Wednesday 27 December 2017

2. வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் – மா சே துங்

“சமூக மாற்றங்கள் பிரதானமாக சமூகத்தில் காணும் உள் முரண்பாடுகளின் (internal contradictions) வளர்ச்சியால் அதாவது உற்பத்தி சக்திகளுககும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடு, வர்க்கங்களுக்கு இடையிலுள்ள முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிதான் சமூகத்தின் முன்னேறச் செய்கின்றது, பழைய சமூகத்தின இடத்தில் புதிய சமூகத்தை தோற்றுவிக்கும் உந்து சக்தியாக விளங்குகின்றது”
(பிரமைகளை வீசிஎரிந்து போராட்டத் தயாராகுங்கள்- 14 ஆகஸ்ட் 1949)

“புரட்சி என்பது ஒரு மாலை விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல, ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல, அது அவ்வளவு பண்பானதாக இருக்காது, அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி, ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை.”
(ஹீனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை – மார்ச் 1927)

“நமது எதிரிகள் யார்? நமது நண்பர்கள் யார்? புரட்சியில் இந்தப் பிரச்சினை முதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சீனாவின் கடந்த காலப் புரட்சிகள் எல்லா சாதித்தவை மிகக் குறைவாக இருப்பதன் அடிப்பைடக் காரணம், அவை உண்மையான பகைவர்களைத் தாக்குவதற்கு உண்மையான நண்பர்களை ஐக்கியப்படுதத் தவறியதேயாகும்.

புரட்சிகரக் கட்சி என்பது பொதுமக்களின் வழிகாட்டி, அது பொதுமக்கள் தவறான பாதையில் வழி நடத்தினால், புரட்சி என்பது தோல்வி அடையாமல் இருக்க முடியாது. மக்களை நாம் தவறான பாதையில் இட்டுச செல்லாமல், நமது புரட்சியின் நிச்சய வெற்றியை உத்தரவாதம் செய்ய வேண்டுமானால், நாம் உண்மையான விரோதிகளைத் தாக்குவதற்கு உண்மையான நண்பர்களையும் ஐக்கியப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையான பகைவர்களையும் உண்மையான நண்பர்களையும் வேறுபடுத்திக் கொள்ள, நாம் சீன சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் பொருளாதார நிலையும், புரட்சி பற்றி அவை கொண்டுள்ள அணுகுமுயையும் பொதுவாக ஆராய்வது அவசியம்.”
(சீன சமூகத்தில் வர்க்கங்களின் ஆராய்வு – மார்ச்  1926)

“துப்பாக்கி ஏந்திய எதிரிகள் ஒழிக்கப்பட்ட பின், துப்பாக்கி இல்லாத எதிரிகள் இன்னும் இருப்பர். அவர்கள் நம்முடன ஜீவமரணப் போராட்டம் நடத்துவது நிச்சயம். இந்த எதிரிகளை நாம் சாமானியமாகக் கருதக்கூடாது. தற்போது இவ்வாறு பிரச்சினையை எழுப்பாமலும் புரிந்து கொள்ளாமலும் விட்டால், நாம் மிகப் மிகப்பெரிய தவறுகளை இழைத்துவிடுவோம்.”
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 7வது மத்திய கமிட்டியின் 2வது பிளீனக் கூட்டத்தின அறிக்கை – 5 மார்ச் 1949)

“ஏகாதிபத்தியவாதிகளும் உள்நாட்டுப் பிற்போக்குவாதிகளும், தமது தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் இறுதிவரை போராடுவது நிச்சயம், நாடு முழுவதிலும் சமாதானமும ஒழுங்கும் நிலைநிறுத்தப்பட்ட பின்னரும், அவர்கள் பல்வேறு வழிகளிலும் சதி வேலைகளில் ஈடுபடுவர். தொல்லைகள் விளைவிப்பர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சீனாவில் தமது மீட்சிக்காக பாடுபடுவர். இது தவிர்க்க முடியாதது, சந்தேகத்திற்கிடமற்றது. எந்த நிலைமையிலும் நாம் நமது விழிப்புணர்ச்சியைத் தளர்த்தி விடக்கூடாது.”
(சீன மக்கள் அரசியல் கலந்தாலோசனை மாநாட்டின் 1வது பிளீனக் கூட்டத்து ஆரம்ப உரை – 21 செப்டம்பர் 1949)

“வறட்டுவாதம், திருத்தல்வாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க்சியம் நிச்சயம் முன்னேறி வளரும். நடைமுறை அனுபவத்தின் வளர்ச்சியுடன் அதுவும் நிச்சயம் வளரும். அது முன்னேறாமல் தேங்கி நிற்க முடியாது. அது நிலைத்து மாறாத நிலையில் நின்றால் அது உயிரற்றதாகிவிடும்.

இருந்தும் மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது. ( must never be violated) அத்துமீறினால், தவறுகள் இழைக்கப்படும். ஒரு நிலையியல் கண்ணோட்டத்தலிருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதை ஏதோ விறைப்பான ஒன்றாக கருதுவதும வறட்டுவாதம் ஆகும்.

மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்தால், அதன் அனைத்தும் தழுவிய உண்மையை நிராகரித்தால், அது திருத்தல்வாதம் ஆகும். திருத்தல்வாதம என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம். சோஷலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை திருத்தல்வாதிகள் மறுக்கின்றனர். அவர்கள் வக்காலத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கத்திற்கன்றி சோஷலிச மார்க்கத்திற்கல்ல. இன்றைய நிலைமைகளில் திருத்தல்வாதம் என்பது வறட்டுவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானது. இன்று சித்தாந்தத் துறையில் நமது முக்கியமான கடமைகளில் ஒன்று திருத்தல்வாதத்துக்கு எதிரான விமர்சனத்தை மலரச் செய்வதாகும்”
(சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரச்சார வேலை ப்றிய தேசிய மாநாட்டுரை  - 12 மார்ச் 1957)


No comments:

Post a Comment