Sunday 31 December 2017

11. மக்கள் திரள் வழி – மா சே துங்

மக்கள், மக்கள் மட்டுமே, உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர்
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல்)

மக்கள் தான் உண்மையான வீரர்கள். ஆனால் நாம் அடிக்கடி சிறுபிள்ளைத் தனமுடையவர்களாகவும், நகைக்கத்தக்கவர்களாகவும் இருக்கின்றோம். இதை விளங்கிக் கொள்ளாவிட்டால் மிக ஆரம்ப அறிவைக்கூட பெறுவது சாத்தியமாகது.
(கிராமிய பரிசீலனையின் முன்னுரையும் பின்னுரையும் – மார்ச் ஏப்ரல் 1941)

மக்கள் எல்லையற்ற படைப்பாற்றல் உடையவர்கள். அவர்கள் தம்மை அமைப்பு ரீதியில் அணிதிரட்டி, தமது ஆற்றலை முற்றாக வெளிப்படுத்தக்கூடிய இடங்களிலும் வேலைப் பிரிவுகளிலும் தமது கவனத்தை குவிக்க முடியும், உற்பத்தியை ஆழமாகவும் அகலமாகவும் பெருக்க கவனத்தை குவிக்க முடியும், தங்களது சொந்த வாழ்க்கையை வளமாக்குவதற்கான நிறுவனங்களை மென்மேலும் உருவாக்க முடியும்
(உபரி உழைப்புக்கு ஒரு பழி பிறந்துவிட்டது- 
என்ற கட்டுரையின் அறிமுகக் குறிப்பு- 1955)

மக்கள்திரளுடன் இணைய வேண்டுமானால், மக்களின் தேவைகள் விருப்பங்களின்படி செயல்பட வேண்டும். மக்களுக்காக செய்யும் வேலைகள் எல்லாம் அவர்கள் தேவையிலிருந்து தொடங்க வேண்டும், ஆனால் எவ்வளவு நல்லெண்ணம் உடைய எந்த ஒரு தனிநபரின் ஆசையிலிருந்தும் தொடங்கக்கூடாது. பல சந்தர்ப்பங்களில், புறநிலையில் பொதுமக்களுக்கு ஒரு குறிப்பிட்டமாற்றம் தேவைப்படுகிறது. ஆனால் அக நிலையில் அவர்கள் அத்தேவையை இன்னும் உணராத, அம்மாற்றத்தை இன்னும் செய்ய விரும்பாத அல்லது தீர்மானிக்காத நிலை இன்னும் இருக்கின்றது. இத்தகைய நிலைமைகளில், நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நமது வேலைகள் மூலம் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாற்றத்தின் தேவையை உணர்ந்து, அதைச் செய்ய விரும்பி, ஒரு தீர்மானத்திற்கு வரும்வரையில், நாம் அந்த மாற்றத்தைச் செய்யக் கூடாது. அல்லாவிட்டால் நாம் மக்கள் திரளிடமிருந்து தனிமை படுத்தப்பட்டு விடுவோம்.

மக்கள்திரள் பங்குபெற வேண்டிய எந்த ஒரு வேலையையும் அவர்கள் தாமாக உணர்ந்து, செய்ய விரும்பாவிட்டால், அது வெறும் சம்பிரதாயமாக மாறி, தோல்வி அடைந்துவிடும்…. இங்கு இரண்டு கோட்பாடுகள் உண்டு, ஒன்று, மக்கள்திரளின் உண்மையான தேவைகள் அன்றி, அவர்களுக்கு தேவை என்று நமது மூளையில் கற்பனை செய்வது அல்ல. இரண்டு, மக்கள்திரளின் சுய-விருப்பம், நாம் பொதுமக்களுக்காக அவர்களுடைய மனதை தயார் செய்வதற்கு பதில அவர்கள் தமது மனதை தாமே திடப்படுத்த வேண்டும்.
(கலாச்சார வேலையில் ஐக்கிய முன்னணி- 30 அக்டோபர் 1944)

மக்கள் இன்னும் விழித்து எழாத நிலையில் நாம் தாக்குதலில் செல்ல முயன்றால் அது சாகசவாதம் (adventurism), மக்கள் விரும்பாத ஒரு விசயத்தை செய்யும்படி நாம் அவர்களை வழிநடத்துவதில் பிடிவாதமாய் நின்றால் நாம் நிச்சயமாக தோல்வி அடைவோம். மக்கள் முன்னேற்றத்தைக் கோரும் போது நாம் முனனேறாவிட்டால் அது வலதுசாரி சந்தர்ப்பவாதம் ஆகும்.
(ஷன்சி – சுய்யுவன் நாளேட்டின் ஆசிரியர்
குழுவுடன் நிகழ்த்திய உரையாடல் – 2 ஏப்ரல் 1947)

எல்லா வேலைகளிலும் கட்டளைவாதம் (Commandism) என்பது தவறானது, காரணம், பொது மக்களின் அரசியல், உணர்வு மட்டத்தைத் தாண்டி, சுயமான மக்கள்திரள் நடவடிக்கை என்ற கோட்பாட்டை அத்துமீறி சிந்திக்காமல் செயலாறறும் நோயை அது பிரதிபலிக்கிறது. நமது தோழர்கள் தாம் புரிந்து கொள்ளும் எல்லாவற்றையும் பரந்துபட்ட மக்களும் புரிந்து கொள்வர் என்று எண்ணிவிடக் கூடாது. மக்கள் அதைப் புரிந்து கொண்டாகளா. இல்லையா. அவர்கள் நடவடிக்கைக்குத் தயாராய் இருக்கின்றார்களா, இல்லையா என்பதை அவர்கள் மத்தியில் சென்று பரிசீலனைகள் நடத்துவதன் மூலம் தான் அறியமுடியும்.

நாம் இப்படி செய்தால் கட்டளைவாதத்தைத் தவிர்க்க முடியும். எல்லா வேலைகளிலும் வால்வாதமும் தவறானது. காரணம் அது மக்களின் அரசியல் உணர்வு மட்டத்திற்குக் கீழே தாழ்ந்து, மக்கள் முன்னேற தலைமைதாங்கும் கோட்பாட்டை அத்துமீறி, காலங்கடத்தும் நோயைப் பிரதிபிலிக்கின்றது. நமது தோழகள் நாம் புரிந்து கொள்ளாத ஒன்றை மக்களும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று எண்ணி விடக்ககூடாது.

பல சந்தர்ப்பங்களில், பரந்துபட்ட மக்கள் நம்மையும் தாண்டிச் சென்று, மேலும் முன்னேற ஆவலாய் இருக்கும் அதே வேளையில், நமது தோழர்கள் மக்களின் தலைவர்களாய் செயல்படாமல், சில பின்தங்கிய நபர்களின் கருத்துகளைப் பிரதிபலித்து அவற்றைப் பரந்துபட்ட மக்களின் கருத்துகளாகப் பிழைபடக் கருதி பின்தங்கிய நபர்களின் வாலில் செல்கிறார்கள்.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1945)

சில இடங்களில் நமது தலைமை நிறுவனங்களிலுள்ள சிலர் கட்சியின் கொள்கைகளைத் தலைவர்கள் மட்டும் அறிந்தால் போதும், மக்கள்திரள் அறிவது அவசியமில்லை என்று எண்ணுகின்றனர். நமது வேலையில் சிலவற்றை நன்றாகச் செய்ய முடியாமல் இருப்பதன் அடிப்படைக் காரணங்களில் இது ஒன்றாகும்.
(ஷன்சி – சுய்யுவன் நாளேட்டின் ஆசிரியர்
குழுவுடன் நிகழ்த்திய உரையாடல் – 2 ஏப்ரல் 1947)


எல்லா மக்கள்திரள் இயக்கங்களிலும் ஊக்கமான ஆதரவாளர்கள் எத்தனைப் பேர், எதிர்ப்பாளர்கள் எத்தனை பேர், நடுநிலையாளர்கள் எத்தனை பேர் என்பதை அடிப்படையில் பரிசீலனை செய்து, ஆராய வேண்டும். ஆதாரமின்றி அகநிலை ரீதியாகப் பிரச்சினைகளைத் தீர்மானிக்கக் கூடாது.
(கட்சி கமிட்டியின் வேலை முறைகள் – 13 மார்ச் 1949)

கட்சியின் கொள்கையை மக்களின் செயலாக மாற்றுவதில் சிறந்து விளங்கவது, நாம் நடத்தும் ஒவ்வொரு இயக்கத்தையும், ஒவ்வொரு போராட்டத்தையும் பற்றி நமது தலைமை ஊழியர்கள் மாத்திரமல்ல, பரந்துபட்ட மக்களும் கிரகித்து தேர்ச்சி பெறச் செய்வதில் திறமை பெற்றிருப்பது- இதுவே மார்க்சிய லெனினியம் தழுவிய தலைமைக் கலை, நமது வேலையில் நாம் தவறு இழைக்கின்றோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் ஓர் எல்லைக் கோடு இது.
(ஷன்சி – சுய்யுவன் நாளேட்டின் ஆசிரியர்
குழுவுடன் நிகழ்த்திய உரையாடல் – 2 ஏப்ரல் 1947)

தலைமைக்குழு எவ்வளவு உற்சாகமாயிருந்த போதிலும் அதன் நடிவடிக்கை மக்களின் உற்சாகத்துடன் இணைக்கபடாவிட்டால், அது ஒரு சில நபர்களின பயனற்ற முயற்சியாகவே இருக்கும். மறுபுறம் பரந்துபட்ட மக்கள் மட்டும் ஊக்கமாக இருந்து மக்களின் நடவடிக்கையைத் தகுதியான முறையில் ஒழுங்கு செய்ய ஒரு பலமான தலைமைக்குழு இல்லாவிட்டால், அந்த உற்சாகம் நீண்டகாலம் நீடித்திருக்க முடியாது, சரியான திசையில் செலுத்தப்பட முடியாது, ஒருமேல் மட்டத்திற்கு உயர்த்தபபட முடியாது.
(தலைமை முறை பற்றிய சில பிரச்சினைகள் – 1 ஜீன் 1943)




No comments:

Post a Comment