Monday 11 December 2017

பண்ட் அமைப்பும் அதன் தேசியமும் பிரிவினைவாதமும் பற்றி ஸ்டாலின்

“யூதத் தன்மை பொருந்திய அனைத்தையும் பாதுகாத்தல் யூதத் தேசிய இனத்தின் அனைத்துத் தனித் தன்மைகளையும், அவை பாட்டாளி வர்க்கத்திற்கு தீமைபயக்கும் என்றால்கூட அவற்றைப் பாதுகாத்தல், யூதத்தன்மை இல்லாத அனைத்திலிருந்தும் யூதர்களை பிரித்து வைத்தல், மருத்துவமனைகள்கூட யூதர்களுக்கென் -தனியாக வேண்டும் என்று சொல்லல் - இந்த அளவுக்கு பண்ட் அமைப்பினர் இறங்கிவிட்டனர்.

பண்ட் அமைப்பினர் சோசலிசத்துக்கு மாற்றாக தேசியவாதத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று தோழர் பிளக்கனோவ் மிகச் சரியாகச் சொன்னார். ஆனால் வி. கோஸ்ஸோவ்ஸ்கி போன்ற பண்ட் தலைவர்கள் பிளக்கானோவை மக்களைக் கவர்வதற்காக பேசும் கவர்ச்சிப் பேச்சாளன் என்று கொச்சைப்படுத்திக் குறை கூறினர். ஆனால் பண்ட் அமைப்பின் நடவடிக்கைகளை நன்றாக அறிந்தவர்கள் எவ்வாறு பண்ட் அமைப்பினர் தங்களைப் பற்றிய உண்மைகளை ஒத்துக்கொள்ள அஞ்சுகின்றனர் என்றும், கவர்ச்சிப் பேச்சாளன் என்று வேகமாக குற்றம் சுமத்தும் சொற்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிவார்கள்.

தேசியப் பிரச்சனை குறித்து இது போன்ற நிலையை பண்ட் அமைப்பு எடுத்ததன் காரணமாக, அமைப்பு விஷயத்திலும் அதே நிலையை மேற்கொண்டது. அதாவது, யூதத் தொழிலாளர்களை பிரித்துவைக்கும் பாதையை சமூக-ஜனநாயகத்துக்குள்ளே தேசிய இன அளவிலான பிரிப்பை உருவாக்கும் பாதையை மேற்கொண்டது. தேசியத் தன்னாட்சி குறித்து அவர்கள் தத்துவம் இப்படித் தான் இருந்தது.

உண்மையில் பண்ட் அமைப்பானது ஏகபோக பிரதிநிதித்துவம் என்ற கோட்பாட்டிலிருந்து "தேசிய ரீதியாக தொழி லாளர்களைப் பகுத்தல்'' என்ற கோட்பாட்டிற்கு மாறியது. ரஷ்ய சமூக-ஜனநாயகமானது தன்னுடையக் கட்சி அமைப்பில், தேசிய இனரீதியாக வரையறுக்கக் கூடிய முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரியது. இவ்வாறு “தேசிய இன அளவில் வரையறுத்தல்” என்பதிலிருந்து ஒருபடி இன்னும் மேலே போய் ''தேசிய இனஅளவில் பிரித்தல்'' என்ற கோட்பாட்டிற்குச் சென்றது. இந்த அடிப்படையில்தான் பண்ட் அமைப்பின் எட்டாவது மாநாட்டில் "தேசிய இன அளவில் பிரித்தலில் தான் தேசிய வாழ்வு உள்ளது" என்று பிரகடனம் செய்தது.

உண்மையில் பண்ட் அமைப்பிற்கு இதைப் பின்பற்றுவதைத் தவிர வேறெதுவும் இல்லை. அது ஒரு தனி ஆட்சிப் பிரதேச அமைப்பாக விளங்கிய காரணத்தினாலேயே அது பிரிவினைவாதத்தை நோக்கிச் சென்றது”

(மார்க்சியமும் தேசியஇனப் பிரச்சனையும்- பக்கம் 83-84)

No comments:

Post a Comment