Friday 17 July 2015

மார்க்சிய பலபிரயோகக் கோட்பாட்டு பற்றி லெனின்

(பலப்பிரயோகத்தை முதன்மையான அடிப்படையான போராட்ட முறையாகக் கருதுவதை எதிர்த்தும் மார்க்சிய பலபிரயோகக் கோட்பாட்டை பற்றியும்)

லெனின்:-.
"
கோட்பாடு ரீதியில் நாம் பயங்கரவாதத்தை (Terror) ஒரு பொழுதும் நிராகரித்ததில்லை, நிராகரிக்கவும் முடியாது. பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கையில் ஒருவகையாகும். அது படைகளின் குறிப்பிட்ட நிலையையும், குறிப்பிட்ட தருணத்தில் முற்றிலும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி இன்றியமையாததாகவும்கூட இருக்கலாம். ஆனால் இவர்களது கூற்றின் சாரம் என்ன? போராட்டத்தின் முழு ஏற்பாட்டுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த வகையில், களம் புகுந்து போர் புரியும் படையின் ஒரு நடவடிக்கையாக இவர்கள் இப்போது பயங்கரவாதத்தைக் கருதாமல், எந்தப் படையுடனும் தொடர்பற்ற விதத்தில், தனித்து நிற்கும் தாக்குச் செயலாகவே அதனைக் கருதிப் பேசுகிறார்கள்.
..
மேலும் இப்போராட்ட முறை தீவிரமாகப் போராடும் வீரர்களின் கவனத்தை, முழு இயக்கத்தின் நலன்களைக் கருதுங்கால் மிகமிக அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த உண்மைக் கடமையிலிருந்து அப்பால் திருப்புகிறது என்றும், அது அரசாங்கச் சக்திகளை அல்ல, புரட்சிச் சக்திகளையே சீர்குலைக்கிறது.
..
தனிப்பட்ட வீரச்செயல்களின் முக்கியத்துவத்தை மறுக்கும் நோக்கம் நமக்குச் சிறிதும் இல்லை. ஆனால் பயங்கரவாதத்தை மிக அதிகமாகப் பயன்படுத்துவதை எதிர்த்தும், அதை முதன்மையான, அடிப்படையான போராட்ட முறையாகக் கருதுவதை எதிர்த்தும் கடுமையாக எச்சரிப்பது நம் கடமை. மேற்சொன்ன கருத்து இப்போது மிகப் பலரை ஈர்த்திருக்கிறது. பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கைகளில் முறையானதொன்றாக ஒரு பொழுதும் இருக்க முடியாது. அதிகமாகச் சொல்லப் போனால், தீர்மானமான தாக்குதலின் வழிதுறைகளில் ஒன்றாக அது பயன்படலாம்."


(எங்கிருந்து தொடங்குவது )

No comments:

Post a Comment