Sunday 12 July 2015

மார்க்சிய தத்துவம்

"தத்துவ முறையிலான சிந்தனை என்பது இயற்கையான திறன் என்ற அளவில் மட்டுமே ஓர் உள்ளார்ந்த பண்பாகும். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தை படித்தாராய்வது தவிர வேறு வழிகள் கிடையாது"
                      - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம்- 462)

தத்துவம்

"தத்துவ அறிஞர்கள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் விளக்கப்படுத்த மட்டுமே செய்துள்ளனர், விஷயம் என்னவோ அதை மாற்றி அமைப்பதாகும்"
மார்க்ஸ் –(ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்)

கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்

மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையில் இருந்து விலகிச் செல்லும ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள்
லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

இயக்கவியல் பொருள்முதல்வாதம்

இந்தக் காலத்தில் பிரபஞ்சமானது பரிணாம வழியில் தோன்றி வளர்வது என்பதான இன்றைய நமது கருத்தோட்டத்தில் படைப்பாளனுக்கோ, ஆண்டானுக்கோ அறவே இடமில்லை. தற்போது நிலவும் உலகு அனைத்தில் இருந்தும் அறவே விலக்கி ஒதுக்கப்பட்ட நிலையில் ஆண்டவன் ஒருவர் இருப்பதாகப் பேசுவது முன்னுக்குப்பின் முரணாக அமைவதோடு, வேண்டும் என்றே வலிந்து முன்வந்து மத நம்பிக்கையுடையோரது மனத்தைப் புண்படுத்தும் செயலாகவே எனக்குத் தோன்றுகிறது
எங்கெல்ஸ்-(கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்-முன்னுரை)

இயக்கவியல் பொருள்முதல்வாதம்

இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒருதலைபட்சம் இல்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும்,  நிரந்தரமாக வளர்ச்சியுற்ற வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக்  காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும்.
 லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

பருப்பொருள்
(Matter)

"இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது"
லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

பருப்பொருளும் இயக்கமும்
(Matter and Motion)

"இயக்கம் என்பது பருப்பொருளின் நிலைநிற்புப் பாங்காகும். இயக்கமின்றி பருப்பொருள் எங்கும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது.
...
இயக்கமில்லாத பருப்பொருள், பருப்பொருள் இல்லாத இயக்கம் போலவே எண்ணிப்பார்க்க இயலாதது. எனவே இயக்கம் பருப்பொருளைப் போலவே படைக்க முடியாதது மற்றும் அழிக்க முடியாதது, ... அதை மாற்ற மட்டுமே இயலும்."
                         - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 89)

விசும்பும் காலமும்
(Space and Time)

"எல்லா வாழ்நிலையின் அடிப்படை வடிவங்களும் விசும்பும் காலமும் ஆகும். காலத்துக்குப் புறம்பாக வாழ்நிலை என்பது, விசும்புக்குப் புறம்பான வாழ்நிலை என்பதன் அளவுக்குப் படுமோசமான அபத்தமாகும்.."
         - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 79)

உலகின் பொருளாயத ஒற்றுமை
(The material unity of the world)

"உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில் அமைந்து இருக்கிறது, ஒருசில ஜாலவித்தைச் சொற்றொடர்களால் இதை நிரூபிப்பிக்கப்படவில்லை, மாறாக தத்துவத்தின் மற்றும் இயற்கை விஞ்ஞானத்தின் நீண்ட சலிப்பூட்டும் வளர்ச்சியேயாகும்"
                     - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 67-68)
உணர்வுநிலை
(Consciousness)

"சமூக வரலாற்றில் செயல்படுவோர் அனைவரும் உணர்வுநிலையினைக் கைவரப்பெற்று, ஆழ்ந்த சிந்தனை அல்லது மனவெழுச்சியுடன் திட்டவட்டமான குறிக்கோள்களை நோக்கிச் செயலாற்றுகிற மனிதர்களாவர். உணர்வுவழியிலான ஒரு நோக்கம் இல்லாமல், திட்டமிட்ட ஒரு குறிக்கோள் இல்லாமல் சமுதாயத்தில் எதுவும் நிகழ்வதில்லை."
எங்கெல்ஸ்-(லுத்விக்  ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்)

இயக்கவியல்
(Dialectics)

இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப்பட்மில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும், நிரந்தரமாக வளர்ச்சியுற்ற வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்வுநிலையை வலியுறுத்தும் போதனையாகும்.
லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

அறிவுத் தோற்றுவாய்
(Origin of knowledge)

"நமக்கு வெளியே பொருட்கள் இருக்கின்றன. நம் புலனறிவுக் காட்சிகளும் கருத்துக்களும் அவற்றின் பிம்பங்கள். இந்த பிம்பங்களைச் சரிபார்த்தலை, உண்மையான மற்றும் போலியான பிம்பங்களுக்கு இடையில் வேறுபடுத்திக் காண்பதை நடைமுறை நிறைவேற்றுகிறது."
லெனின் -(பொருள்முதுல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

உண்மையைப் பற்றிய மார்க்சியக் கோட்பாடு
(The Marxist Theory of Truth)

"பொருள்முதல்வாதிக்கும், கருத்துமுதல்வாதத் தத்துவஞான ஆதரவாளருக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு பொருள்முதல்வாதி புலனுணர்ச்சி, புலனறிவுக்காட்சி, கருத்து மற்றும் பொதுவாக மனிதனுடைய உணர்வுநிலை புறநிலையான எதார்த்தத்தின் பிம்பம் என்று கருதுகிறார்கள் என்ற உண்மையில் அடங்கியிருக்கிறது. நம்முடைய உணர்வுநிலையினால் பிரதிக்கப்படுகின்ற இப்புறநிலை எதார்த்தத்தின் இயக்கமே உலகம். கருத்துக்கள், புனறிவுக் காட்சிகள், இதரவற்றின் இயக்கத்துடன் எனக்கு வெளியே இருக்கின்றபருப்பொருளின் இயக்கம் பொருந்துகிறது"
லெனின் - (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

வரலாற்றியல் பொருள்முதல்வாதம்

செயல் வன்மைவாய்ந்த சமூக சக்திகள், நாம் அவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலும் இருக்கும் வரை இயற்கை சக்திகளைப் போலவே கண் மூடித்தனமாகவும், பலவந்தமாகவும், நாசகரமாகவும் செயல்படுகின்றன. ஆனால் அவற்றை நாம் புரிந்து கொண்டும், அவற்றின் செயலையும் திசை வழியையும் பிறகு அவற்றை மேலும் மேலும் நமது சித்தத்துக்கு கீழ்ப்படியச் செய்து, அவற்றைக் கொண்டு நமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வது முற்றிலும் நம்மேயே பொறுத்ததாகும்.
-எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு பக்கம்-392)

வரலாற்றியல் பொருள்முதல்வாதம்

"எந்த ஒரு சமூக அமைப்பும், எல்லா உற்பத்திச் சக்திகளும் போதுமான அளவு வளாச்சியடைவதற்கு முன்பாக அழிவதில்லை, பழைய சமூக அமைப்பிற்குள் புதிய உயர்வான உற்பத்தி உறவுகளுக்கான பொருளாயத நிலைமைகள் ஏற்படுவதற்கு முன்பாகப் புதியன பழையவற்றின் இடத்தை ஒருபோதும் மேற்கொள்வதில்லை. எனவே மனிதயினம் எப்பொழுதும் தன்னால் நிறைவேற்றக் கூடிய கடமைகளையே தனக்கு விதித்துக் கொள்கிறது எனலாம், ஏனெனில் கவனமாகப் பார்க்கும் போது, ஒரு கடமையை நிறைவேற்றுவதற்கான பொருளாயத நிலைமைகள் ஏற்கெனவே இருக்கும் பொழுது அல்லது உருவாகிக் கொண்டிருக்கும் பொழுது தான் அந்தக் கடமையே தோன்றுகிறது எனத் தெரிகிறது"

மார்க்ஸ்-அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை

மார்க்சுக்கு முன்பானவர்களின் சமூகம் பற்றிய கருத்துக்கள்

ஆரம்பக் காலத்திய சோஷலிசம் கற்பனாவாத சோஷலிசமாகத்தான் இருந்தது. அது முதலாளித்துவச் சமூகத்தை விமர்ச்சித்தது, கண்டித்தது, சபித்தது, அந்தச் சமூகத்தை ஒழிக்க வேண்டும் என்று கனவு கண்டது, அதைவிட மேலான ஓர் அமைப்புமுறையைப் பற்றி ஆகாயக் கோட்டை கட்டி வந்தது, சுரண்டுவது ஒழுக்கக்கேடான செயல் என்று பணக்காரர்களுக்கு உணர்த்த முயற்சித்தது
லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் பாடப்பொருள்

"வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது (மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின்) உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும்தான், சமூகக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும். .... இந்தக் கண்ணோட்டத்தின்படி எல்லாச் சமூக மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் வினியோக முறைகளின் மாற்றங்களில் கண்டிறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்லநிலையான சாசுவத உண்மை மற்றும் சாசுவத நீதி குறித்து மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல. இவற்றை அந்தந்த சகாப்தத்தின் பொருளியலில் கண்டிறிய வேண்டுமே அல்லாது தத்துவத்தில் அல்ல"
- எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 373)

அடித்தளமும் மேற்கட்டமைப்பும்

"உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது."
மார்க்ஸ்- (அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு - முன்னுரை )

அடித்தளம்- பொருள் உற்பத்தியே சமூக வளர்ச்சியின் அடிப்படை

"மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையிலிருந்து பார்த்து இயற்கையின் நிகழ்சிகளுக்கு எல்லாம் அடிப்படையாகப் பொருளாயதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்."
லெனின் -(பிரெடெரிக் எங்கெல்ஸ் - வாழ்க்கைச் சுருக்கம்)

மேற்கட்டமைப்பு - சமூக உணர்வுநிலையின் வடிவங்கள்

"மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதிலே மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது"
லெனின் -(பிரெடெரிக் எங்கெல்ஸ் - வாழ்க்கைச் சுருக்கம்)

அரசியல்

"தொழிலாளர்கள் தடையின்றி சுதந்திரமாய்க் கூட்டங்கள் நடத்தவும் சங்கங்கள் அமைக்கவும் தமது சொந்த செய்சியேடுகளைப் பெற்றிருக்கவும் தேசியச் சட்டமன்றங்களுக்குத் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பவும் உரிமையுடையோராய் இருந்தாலன்றி, ஜெர்மனியிலும் ஏனை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலார்களுக்கு இருந்து வரும் இந்த உரிமைகளை உடையோராய் இருந்தாலன்றி, எந்தப் பொருளாதாரப் போராட்டமும் தொழிலாளர்களுக்கு நீடித்த மேம்பாட்டைக் கிடைக்கச் செய்யவும் முடியாது, பெரிய அளவில் நடத்தப்படவுங்கூட முடியாது. ஆனால் இந்த உரிமைகளைவென்று கொள்ள வேண்டுமாயின் அரசியல் போராட்டம் நடத்துவது இன்றியமையாததாகும்."
லெனின் -(நமது வேலைத்திட்டம்).
மதம்

"மதம் என்பது துவக்கமுதலே மெய்யான அவசியத்தில் இருந்து எழும் அறிவெல்லைகடந்ததான உணர்வுநிலையாகும்"
மார்க்ஸ், எங்கெல்ஸ்-(ஜெர்மன் சித்தாந்தம்)

பண்பாடு

"புதிய பாட்டாளி வர்க்கப் பண்பாடு ஒன்று கண்டுபிடித்து, அளிக்கப்பட வேண்டாம், தற்போதுள்ள பண்பாட்டின் சிறந்த முனமாதிரிப் படைப்புகளும் பாராம்பரியங்களும் விளைவுகளும் வளர்க்கப்படுதல் வேண்டும். மார்க்சிய உலகக் கணோட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கால கட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள், போராட்டம் ஆகியவற்றின் நோக்கு நிலையிலிந்து இவை வளர்க்கப்பட வேண்டும்."
லெனின் -(பாட்டாளி வர்க்க பண்பாடு பற்றிய தீர்மானத்தின் தோராய நகல்)

கலைகள்

"உண்மையில் இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தின் பொது குறிக்கோளைச் சாராத ஒன்றாய், தனியாள் முயற்சியாய் இருக்க முடியாது. கட்சி சார்பற்ற எழுத்தாளர்கள் ஒழிக! மீமனித இலக்கியவாதி ஒழிக!

இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தினது பொது குறிக்கோளின் ஒரு பகுதியாக வேண்டும். தொழிலாளி வர்க்கம் அனைத்தின் அரசியல் உணர்வு கொண்ட முன்னணிப்படை அனைத்தாலும் இயக்கப்படும் தனியொரு மாபெரும் சமூக-ஜனநாயகப் பொறியமைவைச் சேர்ந்த"பல் சக்கரமும் திருகும்" ஆகிவிட வேண்டும். ஒழுங்கமைந்த. திட்டமிடப்பட்ட, ஒருமித்த சமூக-ஜனநாயகக் கட்சிப் (கம்யூனிஸ்ட் கட்சி) பணியில் இலக்கியம் ஒரு கூறாகிவிட வேண்டும்."
லெனின் -(கட்சி நிறுவனமும் கட்சி இலக்கியமும்)
அறநெறி

"மனிதனுக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்தினங்களை அடிப்படையாய்க் கொண்ட எந்த ஒழுக்கநெறியையும் நாம் நிராகரிக்கின்றோம். அது ஏமாற்று வித்தை, மாய்மாலம், நிலப்பிரபுக்கள், முதலாளிகளது நலன்களை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கான உபாயம் என்கிறோம்.

எங்களுடைய ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்ட நலன்களுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தது என்று நாம் கூறுகிறோம். எங்கள் ஒழுக்கநெறிபாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்துதான் உதிக்கிறது."
லெனின் -(இளைஞர் கழகங்களின் பணிகள்)

வர்க்கங்களும் வர்க்க உறவுகளும்

"சுரண்டும் வர்க்கமாகவும் ஒடுக்கப்படும் வர்க்கமாகவும், ஆளும் வர்க்கமாகவும் ஒடுக்கப்படும் வர்க்கமாகவும் சமூகம் பிளவுண்டதானது, முற்காலங்களில் பொருளுற்பத்தியின் வளர்ச்சி பற்றாக்குறையாகவும், குறுகிய வரம்புக்குட்பட்டதாகவும் நிலவியதால் ஏற்பட்டதன்தவிர்க்க முடியாத விளைவாகும். மொத்த சமூக உழைப்பால் கிடைக்கும் உற்பத்திப் பொருட்கள் எல்லோருடைய உயிர் வாழ்வுக்கும் வேண்டிய அத்தியாவசிய அளவைக் காட்டிலும் சொற்ப அளவே அதிகமாய் இருக்கும் வரை, இதன் காரணமாய்ச் சமூகத்தின் உறுப்பினர்களில் மிகப் பெருவாரியானோரின் முழு நேரமும் அல்லது அநேகமாய் முழுநேரமும் உழைப்புக்காக ஈடுபடுத்த வேண்டியிருக்கும் வரையில் இந்தச் சமூகம் தவிர்க்க முடியாதவாறு வர்க்கங்களாய்ப் பிளவுற்றிருக்க வேண்டியதாகிறது."
எங்கெல்ஸ் -(டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 394-395)

வரலாற்றைப் படைப்பது மக்களே

"மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உண்டாக்கிக் கொள்கின்றனர். ஆனால் மனிதர்களின், மக்களின் பெருந்திரளின் செயல் நோக்கங்களை நிர்ணயிப்பது ஏது?.. மனிதனின் வரலாற்று நடவடிக்கை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைகிற பொருளாயத வாழ்வின் உற்பத்திக்கான புறநிலைமைகள் யாவை? இந்தப் புறநிலைமைகளின் வளர்ச்சிக்குரிய விதி எது?- இவற்றின் மீதெல்லாம் மார்க்ஸ் நமது கவனத்தைத் திருப்பி, வரலாறு அளப்பரிய பல்வகை வேறுபாடுகளும் முரண்பாடுகளும் கொண்டிருந்த இயக்கப் போக்காயிருந்த போதிலும் அதை திட்டவட்டமான விதிகளால் ஆளுமை செய்யப்படும் ஒரு சீரான இயக்கப் போக்காக விஞ்ஞான அடிப்படையிலே பயில்வதற்கு வழி காட்டினார்"
லெனின் -(காரல் மார்க்ஸ்- வாழ்க்கை வரலாறு)

சமூகத்தை மாற்றி அமைப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

"நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டின் முறையிலான நிலைபாட்டை எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்
...
புரட்சிகர சோஷலிடுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணி...... சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வாக்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிசச் சமூகம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வாக்கப்போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று."

லெனின் -(நமது வேலைத்திட்டம்).

No comments:

Post a Comment