Friday 9 June 2017

செயற்கையான முறையில் சோவியத்தை படைத்திட முடியாது - லெனின்

“வரலாற்று அனுபவத்தைச் செயற்கை முறையில் படைப்பித்துவிட முடியாது என்பதை தோழர் பொர்டீகா ஒத்துக்கொள்கிறார். போராட்டத்தை பிறிதொரு துறைக்கு எடுத்துச் சென்றாக வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறுகிறார். புரட்சிகர நெருககடி ஒவ்வொன்றுடன் கூடவும் பாராளுமன்ற  நெருக்கடியும் தோன்றுவதை அவர் உணரவில்லையா, என்ன? போராட்டத்தைப் பிறிதொரு துறைக்கு, அதாவது சோவியத்துகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமெனச் கூறுகிறார் என்பது மெய்தான். ஆனால் சோவியத்துக்களைச் செசய்கை முறையில் படைப்பித்துவிட முடியாதென்பதை பொர்டீகாவே ஒத்துக் கொள்கிறார். புரட்சியின் போதோ, புரட்சியின் தருவாயிலோதான் சோவியத்துக்களை நிறுவ முடியும் என்று ருஷ்யாவின் உதாரணம் காட்டுகிறது. கேரென்ஷ்கியின் காலத்திலுங்கூட சோயிவத்துகள் பாட்டாளி வார்க்க அதிகாரமாய் அமைய முடியாத முறையிலேதான் நிறுவப்பட்டன.

பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்துகொண்டுதான் முதலாளித்துவ சமூகத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப் போராட்டம் நடத்த முடிகிறது.

போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும்- முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத்தேவையில்லை- உபயோகித்துக கொள்ள வேண்டியிருக்கிறது.  இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள் அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்”

(பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது. 1920)

No comments:

Post a Comment