Monday 4 December 2017

''இடதுசாரி'' கம்யூனிஸ்டுகள் போல்ஷிவிக்களைப் புகழ்ந்து பேசுவதைக் குறைத்துக் கொண்டு ருஷ்ய அனுபவத்தை கணக்கில் கொள்ளுங்கள் என்று லெனின் கூறுகிறார்.

முதலாளித்துவ நாடாளுமன்றங்களையும் இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்தே ஆகவேண்டும்; ஏனெனில் பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு வேலை செய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்.

….''இடதுசாரி'' கம்யூனிஸ்டுகள் போல்ஷிவிக்குகளாகிய எங்களைப் புகழ்ந்து நிறையவே பேசுகிறார்கள். எங்களைப் புகழ்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, போல்ஷிவிக்குகளுடைய போர்த்தந்திரத்தை மேலும் நன்கு தெரிந்து கொள்ள முயலுங்கள் என்பதாக அவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்று சில நேரங்களில் தோன்றுகிறது. ருஷ்ய முதலாளித்துவ நாடாளுமன்றமான அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில், 1917 செப்டம் பர்-நவம்பரில், நாங்கள் பங்கெடுத்துக் கொண்டோம். எங்களுடைய போர்த்தந்திரம் சரியா, தவரறா? சரியல்ல என்றால், இதனைத் தெளிவாக எடுத்துரைத்து நிரூபிக்க வேண்டும்; சர்வதேசக் கம்யூனிசத்தின் பிழையற்ற போர்த்தந்திரத்தை வகுத்து உருவாக்குவதற்கு இது அவசியமாகும். அது சரியானதே என்றால், இதிலிருந்து சில முடிவுகளைக் கிரகித்துக் கொண்டாக வேண்டும். ருஷ்யாவின் நிலைமைகளும் மேற்கு ஐரோப்பாவின் நிலைமைகளும் ஒன்றெனக் கொள்ளலாகாது என்பது உண்மையே. ஆனால் ''நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது'' என்ற நிர்ணயிப்பின் பொருள் பற்றிய இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையைப் பொறுத்தவரை, எங்களுடைய அனுபவத்தைத் தக்கபடி கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும்.”

(“இடதுசாரி” கம்யூனிசம்-இளம் பருவக்கோளாறு)

No comments:

Post a Comment