Tuesday 28 May 2019

சரக்குகள் என்றால் என்ன? -எங்கெல்ஸ்


“சரக்குகள் என்றால் என்ன? ஏறத்தாழ வெவ்வேறான தனியார் உற்பத்தியாளர்களின் சமூதாயத்தில் செய்யப்பட்ட பொருள்களே. எனவே, முதன்முதலாகத் தனியார் பொருள்களாகும். எனினும் இந்தத் தனியார் பொருள்கள், அவை தமது உற்பத்தியாளர்களின் நுகர்வுக்காக அன்றி மற்றவர்களின் நுகர்வுக்காக அதாவது சமூக நுகர்வுக்காகச் செய்யப்படும் பொழுது சரக்குகளாகின்றன; அவை பரிவர்த்தனை மூலம் சமுதாய நுகர்வுக்குள் பிரவேசிக்கின்றன. எனவே இவ்வாறு சமூகரீதியில் இடைத் தொடர்பு கொண்டுள்ள தனியார் உற்பத்தியாளர்கள் ஒரு சமூகமாக அமைகிறார்கள். எனவே, அவர்களது உற்பத்திப் பொருள்கள், ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் தனியார் பொருள்களாக இருந்த போதிலும் அதே சமயம், ஆனால் எண்ணிச் செய்யப்படாமலே, தானாகவே இயல்வது போன்று, சமுதாய உற்பத்திப் பொருள்களாயும் இருக்கின்றன.

அப்படியானால் இந்தத் தனியார் உற்பத்திப் பொருள்களின் சமுதாயத் தன்மை எதில் அடங்கியுள்ளது? இரண்டு பிரத்தியேகத் தன்மைகளில் என்பது கண்கூடு: முதலாவதாக அவையாவும் ஏதானும் மனிதத் தேவைகளை நிறைவு செய்கின்றன, உற்பத்தியாளர்களுக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் பயன்மதிப்புடையதாய் இருக்கின்றன; இரண்டாவதாக, அவை மிகவும் பல்வகைப்பட்டதான தனிநபர் உழைப்பின் உற்பத்திப் பொருள்களாக இருந்தபோதிலும் அவை அதே சமயம் மனித உழைப்பின் பொருள்கள் என்ற முறையில், பொதுவான மனித உழைப்பின் உற்பத்திப் பொருள்களாகும்.”
(டூரிங்குக்கு மறுப்பு- 3.சோஷலிசம்- 4.வினியோகம்)