Sunday, 12 July 2015

மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் இரண்டாம் மூன்றாம் தொகுதியை படிப்பது பற்றி- எங்கெல்ஸ்

(எங்கெல்ஸ் எழுதய இந்தக் கடிதம் மார்க்சின் மூலதன நூலின் இரண்டாம் மூன்றாம் பாகத்தை படிப்பது பற்றி பேசுகிறது. எங்கெல்ஸ் இந்த இரண்டு பாகங்களில் உள்ள சில குறிப்பிட்ட அத்தியாயங்களை கவனமாகப் படிக்க வேண்டும், இரண்டாம் நிலையிலானதை மேலோட்டமாக படிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் ஒரு முழுமையான கருத்தைப் பெற்றபின், விடுபட்டதை சேர்த்து முழுமையாகப் படிக்கும் போது எளிதாக இருக்கும் என்கிறார். )

தமிழ் மொழியாக்கம்- மகேஷ் ராமநாதன்
 
(வியன்னாவில் இருக்கும் விக்டர் ஆட்லருக்கு (Victor Adler) எங்கெல்ஸ் எழுதிய கடிதம்)

(சுருக்கம்)
லன்டன், மார்ச் 16, 1895

...நீங்கள் சி​றையில் காலத்​தைத் தள்ள மூலதனத்தின் 2 மற்றும் 3 [பாகங்க​ளை] ​தேர்ந்​தெடுத்தால், நான் அ​தை எளிதாக்க உங்களுக்குச் சில குறிப்புக​ளைத் தருகி​றேன்.

பாகம் 2, பகுதி 1. அத்தியாயம் 1 முழு​மையாகவும், அத்தியாயங்கள் 2 மற்றும் 3 மிகவும் ​மே​லோட்டகமாகவும் படிக்கலாம்; அத்தியாயம் நான்​கை அதிக கவனமாகப் படிக்கவும் அது ஒரு ​சுருக்கமான தொகுப்பாகும் (summary); 5 மற்றும் 6 எளி​மையான​வை, அதிலும் குறிப்பாக 6 இரண்டாம் நிலையிலானதைப் (secondary matters) பற்றிப் ​பேசுகிறது.

பகுதி 2. அத்தியாயங்கள் 7-9 முக்கியமான​வை. 10 மற்றும் 11 மிக முக்கியமான​வை. 12,13,14ம் அவ்வா​றே. மறுபுறத்தில் 15,16 மற்றும் 17​​-யை  முதன்மு​றை ​வேகமாக ​மே​லோட்டமாக(skimmed) படித்துவிடுதல் ​போதுமானது.

பகுதி 3 முதலாளித்துவ சமூகத்தில் சரக்கு மற்றும் பணத்தின் முழு​மையான சுற்​றோட்டம் குறித்து பிசி​யோகிராட்ஸ்* காலம் துவங்கி இன்று வ​ரை வந்துள்ளவற்றில் மிக மிகச்சிறப்பான முதல் விவர​ணை. உள்ளடக்கத்தில் மிகச்சிறப்பானது ஆனால் வடிவத்தில் அச்சமூட்டக்கூடிய வகையில் கடினமானது ஏ​னென்றால் (1) இரு ​வெவ்​வேறு மு​றைகளின்படி இயங்கும் இரு கண்​ணோட்டங்கள் இ​ணைத்துக் ​கொடுக்கப்பட்டுள்ளது (2) முதல் கண்​ணோட்டம், நீண்ட நாட்களாக ​தொடர்ச்சியாக தூக்கமின்​மையால் பாதிக்கப்பட்ட மூ​ளையின் ஒரு ​நோய்வாய்ப்பட்ட நி​லையினால் உந்தித்தள்ளப்பட்டு அ​டைந்த முடிவாகும். முதன்மு​றையாக பாகம் 3ன் ​வே​லை​யை முடிக்கும்​பொழுது, இ​தை நான் க​டைசியில் ​வைத்திருக்க ​வேண்டும். உங்களு​டைய ​வே​லையிலும் கூட, இது உடனடியாகச்  ​செய்ய ​வேண்டிய மிக அவசியமான ஒன்று அல்ல.

பிறகு மூன்றாவது  பாகம், இதில் முக்கியமான​வை: பகுதி 1ல், அத்தியாயங்கள் 1-4; ​பொதுவான ​தொடர்புகள் (general connections) ​பொறுத்தவ​ரை கு​றைந்த முக்கியத்துவம் உ​டைய​வை, மறுபுறத்தில், அத்தியாயங்கள் 5,6,7, ஆகியவற்றிற்கு முதன்மு​றை அதிக ​நேரம் ​செலவழிக்கத் ​தே​வையில்​லை.

பகுதி 2. மிக முக்கியமான​வை. அத்தியாயங்கள் 8,9,10. 11 மற்றும் 12 ஆகியவற்​றை ​மேலோட்டமாகவும் ​வேகமாகவும் கடக்கலாம்.

பகுதி 3,  மிக முக்கியமான​வை: 13-15 அ​னைத்தும்.

பகுதி 4. அ​தே​போல 16-20 மிக முக்கியமான​வையும், அ​தே ​நேரத்தில் எளி​மையாக படிக்கக்கூடிய​வையும் ஆகும்.

பகுதி 5. அத்தியாயங்கள் 21-27, மிக முக்கியமான​வை. அத்தியாயம் 28, அந்தளவிற்கு முக்கியத்துவம் கு​றைவானது. அத்தியாயம் 29 முக்கியமானது. அத்தியாயங்கள் 30-32 முழுவதும் உங்களு​டைய ​நோக்கத்திற்கு முக்கியமற்ற​வை; 33 மற்றும் 34 ஆகிய​வை காகிதப் பணம் குறித்து ​பேசப்படும் வ​கையில் முக்கியமான​வை; 35 சர்வ​தேச ​செலாவணி விகிதங்கள் குறித்த வ​கையில் முக்கியமானது, 36 உங்களுக்கு மிகுந்த உற்சாகம் தரக்கூடியதும் எளி​மையாகப் படிக்கக் கூடியதுமாகும்.

பகுதி 6. நில வாட​​கை. 37 மற்றும் 38 முக்கியமான​வை. சற்றுக்கு​​றைவான​வை, ஆனாலும் 39 மற்றும் 40 அவற்​றோடு  படிக்க ​வேண்டிய​வை. 41-43 ஆகியவற்​றை அதிகம் தவிர்த்துவிடலாம் (வாட​கை வித்தியாசங்கள் 2. குறிப்பான வ​கைகள்). 44-47 மீண்டும் முக்கியமான​வை மற்றும் மிக எளிதாக படிக்கக் கூடிய​வை.
பகுதி 7. மிக நல்லது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிதறுண்டும் தூக்கமின்​மையின் சுவடுகள் நி​றைந்தும் உள்ளது.

இப்படியாக, நீங்கள் முக்கியமானவற்​றை முழு​மையாகவும் கு​றைவான முக்கியமுள்ளவற்றை ​மே​லோட்டமாகவும் இந்த  குறிப்புகளின் அடிப்ப​​டையில் (பாகம் 2​ன் முக்கிய விசயங்க​ளை முதலில் மீண்டும் படிப்பது சிறந்தது) துவங்குவீர்களானால், நீங்கள் ஒரு முழு​மையான கருத்​தை ​பெற்று பின்னால் முதலில் தவிர்த்த பகுதிக​ளை எளிதாக முடித்துவிடலாம்

No comments:

Post a Comment