறைமைக்கும் சார்பு நிலைக்குமான உறவின் அரசியல் வடிவத்தை, சுருங்கச் சொல்லின் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் உரிய பிரத்தியேகமான அரசு வடிவத்தை வெளிப்படுத்துகிறது.

ஒரே பொருளாதார அடிப்படைமுக்கிய நிலைமைகளின் கண்ணோட்டத்தில் ஒரே பொருளாதார அடிப்படையாக இருப்பது எண்ணற்ற வெவ்வேறு அனுபவச் சூழல்களின் விளைவாக, இயற்கை நிலைமைகள், மரபினஉறவுகள், புறத்திருந்தான வரலாற்றுத் தாக்கங்கள் (external historical influences) முதலானவற்றின் விளைவாக தோற்றத்தில் எல்லையற்ற பல மாற்றங்களையும் படிநிலைமைகளையும் வெளிப்படுத்துவதற்கு இது தடையாவதில்லை, இந்தப் பல்வேறுபட்ட மாற்றங்களையும் பகுத்தாராய்வதன் மூலமே புரிந்து கொள்ளமுடியும்.”
(மூலதனம் பாகம் -3 -பக்கம்- 1124-1125)


Karl Marx:-
 “The specific economic form, in which unpaid surplus-labour is pumped out of direct producers, determines the relationship of rulers and ruled, as it grows directly out of production itself and, in turn, reacts upon it as a determining element. Upon this, however, is founded the entire formation of the economic community which grows up out of the production relations themselves, thereby simultaneously its specific political form. It is always the direct relationship of the owners of the conditions of production to the direct producers – a relation always naturally corresponding to a definite stage in the development of the methods of labour and thereby its social productivity – which reveals the innermost secret, the hidden basis of the entire social structure and with it the political form of the relation of sovereignty and dependence, in short, the corresponding specific form of the state. This does not prevent the same economic basis – the same from the standpoint of its main conditions – due to innumerable different empirical circumstances, natural environment, racial relations, external historical influences, etc. from showing infinite variations and gradations in appearance, which can be ascertained only by analysis of the empirically given circumstances.”
(Capital - Volume III)