Monday 4 December 2017

முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வது, தீங்கிழைப்பதற்குப் பதிலாய், அரசியல் வழியில் நாடாளுமன்றம் காலாவதியாக்குவதற்கு துணைபுரிகிறது என்கிறார் லெனின்

சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சில வாரங்களே முன்னதாகவும், இந்த வெற்றிக்குப் பிற்பாடுங்கூட, முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வதானது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குத் தீங்கிழைப்பதற்குப் பதிலாய், இது போன்ற நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட வேண்டியது எப்படி அவசியமென்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள வெகு ஜனப் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும், இந்நாடாளுமன்றங்கள் வெற்றிகர மாய்க் கலைக்கப்படுவதற்கு வகை செய்கிறது என்பதும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை "அரசியல் வழியில் காலாவதியாக்குவதற்குத் துணை புரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன. இந்த அனுபவத்தை உதாசீனம் செய்துவிட்டு, அதே நேரத்தில் கம்யூனிஸ்டு அகிலத்துடன் - தனது போர்த்தந்திரத்தைச் சர்வதேசரீதியில் (குறு கலான, அல்லது தனிப்பட்டதான எந்தவொரு தேசத்துக்கு மான போர்த்தந்திரமாயிராது, சர்வதேசப் போர்த்தந் திரமாய்) வகுத்துக் கொள்ள வேண்டிய கம்யூனிஸ்டு அகிலத்துடன்-இணைப்புரிமை கொண்டாடுவதானது மிகக் கொடுந் தவறிழைப்பதாகவும், சர்வதேசியத்தைச் சொல்ல ளவில் ஏற்றுக் கொண்டு செயலில் கைவிடுவதாகவுமே அமைகிறது.”

(“இடதுசாரி” கம்யூனிசம்-இளம் பருவக்கோளாறு)

No comments:

Post a Comment