Sunday 3 December 2017

பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதை மறுக்கின்ற ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் போக்கை எதிர்த்து லெனின்

“ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுக் கட்சி முதலாளித்துவ-ஜனநாயகப் பாராளுமன்றத்திற்கு நடக்கும் தேர்தல்களைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முடிவுற்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் முதலாளித்துவப் பாராளுமன்றங்களுக்கான தேர்தல்களிலும் இந்தப் பாராளுமன்றங்களின் வேலையிலும் பங்கெடுத்துக் கொள்வது பிழையற்ற போர்த்தந்திரம் என்று அங்கீகரித்தது.

ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரதிநிதிகளுடைய உரைகளைக் கொண்டு பார்க்கையில் அது கம்யூனிஸ்டு அகிலத்தின் முடிவைக் கட்சிகளில் ஒன்றின் முடிவுக்கு மேலாக வைக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் ஓடிவிட்டவர்களாகிய, சோஷலிஸத்தின் துரோகிகளாகிய ஆஸ்திரிய சமூக-ஜனநாயகவாதிகள் கம்யூனிஸ்டு அகிலத்தின் முடிவுபற்றி -அது ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் புறக்கணிக்கிற முடிவுக்கு முரணாயுள்ளது --மகிழ்ச்சி அடைவார்கள் என்பதிலும் சந்தேகம் இருக்க முடியாது.
...
முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதை எதிர்த்து ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் வாதங்களில் ஒன்று இன்னும் கொஞ்சம் அதிகக் கவனமாய்ப் பரிசீ லிக்கப்பட வேண்டியதாகும். அந்த வாதம் பின்வருமாறு:

"கம்யூனிஸ்டுகளுக்குப் பாராளுமன்றம் ஒரு கிளர்ச்சி மேடையாக மட்டுமே முக்கியத்துவமுடையது. ஆஸ்திரியாவிலுள்ள எங்களுக்குத் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் ஒரு கிளர்ச்சி மேடையாக இருக்கிறது. எனவே, முதலாளித்துவப் பாராளுமன்றத்தின் தேர்தல்களில் நாங்கள் பங்கெடுக்க மறுக்கிறோம். ஜெர்மனியில் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் என்று மெய்யாகவே கருதத்தக்கது ஒன்றுமில்லை. அதனலேதான் ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் மாறான போர்த்தந்திரத்தைப் பின்பற்றுகிறர்கள்."

இந்த வாதம் தவறாகுமெனக் கருதுகிறேன். முதலாளித்துவப் பாராளுமன்றத்தை நம்மால் ஒழிக்க முடியாத வரை, நாம் அதை எதிர்த்து உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வேலை செய்ய வேண்டும். தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக முதலாளிகள் பயன்படுத்துகிற முதலாளித்துவ ஜனநாயகக் கருவிகளை உழைக்கும் மக்களில் (பாட்டாளிகள் மட்டுமின்றி, அரைப் பாட்டாளிகளும் சிறு விவசாயிகளும்) கணிசமான தொகையினர் நம்புகிறவரை, தொழிலாளர்களின் பிற்பட்ட பகுதியினர்-குறிப்பாகப் பாட்டாளி வர்க்கமல்லாத உழைப்பாளி மக்கள் -அதிமுக்கியமானதாகவும் செல்வாக்கு உள்ளதாகவும் கருதுகிற அதே மேடையிலிருந்து இந்த வஞ்சகத்தை நாம் விளக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றித் தேர்தல்கள்-முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராய்த் தங்களுடைய சோவியத்துக்களுக்காக உழைப்பாளி மக்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொள்ளும் தேர்தல்கள் நடத்த முடியாதிருக்கிறவரை, முதலாளித்துவ வர்க்கம் அரசு அதிகாரத்தை வகித்து மக்களின் பல்வேறு வர்க்கங்களைத் தேர்தல்களில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறவரை, அந்தத் தேர்தல்களில், பாட்டாளி வர்க்கம் மட்டுமின்றி எல்லா உழைப்பாளி மக்களிடையேயும் பிரசாரம் செய்யும்பொருட்டு, நாம் பங்கெடுப்பது நமது கடமையாகும்.

முதலாளித்துவப் பாராளுமன்றம், நிதி மோசடிகளையும் எல்லா விதமான லஞ்சங்களையும் மூடிமறைப்பதற்கு (பூர்ஷ்வாப் பாராளுமன்றத்தில் நடப்பதுபோல் வேறெங்கும் எழுத்தாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், மற்றவர்களின் விஷயத்தில் இவ்வளவு பெரிய அளவில் மிக ''நயமான" வகைப்பட்ட லஞ்சம் கையாளப்படுவதில்லை) "ஜனநாயகத்தைப்' பற்றிய வாய்ச்சொற்களைப் பயன்படுத்தி, தொழிலாளிகளை வஞ்சிப்பதற்குரிய ஒரு சாதனமாக இருந்து வருகிறவரை, இதே நிறுவனத்தில் -அது மக்களின் சித்தத்தை வெளியிடுவதாகக் கருதப்படுகிறது; ஆனால் பணக்காரர்கள் மக்களை ஏய்ப்பதை மூடிமறைப்பதே உண்மையில் அது ஆற்றும் பணியாகும் - கம்யூனிஸ்டுகளாகிய நாம் இருந்து வஞ்சனையை முரணின்றி அம்பலப்படுத்துவதும் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகள் பக்கம் ஒடிப்போகிற ரென்னர்களின் கும்பல் புரியும் ஒவ்வொரு காரியத்தையும் அம்பலப்படுத்துவதும் நமது கடமையாகும்.

பாராளுமன்றத்திலே முதலாளித்துவக் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் இடையே உள்ள உறவுகள் மிக அடிக்கடி தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன; முதலாளித்துவ சமுதாயத்திலுள்ள எல்லா வர்க்கங்களிடையேயும் நிலவும் உறவுகளை அவை பிரதிபலிக்கின்றன. எனவேதான், முதலாளித்துவப் பாராளுமன்றத்திலே, அதனுள் இருந்தே கம்யூனிஸ்டுகளாகிய நாம் கட்சிகள் பால் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் போக்கு, பண்ணைத் தொழி லாளிகள்பால் நிலப்பிரபுக்கள் கடைப்பிடிக்கும் போக்கு, ஏழை விவசாயிகள் பால் பணக்கார விவசாயிகள் கடைப் பிடிக்கும் போக்கு, அலுவலக ஊழியர்கள்பால், சிறு உடைமையாளர்கள் பால் பெரு முதலாளிகள் கடைப்பிடிக்கும் போக்கு, இப்படியே மற்றவற்றின் உண்மையை நாம் மக்களுக்கு விளக்க வேண்டும்.

முதலாளிகளின் கேடுகெட்ட, நாசுக்கான தந்திரங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கற்றுக் கொள்ளவும், குட்டிபூர்ஷ"வா வர்க்கத்தினர் மீதும் பாட்டாளி வர்க்கமல்லாத உழைக்கும் மக்கள் திரள் மீதும் செல்வாக்குச் செலுத்தக் கற்றுக்கொள்ளவும், பாட்டாளி வர்க்கம் இதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் ''பள்ளிப் பயிற்சி'' இல்லாமல், பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பொறுப்புக்களை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியாது. காரணம், அப்போதுங்கூட, முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய புதிய நிலையிலிருந்து கொண்டு (ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்ட ஒரு வர்க்கம் என்ற நிலையிலிருந்து) பல வடிவங்களிலே பல துறைகளிலே விவசாயிகளை ஏமாற்றியும் அலுவலகச் சிப்பந்திகளை லஞ்சம் கொடுத்தும் பயமுறுத்தியும் வரும், "ஜனநாயகம்'' பற்றிய வாய்ச்சொற்களைக் கொண்டுதன்னுடைய அசிங்கமான, சுயலாப அபிலாஷை களை மூடிமறைக்கும் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றும்.

இல்லை, ரென்னர்களின், அவர்களை ஒத்த முதலாளித்துவ வர்க்கத்தின் இதர ஏவலாட்களின் எக்களிப்பைக் கண்டு ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகள் பயப்பட மாட்டார்கள். ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகள் தங்களுடைய பகிரங்கமான, நேரடியான, சர்வதேசப் பாட்டாளி வர்க்கக் கட்டுப்பாட்டின் அங்கீகாரத்தைப் பிரகடனம் செய்ய அஞ்சமாட்டார்கள். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய அறிவு, சித்தம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கட்டுப்பாடுக்குக் கீழ்ப்படுவதால் தொழிலாளர்களின் விடுதலைப் போராட்டத்தின் மகத்தான பிரச்சினைகளைத் தீர்க்கிருறோம் என்பதிலே நாம் பெருமைப்படுகிறோம்; அவ்வழியே, செயல்பூர்வமாக (ரென்னர் களும், பிரிட்ஸ் ஆட்லெர்களும், ஒட்டோ பெளவர்களும் செய்வதுபோல் சொல்லளவில் அல்ல) உலகெங்கும் கம்யூனிசத்துக்காக நடைபெறும் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் ஒற்றுமையைச் செயல்படுத்துகிறோம்.”
(ஆஸ்திரியக் கம்யூனிஸ்டுகளுக்குக் கடிதம் -1920, ஆகஸ்டு 15)

No comments:

Post a Comment