Thursday 21 December 2017

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியின் கட்டுப்பாட்டைக் கட்டிக்காப்பது எப்படி? அது சோதிக்கப்படுவது எப்படி? - லெனின்

“பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியின் கட்டுப்பாட்டைக் கட்டிக்காப்பது எப்படி? அது சோதிக்கப்படுவது எப்படி? அது மேலும் உறுதி பூட்டப் பெறுவது எங்ங்ணம்? முதலாவதாக, பாட் டாளிகளின் முன்னணிப் படையின் வர்க்க உணர்வாலும்; புரட்சியின்பால் அதற்குள்ள பற்றுறுதியாலும், தன்னலங் கருதாத் தியாக உணர்வாலும், வீரத்தாலும். இரண்டா வதாக, உழைப்பாளி மக்கள் திரளின் மிகவும் விரிவான பகுதிகளுடனும், முக்கியமாய்ப் பாட்டாளி வர்க்கத் துடனும், மற்றும் உழைப்பாளி மக்களின் பாட்டாளி வர்க்கமல்லாத பகுதிகளுடனும் இணைப்புக் கொள்ளவும், மிக நெருங்கிய தொடர்பைக் கட்டிக்காக்கவும், ஓரளவுக்கு ஒன்றுகலக்கவும் என்றுகூடச் சொல்லலாம், அதற்குள்ள ஆற்றலால். மூன்றுவதாக, இந்த முன்னணிப் படையால் வகிக்கப்படும் அரசியல் தலைமையின் பிழையற்ற தன்மை யால், அதன் அரசியல் ஆதார நெறி, போர்த்தந்திரம் இவற்றின் பிழையற்ற தன்மையால் - வெகுஜனப் பகுதிகள் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாகவே இவை சரியானவை என்பதைக் கண்டு கொண்டாக வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி சமுதாயம் அனைத் தையும் மாற்றியமைத்திடுவதைப் பணியாகக் கொண்ட முன்னேற்றகரமான வர்க்கத்தின் கட்சியாக இருக்கும்.

மெய்யான தகுதியும் திறனும் கொண்ட புரட்சிகரக் கட்சியில், இந்நிலைமைகள் இல்லையேல், கட்டுப்பாட்டைச் சாதிக்க இயலாது. இந்த நிலைமைகள் இல்லையேல், கட்டுபபாட்டை நிறுவுவதற்கான எல்லா முயற்சிகளும் தவிர்க்க முடியாதவாறு விரயமாகி வெறும் வாய்வீச்சாகவும் கேலிக் கூத்தாகவுமே முடிவுறும். அதேபோதில் இந்த நிலைமைகள் யாவும் திடுதிப்பென்று தோன்றிவிடுவதில்லை. நீடித்த முயற்சியாம் அரும் பாடுபட்டுப் பெறும் அனுபவத்தாலுமேதான் தோற்றுவிக்கப்படுகின்றன. பிழையற்ற புரட்சிகரத் தத்துவம் இருக்குமாயின் இந்நிலைமைகள் தோற்றுவிக்கப்படுவதற்கு அது துணை புரிகிறது. இந்தப் புரட்சிகரத் கோட்பாடு (theory) வறட்டுச் சூத்திரமாக அமைந்துவிடாமல், மெய்யாகவே வெகுஜனத் தன்மையதான, மெய்யாகவே புரட்சிகரமான இயக்கத்தின் நடைமுறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டே இறுதி வடிவம் பெறுகிறது.”

("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-2)

No comments:

Post a Comment