Monday 13 July 2015

உண்மையை அறியும் வழியை நடைமுறை வாயிலாக இடைவிடாமல் மார்க்சியம்-லெனினியம் திறந்து காட்டுவது பற்றி மா.சே.துங்.

மா.சே.துங்:-
"புறநிலை எதார்த்த உலகில் மாற்றத்தின் இயக்கங்கள் ஒருபொழுதும் முற்றுப்பெறாது. அதைப் போன்றதுதான், நடைமுறையின் மூலம் மனிதன் உண்மையை அறியும் நிகழ்ச்சிப்போக்கும். மார்க்சியம்-லெனினியம் எந்த வகையிலும் உண்மை பற்றிய முழு அறிவையும் அப்படியே திரட்டிக் கொடுத்துவிடவில்லை. மாறாக, அது நடைமுறை வாயிலாக உண்மையை அறியும் வழியை இடைவிடாமல் திறந்து விடுகிறது. அகமும் புறமும், கொள்கையும் நடைமுறையும், அறிவதும் செய்வதும் பருண்மையான வரலாற்று வழியிலான ஒற்றுமையில் இருக்கிறது என்பதே நமது முடிவு. பருண்மையான வரலாற்றிலிருந்து பிரிந்து செல்லும் தவறான கொள்கைகள் அனைத்தையும், அவை வலதாக இருந்தாலும்சரி, "இடதாக" இருந்தாலும்சரி, நாம் அவற்றை எதிர்க்கிறோம்."

(நடைமுறை பற்றி)

No comments:

Post a Comment