Sunday 31 December 2017

10. கட்சிக் கமிட்டிகளின் தலைமை – மா சே துங்

பிரச்சினைகளை மேசையில் வைக்க வேண்டும், “குழுத் தலைவர்” மாத்திரமல்ல கமிட்டி உறுப்பினர்களும் இப்படியே செய்ய வேண்டும். ஒருவர் முதுகுக்குப்பின் மற்றவர் புறங்கூறக் கூடாது. பிரச்சினைகள் தோன்றும் போதெல்லாம், கூட்டத்தைக் கூட்டி, பிரச்சினைகளை விவாதத்திற்காக மேசையில் வைத்து, சில முடிவுகளை எடுத்தால், பிரச்சினைகள் தீர்ந்துவிடும். பிரசினைகள் இருந்து, அவை மேசையில் வைக்கப்படாவிட்டால், அவை நீண்டகாலம் தீர்க்ப்படாமல் இருக்கும், ஆண்டுக்கணக்காக அவை இழுபட்டுச் செல்லலாம். “குழுத் தலைவ”ரும் கமிட்டி உறுப்பினர்களும் ஒருவருககொருவர் புரிந்து கொள்ள வேண்டும். செயலாளருக்கும் கமிட்டி உறுப்பினர்களுக்கும் இடையில், மத்திய கமிட்டிக்கும் அதன் பிராந்திய குழுக்களுக்கும் இடையில், பிராந்திய குழுக்களுக்கும் பிரதேச கட்சி கமிட்டிகளுக்கும் இடையில் பரஸ்பரம் புரிந்து கொள்ளல், ஆதரவு நட்புறவு ஆகியவற்றிலும் பார்க்க முக்கயிமானவை வேறொன்றுமில்லை.
(கட்சிக் கமிட்டியின் வேலை முறைகள்- 13 மார்ச் 1949)

உங்களுக்குப் புரியாத அல்லது தெரியாத விசயங்கள் பற்றி உங்களுக்கு கீழ் உள்ளவர்களிடம் கேளுங்கள். உங்களுடைய அங்கீகாரத்தையோ அல்லது நிராகரிப்பையோ, இலேசாக தெரிவிக்ககூடாது… நமக்கு தெரியாதவற்றை தெரிந்தது போல் நடக்ககூடாது. நாம் “கீழே உள்ளவர்களிடமிருந்து கேட்டுப் படிபதற்கு வெட்கப்பட கூடாது” கீழ் மட்டங்களிலுள்ள ஊழியர்களின் கருத்துகள் நாம் கவனமாக கேட்க வேண்டும். நீங்கள் ஆசிரியனாவதற்கு முன், மாணவராய் இருங்கள். நீங்கள் உத்தரவுகள் இடுவதற்கு முன் கீழ் மட்ட ஊழியர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்… கீழ் மட்ட ஊழியர்கள் கூறுவது சரியாக இருக்கலாம் அல்லது பிழையாக இருக்கலாம். கேட்பது நாம் அவற்றை ஆராய வேண்டும். நாம் சரியான கருத்துககளில் கவனம் செலுத்தி, அவற்றின்படி செயல்பட வேண்டும்… கீழ் இருந்து வரும் தவறான கருத்துகளையும் நாம் கேட்க வேண்டும். அவற்றை முற்றாகக் கேளாமல் விடுவது தவறு. ஆனால் அவற்றின்படி செயற்படக்கூடாது மாறாக, அவற்றை விமர்சனம் செய்ய வேண்டும்.
(கட்சிக் கமிட்டியின் வேலை முறைகள்- 13 மார்ச் 1949)

சொந்த கருத்திலும் பார்க்க வேறுபட்ட கருத்துள்ள தோழர்களுடன் ஐக்கியப்பட்டு வேலை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு இடங்களிலும் அல்லது இராணுவத்தில்கூட இதை மனதில் வைத்திருக்க வேண்டும். கட்சிக்கு வெளியேயுள்ள மக்களுடன் கொள்ளும் உறவுகளுக்கும் இது பொருத்தமானது. நாம் நாட்டின் எல்லா மூலை முடக்குகளிலிருந்தும் வந்து ஒன்றாக சேர்ந்துள்ளோம். நம்மைப் போன்ற கருத்துகளுடைய தோழர்களுடன் மாத்திரமல்ல, மாறுபட்ட கருத்துக்கள் உடையவர்களுடனும் நாம் ஐக்கியப்பட்டு வேலை செய்வதில் தேர்ச்சிபெற வேண்டும்.

(கட்சிக் கமிட்டியின் வேலை முறைகள்- 13 மார்ச் 1949)

No comments:

Post a Comment