Friday 22 December 2017

மதத்தால் மயக்குண்ட நிலையிலிருந்து தொழிலாளிககளையும் விவசாயிகளையும் விழித்தெழச் செய்வது பற்றி லெனின்

“பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியினது போர்க்குணம் கொண்ட நாத்திக இலக்கியத்தை மக்களிடையே பெருவீத அளவில் வினியோகித்துப் பரப்புவதற்காக மொழி பெயர்த்திடும்படி நெடுங் காலத்துக்கு முன்பு எங்கெல்ஸ் அக்காலத்தியப் பாட்டாளி வர்க்கத் தலைவர்களுக்கு ஆலோசனை கூறினர். இது நாள்வரை நாம் இதைச் செய்தாகவில்லை, நாம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் இதைச் சொல்லியே ஆக வேண்டும் (புரட்சிகர சகாப்தத்தில் ஆட்சியதிகாரம் கைப்பற்றுவது கடினமல்ல, ஆனால் இந்த ஆட்சியதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொள்வது மெத்தக் கடினம் என்பதற்குரிய எண்ணற்ற நிரூபணங்களில் ஒன்றாகும் இது). நமது அசட்டைக்கும் செயலின்மைக்கும் திறனின்மைக்கும் சால்ஜாப்பு கூறும் பொருட்டு எல்லா வகையான "உன்னத'' காரணங்களும் எடுத்துரைக்கப்படுகின்றன; உதாரணமாய், பதினெட்டாம் நூற்றண்டின் பழைய நாத்திக இலக்கியம் பழமைப்பட்டுவிட்டது, விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததாகவும் சிறுபிள்ளைத்தனமானதும் ஆகிவிட்டது என்றெல்லாம் காரணம் கூறப்படுகிறது.

இத்தகைய போலியான விஞ்ஞானக் குதர்க்கத்தைக் காட்டிலும் மோசமானது எதுவும் இல்லை; பகட்டுப் புலமையை அல்லது மார்க்சியத்தைப் பற்றிய அறவே தவரறான உணர்வை மூடிமறைக்கவே இந்தக் குதர்க்கம் பயன்படுகிறது. பதினெட்டாம் நூற்றண்டின் புரட்சியாளர்களுடைய நாத்திக நூல்களில் விஞ்ஞானத்துக்கு ஒவ்வாததும் சிறுபிள்ளைத்தனமானதும் நிறைய இருப்பது மெய்தான். ஆனால் இந்நூல்களின் பதிப்பாளர்கள் இவற்றைச் சுருக்கி வெளியிடுவதையும், பதினெட்டாம் நூற்றண்டின் இறுதிக்குப் பிற்பாடு மதங்களைப் பற்றிய விஞ்ஞான விமர்சனத்தில் மனித குலம் கண்டிருக்கும் முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டியும், இப்பொருள் குறித்து அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள புத்தகங்களைக் குறிப்பிட்டும், இன்ன பிற விவரங்களைக் கூறியும் சுருக்கமான பின்னுரைகளை இந்நூல்களுக்கு அளிப்பதையும் யாரும் தடுத்து நிற்கவில்லை. கோடிக் கணக்கான மக்கள் (முக்கியமாய் விவசாயிகளும் கைத்தொழிலாளர்களும்), நவீன காலச் சமுதாயம் அனைத்தாலும் இருளிலும் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் வதையும்படி இருத்தப்பட்டிருக்கும் இவர்கள் கலப்பற்ற தூய மார்க்சியப் போதமெனும் நேரான பாதையிலேதான் இந்த இருளிலிருந்து விடுபட்டு வெளியே வர முடியுமென நினைப்பது, மார்க்சியவாதி ஒருவர் புரியக்கூடிய மிகப் பெரிய, மிகக் கடுந்தவறாகிவிடும்.

இந்த வெகுஜனங்களை நாட்டங் கொள்ளும்படிச் செய்வதற்காகவும், மதத்தால் மயக்குண்ட நிலையிலிருந்து இவர்களை விழித்தெழச் செய்வதற்காகவும், மிகப் பல்வேறுபட்ட கோணங்களிலிருந்தும் மிகப் பல்வேறு பட்ட வழிகளிலும் இவர்களை உசுப்பிவிடுவதற்காகவும், இன்ன பிறவற்றுக்காகவும், இவர்களுக்கு நாம் மிகப் பல் வேறுபட்ட நாத்திகப் பிரசார வெளியீடுகளும் கிடைக்கச் செய்ய வேண்டும்; வாழ்க்கையின் மிகப் பல்வேறுபட்ட துறைகளிலிருந்துமான உண்மைகளை இவர்களுக்கு அறிமு கப்படுத்த வேண்டும்; சாத்தியமான எல்லா வழிகளிலும் இவர்களை அணுகியாக வேண்டும்.”

(போர்க்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து)

No comments:

Post a Comment