Sunday 12 July 2015

மார்க்சியம் - லெனின்





"மார்க்சின் கருததுக்கள், போதனைகள் அடங்கிய முழுத் தொகுப்பே மார்க்சியம். 19ம் நூற்றாண்டின் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மனித குலத்தின் மிகவும் முன்னேற்றமடைந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, செம்மை ஜெர்மன் தத்துவியல், செம்மை ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சு புரட்சிப் போதனைகளுடன் இணைந்த பிரெஞ்சு சோசலிஷம் என்பனவாம். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றிற்கு முழுநிறைவு அளித்த மேதைதான் மார்க்ஸ். மார்க்சின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்க முறையில் முரணற்ற தன்மையும் முழுமையும் பெற்றிருப்பவை. அவரது எதிரிகள் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர். இந்தக் கருத்துக்கள் முழுவதுமாகச் சேர்ந்துதான் நவீன காலத்திய பொருள்முதல்வாதமாகவும், நவீன காலத்திய விஞ்ஞான சோசலிஷசமாகவும் அமைந்துள்ளன. இவ்விரண்டும் உலகிலுள்ள நாகரிக நாடுகளிலெல்லாம் தொழிலாளர் இயக்கத்தின் கோட்பாடாகவும் வேலைத்திட்டமாகவும் திகழ்கிறது"

"கார்ல் மார்க்ஸ்" என்பதிலிருந்து    - லெனின்

No comments:

Post a Comment