Monday 4 December 2017

புரட்சிகரமான போர்த்தந்திரத்தைப் (tactics) புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கிட முடியாது என்பது பற்றி லெனின்

“வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மை இல்லாமல், இந்த மனப்பான்மை வளர்வதற்கு அனுசரணையான நிலைமைகள் இல்லாமல், புரட்சிகர போர்தந்திரம் ஒரு நாளும் செயல் நிலைக்கு வளர்ச்சியுற முடியாது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் ருஷ்யாவில் இரத்தம் தோய்ந்த நீண்டநெடிய கொடிய அனுபவமானது, புரட்சிகரப் போர்த்தந்தரத்தைப் புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கிவிட முடியாதென்ற உண்மையை எங்களுக்கு போதித்துள்ளது.

குறிப்பிட்ட அரசிலும் (அதனைச் சுற்றிலுமுள்ள அரசுகளிலும் மற்றும் உலகெங்குமுள்ள அரசுகளிலும்) இருக்கும் வர்க்க சக்திகள் யாவற்றையும், மற்றும் புரட்சி இயக்கங்களது அனுபவத்தையும் பற்றிய நிதானமான, முற்றிலும் புறநிலை நோக்குடன்கூடிய மதிப்பீட்டையே போர்தந்திரம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால் மட்டுமோ, நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது “புரட்சிகர” மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிகமிகச் சுலபம், ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது கடினமான, மிகமிகக் கடினமான ஒரு பிரச்சினைக்குரிய தீர்வாகிவிடுவதில்லை.”

(“இடதுசாரி” கம்யூனிசம்-இளம் பருவக்கோளாறு)

No comments:

Post a Comment