Thursday 21 December 2017

தொழிற்சங்கம் நாடாளுமன்றம் போன்றவற்றில் மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்டதால், புரட்சிகர சூழலில் குழப்பத்துக்கு இரையாகி, சித்தப் பிரமை பிடித்தவர்களாய் மாற வேண்டிய நிலைமையப் பற்றி லெனின்

"ஒரு புறத்தில், கட்சியானது திடுதிப்பென்று சட்டபூர்வமான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு மாற்றப்பட்டு அதனல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் வர்க்கங்களுக்குமுள்ள வழக்கமான, முறையான, எளிய உறவுகள் குலைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலைக்குத் தாம் வந்துவிட்டதைக் கண்டதும், இவர்கள் குழம்பி விட்டதாகத் தெரிகிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஜெர்மனியிலும் சட்டபூர்வமான நிலைக்கு மக்கள் தம்மை மட்டுமீறிப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர்.

முறைப்படி நடைபெறும் கட்சிக் காங்கிரஸ்களில் 'தலைவர்கள்’ தங்கு தடையின்றி ஒழுங்கான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தல்கள், பொதுக் கூட்டங்கள், பத்திரிகைகள், தொழிற்சங்கங்கள் மூலமாகவும், பிற நிறுவனங்கள் மூலமாகவும் வெளிப்படும் உணர்ச்சிகள் வாயிலாகக் கட்சிகளின் வர்க்க இயைபைச் சோதித்துப் பார்க்கும் வசதியான முறைக்கும், இன்ன பிறவற்றுக்கும் மட்டுமீறி மக்கள் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர்.

இவர்களது இந்த வழக்கமான செயல்முறைக்குப் பதிலாய், புரட்சிப் புயலின் வளர்ச்சி காரணமாகவும், உள்நாட்டுப் போரின் வளர்ச்சி காரணமாகவும் சட்டபூர்வமான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு விரைவாய் மாறிச் சென்று, இரண்டையும் ஒன்றிணைத்துக் கொண்டு, "தலைவர்களது குழுக்களைத்' தேர்வு செய்ய வேண்டிய அல்லது அமைக்க வேண்டிய அல்லது பாதுகாத்துக் கொள்ள வேண்டிய "வசதியற்ற' , 'ஜனநாயகமல்லாத' முறைகளைக் கையாள வேண்டி வந்ததும்-இவர்கள் நிலை தடுமாறி, கலப்பற்ற அபத்தக் கற்பனையில் இறங்கத் தலைப்பட்டு விட்டனர்.

ஹாலந்துக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சில உறுப்பினர்கள் மிகுந்த சலுகைக்கும் மிகவும் நிலையான சட்டபூர்வ அந்தஸ்துக்குமுரிய மரபுகளையும் நிலைமைகளையும் கொண்ட ஒரு சிறு நாட்டில் பிறக்க வேண்டிய துரதிருஷ்டத்துக்கு உள்ளாகி, சட்டபூர்வ நிலையிலிருந்து சட்டவிரோத நிலைக்கான மாற்றத்தை என்றும் காணுதவர்களாய் இருந்து விட்டதால், குழப்பத்துக்கு இரையாகி, சித்தப் பிரமை அடைந்து இந்த அபத்தக் கண்டுபிடிப்புகளைத் தோற்றுவிக்க உதவியதாகத் தெரிகிறது."
("இடதுசாரி'' கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு-5)


No comments:

Post a Comment