Monday 4 December 2017

நாடாளுமன்றம் வரலாற்று வழியில் காலாவதியானதே, ஆனால் அரசியல் வழியில் (நடைமுறை வழியில்) காலாவதியானதா? என்று லெனின் கேள்வி எழுப்புகிறார்.

7.முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா?

“மகா அலட்சியமாய், கிஞ்சிற்றும் பொறுப்புணர்வின்றி, ஜெர்மன் "இடதுசாரி' கம்யூனிஸ்டுகள் இக்கேள்விக்கு எதிர்மறையில் பதிலளிக்கிறார்கள். அவர்களுடைய வாதங்கள் யாவை? மேலே எடுத்துரைக்கப்பட்ட மேற்கோளில் பார்த்தோம்:

“…வரலாற்று வழியிலும் அரசியல் வழியிலும் காலாவதியாகிவிட்ட நாடாளுமன்றப் போராட்ட வடிவங்களுக்குச் சரிந்து செல்லும் எவ்வகையான பின்னடைவையும். தீர்மானமாய் நிராகரித்தே ஆக வேண்டும். ...”*

நகைக்கத்தக்க ஆடம்பரத்துடன் இது கூறப்படுகிறது. கண்கூடாகவே தவறானது இது. நாடாளுமன்ற முறைக்குச் சரியும் பின்னடைவு” என்கிறார்கள்! ஜெர்மனியில் ஏற்கெனவே சோவியத் குடியரசு ஒன்று உதித்துவிட்டதா, என்ன? அப்படி ஒன்றும் தெரியவில்லையே! “சரியும் பின்னடைவு” என்பதாகப் பேசுகிறார்களே, எப்படி அது? பொருளற்றச் சொல்லடுக்கேயன்றி வேறு என்ன?

நாடாளுமன்ற முறை வரலாற்று வழியில் காலாவதி யாகிவிட்ட” ஒன்றுதான். பிரசார அர்த்தத்தில் இது மெய்தான். ஆனல் நடைமுறையில் அதனை வெற்றி கொள்ளும் நிலையை வந்தடைய இன்னும் நெடுந் தொலைவு உள்ளதென்பது யாவரும் அறிந்ததே. முதலாளித்துவத்தையும் ''வரலாற்று வழியில் காலாவதியாகி விட்ட’’ ஒன்றாக மிகப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, முழு நியாயத்துடன் அறிவித்திருக்கலாம். ஆயினும் அது, முதலாளித்துவத்தின் அடிப்படைமீது மிக நீண்ட, மிகவும் விடாப்பிடியான ஒரு போராட்டத்துக்கான அவசியத்தை நீக்கிவிடவில்லையே.”

(“இடதுசாரி” கம்யூனிசம்-இளம் பருவக்கோளாறு)

No comments:

Post a Comment