Sunday 31 December 2017

8. மக்கள் யுத்தம் – மா சே துங்

புரட்சி யுத்தம் என்பது பொதுமக்களின் யுத்தம், பொது மக்களைத் தட்டியெழுப்பி, அவர்களைச் சார்ந்திருந்தால் தான் இந்த யுத்தத்தை நடத்த முடியும்.
(பொதுமக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்,
வேலை முளைகளில் கவனம் செலுத்து – 27 ஜனவரி 1934)

உண்மையான இரும்புக் கோட்டை யாது? பொதுமக்கள், புரட்சியை உண்மையாகவும், விசுவாசமாகவும் ஆதரிக்கும் இலட்சோப இலட்சம் பொதுமக்களே ஆவர். இதுதான் உண்மையான இரும்புக் கோட்டையாகும். இதை எந்தச் சக்திகயாலும் உடைப்பது சாத்தியமாகாது, முற்றிலும் சாத்தியமாகாது. எதிர்புரட்சி நம்மை நசுக்க முடியாது. மாறாக எதிர்புரட்சியை நம்மால் நசுக்க முடியும், புரட்சிகர அரசாங்கத்தை சூழ இலட்சோப இலட்சம் மக்களையும் அணி திரட்டி, நமது புரட்சி யுத்த்தை விரிவாக்கி, எதிர்ப்புரட்சி முழுவதையும் ஒழித்துக்கட்டி சீனா முழுவதையும் நாம் கைப்பற்றுவோம்
(பொதுமக்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்,
வேலை முளைகளில் கவனம் செலுத்து – 27 ஜனவரி 1934)


யுத்தத்தை நடத்தும் பேராற்றலின் செழுமையான ஊற்றுமூலம் பொதுமக்கள் மத்தியில் தான் இருக்கின்றது. ஜப்பான் நம்மைத் துன்புறுத்த துணியும் காரணம், தலையாயமாக சீன மக்கள் அமைப்பு ரீதியாக அணி திரட்டப்படாததேயாகும். இந்தக் குறைபாடு ஒருக்கால் திருத்தப்பட்டதும், ஜப்பானிய ஆக்கரிப்பாளன் எழுந்து நிற்கும் நமது கோடானகோடி மக்களாலும் சுற்றி வளைக்கப்படுவான், அவன் நெருப்பு வளையத்திற்குள் பாய்ந்து வெறிமாடுபோல், நாம் இடும் சத்தத்தால் அச்சுறுத்தப்பட்டு எரிந்து இறந்து விடுவான்

(நீண்டநாள் யுத்தம் பற்றி – மே 1938)

No comments:

Post a Comment