Saturday 23 December 2017

மார்க்சியத்தை புதுப்பிப்பதாய் கூறுபவர்கள் மார்க்சியத்தை ஓரடிக்கூட முன்னேற செய்யாமல் பழைய தத்துவத்தைக் கொண்டு வந்து வர்க்கப் போராட்டத்தை விட்டுக்கொடுப்பதற்கு உதவிடுகின்றனர் என்பது பற்றி லெனின்

தற்போது சர்வதேச சமூக-ஜனநாயகம் (சர்வதேச கம்யூனிசம்) சித்தாந்த ஊசலாட்டத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது. இது காறும் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகள் புரட்சித் தத்துவத்துக்குரிய உறுதி வாய்ந்த அடித்தளமாய்க் கருதப்பட்டு வந்தன; ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறை பாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன. சமூக-ஜனநாயகவாதியாய்த் தம்மை அறிவித்துக் கொண்டு, சமூக-ஜனநாயகக் கொள்கை முழக்க ஏடு ஒன்றை வெளியிட முன்வரும் எவரும், ஜெர்மன் சமூக-ஜனநாயக வாதிகளின் கவனத்தையும் அவர்கள் மட்டுமின்றி ஏனைய பலரின் கவனத்தையும் ஆட்கொண்டு வரும் ஒரு பிரச்சினை குறித்துத் தமது போக்கு என்ன என்பதைத் துல்லியமாய் வரையறுத்துக் கூறியாக வேண்டும்.

நாம் முற்றிலும் மார்க்ஸியத் தத்துவார்த்த நிலையையே எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்: மார்க்ஸியம் தான் முதன்முதல் சோஷலிசத்தைக் கற்பனவாதத்திலிருந்து விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது; இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது; இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று.
……
இப்பொழுது நாம் கேட்கிறோம்: இந்தத் தத்துவத்தைப் ‘புதுப்பிப்பதாய்ப்' பலக்கக் கூறிக் கொள்கிறார்களே, இக்காலத்தில் பெருங் கூச்சல் எழுப்பி வருவோரும் ஜெர்மன் சோஷலிஸ்டு பெர்ன்ஷ்டைனை மையமாய்க் கொண்டு திரண்டிருப்போருமாகிய இவர்கள் புதிதாய் எதையேனும் இத்தத்துவத்தில் புகுத்தியிருக்கிருர்களா? எதுவுமே இல்லை. வளர்த்திடுமாறு மார்க்சும் எங்கெல்சும் நம்மைப் பணித்துச் சென்ற இந்த விஞ்ஞானத்தை ஒரடியுங்கூட இவர்கள் முன்னேறச் செய்துவிடவில்லை; புதிய போராட்ட முறைகள் எவற்றையும் இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்துவிடவில்லை. மாறாக, இவர்கள் பிற்பட்ட தத்துவங்களிலிருந்து சிறுகவளங்களைக் கடன்வாங்கி, பாட்டாளி வர்க் போராட்டத் தத்துவத்தையல்ல, விட்டுக் கொடுத்துச் செல்லும் தத்துவத்தை-பாட்டாளி வர்க்கத்தின் மிகக் கொடும் பகைவர்களுக்கு, சோஷலிஸ்டுகளை வருத்துவதற்காக அயராது புது வழிமுறைகளைத் தேடியலையும் அரசாங்கங்களுக்கும் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் விட்டுக் கொடுத்துச் செல்லும் தத்துவத்தை-பிரசாரம் செய்துப் பின்வாங்கியே சென்றிருக்கிருர்கள்.”
(நமது வேலைத்திட்டம்)

  

No comments:

Post a Comment