Tuesday 19 December 2017

முன்னேறிய வர்க்கத்தின் முன்னணிப் படைக்குரிய பங்கை மட்டுமே புரட்சியாளர்களால் ஆற்ற முடியும் என்பது பற்றி லெனின்

“கம்யூனிஸ்டுகள் செய்யக்கூடிய மிகப் பெரிய, மிகவும் அபாயகரமான தவறுகளில் ஒன்று என்னவெனில் (மாபெரும் ஒரு புரட்சியின் துவக்கத்தை வெற்றிகரமாய் நடத்தி முடிக்கும் புரட்சியாளர்கள் பொதுவாகச் செய்யும் தவறு இது), புரட்சியாளர்கள் மட்டும் சேர்ந்து ஒரு புரட்சியை நடத்திவிட முடியுமெனக் கருதுவதுதான். இதற்கு மாறாய், புரட்சிகரமான எந்த முக்கிய பணியும் வெற்றி பெற வேண்டுமாயின், மெய்யாகவே உயிர்ச்சக்தி கொண்ட முன்னேறிய வர்க்கத்தின் முன்னணிப் படைக்குரிய பங்கை மட்டுமே புரட்சியாளர்களால் ஆற்ற முடியுமென்ற கருத்து புரிந்து கொள்ளப்பட்டு, செயல்படுத்தப்படுவது அவசியமாகும்.

முன்னணிப் படையானது தான் தலைமை தாங்கிச் செல்லும் திரளான மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதை தவிர்த்துக் கொள்ளவும், இந்த முழுத் திரளினருக்கும் மெய்யாகவே தலைமை தாங்கி இவர்களை முன்னே அழைத்துச் செல்லவும் கூடியதாய் இருக்கையில்தான் அது முன்னணிப் படைக் குரிய பணிகளைச் செய்து முடிக்கிறது. மிகப் பல்வேறுபட்ட செயல் துறைகளிலும், கம்யூனிஸ்டுகளல்லாதோருடன் கூட்டணி கொள்ளாமல் கம்யூனிசக் கட்டுமானப் பணி எதுவும் வெற்றிகரமாய் நடந்தேறுவது சாத்தியமன்று.”

(போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து-1922)

No comments:

Post a Comment