Thursday 21 December 2017

சோவியத்துகளின் வெற்றிக்காக நாடாளுமன்றத்தினுள்ளிருந்து வேலை செய்யாமல், நாடாளு மன்றத்தின் மீது சோவியத்துகள் வெற்றி பெறுவது சாத்தியம் தானா? என்று லெனின் கேள்வி எழுப்புகிறார்

“பாட்டாளி வர்க்கம் அதன் குறிக்கோள்களை வந்தடைய வகைசெய்யும் சாதனம் தொழிலாளர்களது சோவியத்துகளே அன்றி நாடாளுமன்ற மல்ல என்பதை இக்கடிதத்தின் ஆசிரியர் நன்கு உணருகிறார். இதுவரை இதனை உணரத்தவறியோர், அவர்கள் மெத்தப் படித்தவர்களாகவும் மிகுந்த அனுபவமுடைய அரசியல்வாதிகளாகவும் மனப் பூர்வமான சோஷலிஸ்டுகளாகவும் நன்கு கற்றுத் தேர்ந்த மார்க்சியவாதிகளாகவும் நேர்மையான குடிமக்களாகவும் நல்ல தந்தையராகவும் இருந்த போதிலும், கடைந் தெடுத்த பிற்போக்குவாதிகளே ஆவர்.

ஆனால் சோவியத்துகளுக்கு ஆதரவான அரசியல்வாதிகளை நாடாளுமன்றத்தின் உள்ளே வரச்செய்யாமல், உள்ளிருந்தே நாடாளுமன்ற முறையைச் சிதைவுறச் செய்யாமல், நாடாளுமன்றத்தைக் கலைத்திடுவதற்காக சோவியத்துகள் மேற்கொள்ளப் போகும் பணியில் சோவியத்துகளின் வெற்றிக்காக நாடாளுமன்றத்தினுள்ளிருந்து வேலை செய்யாமல், நாடாளு மன்றத்தின் மீது சோவியத்துகள் வெற்றி பெறுவது சாத்தியம்தான என்று இக்கடிதத்தின் ஆசிரியர் கேட்கவே இல்லை- இவ்வாறு கேட்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு ஏற்படவில்லை. ஆயினும் பிரிட்டனில் கம்யூனிஸ்டுக் கட்சியானது விஞ்ஞானக் கோட்பாடுகளையே ஆதாரமாகக் கொண்டு செயல்பட வேண்டுமென்ற முற்றிலும் சரியான கருத்தை இந்தக் கடிதத்தின் ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

விஞ்ஞானம் முதலாவதாகப் பிற நாடுகளின் அனுபவத்தை -முக்கியமாய் முதலாளித்துவ நாடுகளேயான இந்தப் பிற நாடுகள் இதே மாதிரியான அனுபவத்தைக் கண்டு வருமாயின், அல்லது அண்மையில் கண்டிருக்குமாயின் -கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கோருகிறது; இரண்டாவதாக, அது அந்தந்த நாட்டிலும் செயல்படும் எல்லாச் சக்திகளையும் கோஷ்டிகளையும் கட்சிகளையும் வர்க்கங்களையும் வெகுஜனங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், மற்றும் ஒரேவொரு கோஷ்டி அல்லது கட்சியின் விருப்பங்களையும் அபிப்பிராயங்களையும் வர்க்க உணர்வின், போர்க்குணத்தின் நிலையையும் மட்டும் கொண்டு கொள்கையை நிர்ணயித்துவிடக் கூடாதென்றும் கோருகிறது.”
("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-9)


No comments:

Post a Comment