Friday 29 December 2017

7. போராடத் துணியுங்கள்! வெற்றி பெறத் துணியுங்கள்! - மா சே துங்

“உலக மக்களே, ஒன்றுபட்டு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களையும், அவர்களது அடிவருடிகளையும் தோற்கடியுங்கள்! உலக மக்களே, அஞ்சாமல் இருநது, துணிந்து போராடி, இன்னல்களைத் துச்சமாக மதித்து, அலையலையாக முன்னேறுங்கள்! அப்பொழுது உலகம் முழுவதும் மக்களுக்கே உரியதாகும். அனைத்து அரக்கர்களும் ஓழிக்கப்படுவர்.”
(அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான (லி) காங்கே மக்களை
ஆதரிக்கும் அறிக்கை – 28 நவம்வர் 1964)

“சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய – லெனினிய அறிவியலின் அடிப்படையில் சர்வதேசிய, தேசிய நிலைமைகளை தெளிந்த சிந்தனையுடன் மதிப்பீடு செய்து, எல்லா உள்நாட்டு வெளிநாட்டு பிற்போக்குவாதிகளின் தாக்குதல்களும் தோற்கடிக்கப்பட வேண்டும். தோற்கடிக்கப்படவும் முடியும் என்பதை உணர்ந்து கொண்டது. வானத்தில் கருமுகில்கள் தோன்றிய போது, இவை தற்காலிகமானவையே, இருள் விரைவில் நீங்கும், சூரியன் இதோ தோன்றுவான் என்று நாம் சுட்டிக்காட்டினோம்.”
(இன்றைய நிலைமையும் நமது கடமைகளும் – 25 டிசம்பர் 1947)

“நமது சொந்த விருப்பத்தைப் பொறுத்தவரை, நாம் ஒரு நாள் கூட போரிட விரும்பவில்லை. ஆனால் சூழ்நிலைகள் நம்மைப் போரிடும்படி நிர்பந்தித்தால், நம்மால் இறுதிவரை போரிட முடியும்.”
(அமெரிக் நிருபர் அன்னா லூயிஸ் ஸ்ட்ராங்கடன்
நிகழ்த்திய உரையாடல் – ஆகஸ்ட் 1940)

“நாம் சமாதானத்தை விரும்புகிறோம். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் செருக்கான, அநியாயமான கோரிக்கைகளையும், ஆக்கிரமிப்பை விரிவாக்கும் சூழ்ச்சிகளையும் கைவிடாதவரையில் சீனா ஒரே ஒரு உறுதிப்பாடு கொரிய மக்களுடன் ஒன்றாக நின்று, தொடர்ந்தும் போரிடுவதாகும். இதற்குக் காரணம் நாம் யுத்தப் பிரியர் என்பதல்ல, நாம் யுத்தத்தை உடனடியாக நிறுத்த, எஞ்சிய பிரச்சினைகளுக்குப் பின்னர் தீர்வுகான விரும்புகின்றோம். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அப்படியென்றால் சரி, போர் நடக்கட்டும், அமெரிக்க ஏகாதிபத்தியம் எத்தனை ஆண்டுகள் போரிட விரும்பினாலும், நாமும் அத்தனை ஆண்டுகள் போரிடத் தயாராய் இருக்கிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியம் போரை நிறுத்த விரும்பும் காலம்வரை, சீன-கொரிய மக்கள் முழு வெற்றி பெரும்வரை நாம் போரிடத் தயாராய் இருக்கின்றோம்.”
(சீன மக்கள் அரசியல் கலந்தாலோசனை மாநாட்டின்
1வது தேசிய கமிட்டியின் 4வது கூட்டத்து உரை – 7 பிப்பரவரி - 1953)

“நம் மத்தியிலுளள பலவீனமான சிந்தனை எல்லாவற்றையும் நாம் நீக்க வேண்டும். எதிரியின் பலத்தை அதிகப்படியாக மதிப்பது. மக்களின் பலத்தை குறைத்து மதிப்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் தவறானவை”
(இன்றைய நிலைமையும் நமது கடமைகளும் – 25 டிசம்பர் 1947)






No comments:

Post a Comment