Sunday 12 July 2015

5. மதத்தினுடைய தேவையின்மையும் மறைவும்

லெனின்:-
மதக்கேடுகளின் மிக ஆழமான மூலாதாரம், இல்லாமையும் கல்லாமையும் ஆகும். இந்தத் தீங்குகளைத்தாம் நாம் எதிர்த்து நின்று சமாளித்தாக வேண்டும்
உழைக்கும் மாதர்களின் முதலாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை

எங்கெல்ஸ்:- பத்தாண்டுகளுக்கு முன்னால் மட்டுமே அப்பொழுது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட இயக்கம் பற்றிய மாபெரும் அடிப்படை விதி வெறும் ஆற்றலின் அழியாநிலை விதியாக மட்டுமே, இயக்கத்தின் அழியாத் தன்மை மற்றும் படைக்கவியலாத் தன்மையின் வெளியீடாகவுமே, அதாவது அதன் அளவு அம்சத்தில் மட்டுமே கருதிப் பார்க்கப்பட்டு வந்தது. இந்தக் குறுகிய எதிர்மறைக் கருத்தோட்டம் மேலும் மேலும் ஆற்றலின் மாற்றத்தைப் பற்றிய நேர்நிலைக் கருத்திற்கு இடமளிக்க நேர்ந்தது, இந்த இயக்கப் போக்கின் குணாம்ச உள்ளடக்கம் முதன் முதலாகத் தன்நிலைக்கு வருகிறது. உலகியலுக்கு அப்பாற்பட்ட படைப்பாளரின் கடைசி எச்சம் ஒழிக்கப்படுகிறது. இயக்கத்தின் அளவு (ஆற்றல் எனப்படுவது) இயக்கம் சார்ந்த ஆற்றலிலிருந்து (யாந்திரிக இயக்கம்) மின்சக்தி  வெப்பம், ஒடுக்க நிலை ஆற்றலாகவும் அது மறுபுறமும் மாற்றப்படும் பொழுது அது ஏதோ புதியது என்று இனிமேல் பிரசாரம் செய்ய வேண்டுவதில்லை. மாற்றமடைதலின் உண்மை நிகழ்ச்சிப் போக்கு பற்றியதான மிகவும் கருத்து நிறைந்த ஆராய்ச்சிக்குரிய இயற்கை பற்றிய சகல அறிவையும் உள்ளடக்கிய அறிவைக் கொண்ட அந்த மாபெரும் அடிப்படை நடைமுறையின் ஏற்கெனவே பெறப்பட்ட அடித்தளமாகச் செயல்படுகிறது.
-டூரிங்குக்கு மறுப்பு
எங்கெல்ஸ்:-
 .. இயற்கையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இன்று, சென்ற நூற்றாண்டில் இருந்ததைவிட, மிக உறுதியானதோர் அடித்தளத்தின் மீது நிற்கிறது. அந்தச் சமயத்தில் வான்கோள்களுடையவும், புவி ஈர்ப்பின் ஆளுகைக்குட்பட்ட நிலவுலகத்துத் திடப் பொருட்களுடையவும் இயக்கம் மட்டுமே முழுமையாக அறியப்பட்டு இருந்தது, ஏறக்குறைய இரசாயனவியலின் துறைமுழுவதும், உயிர்ப்புள்ள இயற்கை முழுவதும் மர்மமாகவும், புரியப் படாமலும் இருந்தன. இன்று இயற்கை முழுவதுமே, இடைத் தொடர்புகளினுடைய மாற்றப் போக்குகளின் ஓர் அமைப்பாக நம்முன்னே விரிந்து கிடக்கிறது, அதனுடைய பிரதான லட்சணங்களாவது இன்று குறைந்த பட்சம் விளக்கப்பட்டு புரியப்பட்டுள்ளன. எப்படியிருப்பினும், இயற்கையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் என்றால், எவ்வித அயல் கலப்புமின்றி, இயற்கையை உள்ளதை உள்ளவாறு எளிய முறையில் கருதுவது என்பதே பொருள்.
இயற்கையின் இயக்கவியல்

எங்கெல்ஸ்:-
“ .. மனிதர்கள் புறம்பான, இயற்கை மற்றும் சமுதாய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்வரையில், அவர்கள் மீதுஆதிக்கம் செலுத்தும் இந்தச் சக்திகளுடனான மனிதர்களுடைய உறவின் நேரடியான அதாவது உணர்ச்சிபூர்வமான வடிவில் சமயம் தொடர்ந்து நிலவ முடியும். எனினும், நிலவும் முதலாளித்துவ சமுதாயத்தில் மனிதர்கள் தம்மாலேயே உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளால், அவர்களே உண்டாக்கியுள்ள உற்பத்திச் சாதனங்களால் புறம்பான ஒரு சக்தியின் மூலம் போன்று ஆதிக்கம் செலுத்தப்படுகின்றனர். எனவே, சமயத்தைத் தோற்றுவிக்கும் பிரதிபலிக்கிற செயல்பாட்டின் உண்மையான அடிப்படை தொடர்ந்து நிலவுகிறது, அதோடு சேர்ந்து அதன் சமயப் பிரதிபலிப்பும் நிலவுகிறது.

இந்தப் புறம்பான ஆதிக்கத்தின் தற்செயலான தொடர்பு குறித்து முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட அளவு நுண்ணறிவினை வழங்கியிருந்த போதிலும் இதனால் முக்கியமான வித்தியாசம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தால் பொதுவாக நெருக்கடிகளைத் தடுக்க முடியாது. தனிப்பட்ட முதலாளிகளை நஷ்டம், திரும்பிவராத கடன், வக்கற்ற வகையற்ற நிலை ஆகிறவற்றிலிருந்து பாதுகாக்கவும் முடியாது, தனிப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமைக்கு எதிராகப் பாதுகாக்கவும் முடியாது. மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் (அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அன்னிய ஆதிக்கம்) ஒன்று கட்டளையிடுகிறது என்பது இன்னும் மெய்யாகவே உள்ளது.

முதலாளித்துவப் பொருளாதார விஞ்ஞானத்தைக் காட்டிலும் மேலும் கூடுதலாகவும் அதிக ஆழமாகவும் சென்றதாயினும் சரி, வெறும் அறிவு சமூக சக்திகளை சமூகத்தின் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டு வருவதற்குப் போதுமானதல்ல. எல்லாவற்றுக்கும் மேல் இதற்கு அவசியமாக இருப்பது ஒரு சமூதாயச் செயலே. இந்தச் செயல் நிறைவேற்றப்படும்பொழுது, சமுதாயம் எல்லா உற்பத்தி சாதனங்களின் உடைமைகளையும் மேற்கொண்டு, அவற்றைத் திட்டமிட்ட அடிப்படையில் பயன்படுத்துவது மூலம் தன்னையும் தனது உறுப்பினர்கள் எல்லோரையும் அவர்களாலேயே உண்டாக்கப்பட்டு அவர்களை (வெல்ல) முடியாத அன்னிய சக்தியாக எதிரிட்டு நிற்கும் இந்த உற்பத்திச் சாதனங்களால் அவர்கள் தளைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் பொழுது.- மனிதன் நினைப்பது மட்டுமின்றி செயல்படவும் செய்கிறான்- அப்பொழுது மட்டுமே சமயத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் கடைசி அன்னிய சக்தி மறையும், அதனுடன் சமயப் பிரதிபலிப்பே மறையும். இதற்குக் காரணம் பிறகு பிரதிபலிப்பதற்கென்று எதுவும் மீதமாக இருக்காது

டூரிங்குக்கு மறுப்பு

No comments:

Post a Comment