Thursday 28 December 2017

5. யுத்தமும சமாதானமும் - மா சே துங்

“யுத்தம் என்பது வர்க்கங்கள், தேசங்கள், நாடுகள், அரசியல் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையில் நிலவும் முரண்பாடுகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு வளர்ச்சியடைந்ததும், அவற்றைத் தீர்ப்பதற்குரிய அதி உயர்ந்த போராட்ட வடிவம். தனிவுடைமை முறையும், வர்க்கங்களும் தோன்றியது முதல் யுத்தமும் இருந்து வருகின்றது”
(சீனப்புரட்சி யுத்தத்தில் யுத்த தந்திரம்ப் பிரச்சினைகள்- டிசம்பர் 1939)

“யுத்தங்களில் நீதியான யுத்தங்கள் அநீதியான யுத்தங்கள் என இரண்டு வகை உண்டு என்பதை வரலாறு காட்டுகின்றது. முற்போக்கான எல்லா யுத்தங்களும் நீதியானவை, முற்போக்கைத் தடுக்கும் எல்லா யுத்தங்களும் அநீதியானவை. கம்யூனிஸ்டுகளாகிய நாம் முற்போக்கைத் தடுக்கின்ற அநீதியான யுத்தங்கள் எல்லாவற்றையும் எதிக்கின்றோம். ஆனால் முற்போக்கான, நீதியான யுத்தங்களை நாம் எதிர்ப்பதில்லை. கம்யூனிஸ்டுகளாகிய நாம் நீதியான யுத்தங்களை எதிர்க்காதது மாத்திரமல்ல, அவற்றில்  ஊக்கமாகப் பங்கும் ஆற்றுகின்றோம். அநீதியான யுத்தங்களைப் பொறுத்தவரையில், முதலாவது உலகப் பெரும் போர் ஒரு உதாரணமாகும். இதில் இரு தரப்பும் ஏகாதிபத்திய நலன்களுக்காகப் போரிட்டன. எனவே உலக கம்யூனிஸ்டுகள் அனைவரும் அந்த யுத்தத்தை உறுதியாக எதிர்த்தார்கள். இத்தகைய ஒரு யுத்தத்தை எதிர்க்கும் வழி, அது வெடித்தெழுவதற்கு முன், அதைத் தடுக்கச் சாத்தியமான அனைத்தையும் செய்வதே. அது ஒருக்கால் வெடித்ததும், சாத்தியமான போதெல்லாம் யுத்தத்தை யுத்தத்தால் எதிர்க்க வேண்டும். அநீதியான யுத்தத்தை நீதியான யுத்தத்தால் எதிர்க்க வேண்டும்”
(நீண்டகால யுத்தம் பற்றி- மே 1938)

“நாம் யுத்தத்தை ஒழிப்பதற்காக வாதாடுபவர்கள். நாம் யுத்தத்தை விரும்பவில்லை, ஆனால் யுத்தத்தை யுத்தத்தின் மூலம் தான் ஒழிக்க முடியும். துப்பாக்கியை ஒழிக்க வேண்டுமானால், துப்பாக்கி ஏந்துவது அவசியம்”
(யுத்தமும் யுத்ததந்திரமும பற்றிய பிரச்சினைகள் -6 நவம்பர் 1938)

“நாம் சமாதானத்தை விரும்புகின்றோம், ஆனால் ஏகாதிபத்தியம் ஒரு போரை நடத்துவதில் விடாப்பிடியாக நின்றால், நாமும் உறுதியான தீர்மானத்துடன் போரை நடத்திவிட்டு, பின்னர் நிர்மாணத்தில் ஈடுபடுவதன்றி, வேறு வழியில்லை. நீ தினம் தினம் யுத்தத்திற்கு அஞ்சினால், பின்னர் யுத்தம் வரும்போது யாது செய்வாய்? கீழ்காற்று மேல்காற்றை வெல்கிறது, யுத்தம் வெடிக்க மாட்டாது என்று நான் முதலில் கூறினேன். இப்போது யுத்தம் வெடித்தால் ஏற்படும் நிலைமை பற்றி இந்த விளக்கங்களை மேலும் கொடுத்துள்ளேன். இவ்வாறு இரண்டு சாத்தியப்பாடுகளும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.”

(கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் மாஸ்கோ மாநாட்டு உரை – 18 நவம்பர் 1958)

No comments:

Post a Comment