Tuesday 26 December 2017

1. கம்யூனிஸ்ட் கட்சி பற்றி - மா சே துங்

புரட்சி நடைபெற வேண்டுமானால் புரட்சிகரக் கட்சி ஒன்று இருக்க வேண்டும், புரட்சிகரக் கட்சி ஒன்று இல்லாவிட்டால், மார்க்சிய-லெனினிய புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில், மார்க்சிய-லெனினிய புரட்சிகர நடையில் அமைக்கப்பட்ட கட்சி ஒன்று இல்லாவிட்டால், ஏகாதிபத்தியத்தையும் அதன் வேட்டை நாய்களையும் தோற்கடிப்பதில் தொழிலாளர் வர்க்கத்துக்கும் பரந்துபட்ட பொதுமக்களுக்கும் தலைமை அளிப்பது சாத்தியமாகாது.
(புரட்சிகர உலக சக்திகளே!  ஐய்க்கயிப்பட்டு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்துப போரிடுங்கள் (நவம்பர் 1946))

மார்க்சிய – லெனினியக் கோட்பாட்டால் ஆயுத பாணியாக்கப்பட்ட சுயவிமர்சன முறையைப் பயில்கின்ற, பொதுமக்களுடன் தொடர்புடைய, சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு கட்சி, இத்தகைய ஒரு கட்சியின் தலைமையிலுள்ள ஓர் இராணுவம், இத்தகைய கட்சியின் தலைமையிலுள்ள புரட்சிகர வர்க்கங்கள், புரட்சிகரக் குழுக்கள் எல்லாவற்றினதும் ஓர் ஐக்கிய முன்னணி, இந்த மூன்றும் தான் நாம் எதிரியைத் தோற்கடித்த மூன்று பிரதான ஆயுதங்கள்
(மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் பற்றி (30 ஜீன் 1949))

நாம் வழககமாக்க் கூறுவது போல், சீர்செய் இயக்கம் (rectification movement) என்பது அனைத்தையும் தழுவிய ஒரு மார்க்சிய கல்வி இயக்கம்சீர்செய்து என்றால் கட்சி முழுவதும் விமர்சனம், சுய விமர்சனம் இவற்றின் மூலம் மார்க்சியத்தைக் கற்பது என்று பொருள். இந்த சீர்செய் இயக்கத்தின் போக்கில், நாம் மார்க்சியம் பற்றிக் கூடுதலாகப் படிப்பது நிச்சயம்
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டு உரை (12 மார்ச், 1957))

கொள்கை (Policy) என்பது ஒரு புரட்சிகரக் கட்சியின் சகல நடைமுறை நடவடிக்கைகளினதும் தொடக்கப்புள்ளி, அது கட்சி நடவடிக்கைகளின் வளர்ச்சிப் போக்கிலும், இறுதி விளைவிலும் தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. ஒரு புரட்சிகரக் கட்சி எந்த ஒரு நடவடிக்கையை எடுக்கும் போதும், ஒரு கொள்கையை நடைமுறைப் படுத்துகின்றது. அது ஒரு சரியான கொள்கையை நடைமுறைபடுத்தாவிட்டால், பிழையான கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றது. அது ஒரு குறிப்பிட்ட கொள்கையை உணர்வு பூர்வமாக நடத்தாவிட்டால் அதை கண்மூடித்தனமாக நடைமுறைப்படுத்துகின்றது. ஒரு கொள்கையை நடைமுறைபடுத்தும் வளர்ச்சிப் போக்கையும், இறுதி விளைவையுமே நாம் அனுபவம் என்று கூறுகின்றோம்.

மக்களின் நடைமுறையின் மூலம் தான், அதாவது அனுபவத்தின் மூலம் தான், நாம் ஒரு கொள்கை சரியானதா, இல்லையா, எந்த அளவுக்கு அது சரியானது அல்லது பிழையானது என்பதைக் கண்டு கொள்ள முடியும். ஆனால் மக்களின் நடைமுறை, குறிப்பாக ஒரு புரட்சிகரக் கட்சியினதும், புரட்சிகர மக்களினதும் நடைமுறை என்பது ஒரு கொள்கையுடன் அல்லது இன்னொரு கொள்கையுடன் சம்பந்தப்படாமல் இருக்க முடியாது.

ஆகவே எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன, குறிப்பிட்ட சூழநிலைகளின்படி நாம வகுத்த கொள்கையைக் கட்சி உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் நாம் விளக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் நமது கொள்கையின் வழிகாட்டுதலில் இருந்து விலகிவிடுவர், குருட்டுத்தனமாகச் செயல்பட்டு ஒரு தவறான கொள்கையை நடைமுறைப்படுத்துவர்.
(தொழில் வர்த்தகம் சம்பந்தமான கொள்கை பற்றி (27 பிப்ரவரி 1948))



No comments:

Post a Comment