Sunday 11 June 2017

மார்க்சிய அடிப்படையின் மீது சந்தேகம் கொள்ளும் திருத்தல்வாதத்தை எதிர்த்து- லெனின்

(தியரி(theory)கோட்பாடு- என்பது அந்தந்த காலத்திற்கு உரிய நடைமுறையை (practice) வகுத்தளிக்கிறது. சமூக வளர்ச்சியோடு ஏற்படும் மாற்றத்தோடு மாறுபட வேண்டிய நடைமுறையை வகுத்தளிக்கிறது. மாற்றத்தை எதைக் கொண்டு அணுகுகிறோமோ அது மார்க்சிய விஞ்ஞான அடிப்படையேயாகும். அடிப்படை வளருமா? ஆமாம் என்கிறார் லெனின், அடிப்படை அடிப்படையைக் கொண்டு வளரும் என்கிறார். அடிப்படையை மீறிவளர்ந்தால் அடிப்படை பொய்ப்பித்துவிட்டது என்று பொருள். நவீன திருத்தல்வாதிகள் மார்க்சிய அடிப்படையை மீறிவளர்க்க முயற்சிக்கின்றனர்.)
தற்போது சர்வதேச சமூக-ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தால் (ideological wavering) பீடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இதுகாறும் மார்க்ஸ் எங்கெல்ஸ் போதனைகள் புரட்சிக் கோட்பாட்டுக்குரிய உறுதிவாய்ந்த அடித்தளமாய் (foundation) கருதப்பட்டுவந்தன, ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழைமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன.
நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டின் நிலையையே (Marxist theoretical position) எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம், மார்க்சியம் தான் முதன்முதல் சோஷலிசத்தைக் கற்பனாவாதத்தில் இருந்து  விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது, இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது, இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று. தொழிலாளியை வேலைக்கு அமர்த்திக் கொள்வதானது, அதாவது உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதானது, சொத்துடைமையற்ற லட்சோபலட்சக் கணக்கானோரை நிலம், ஆலைகள், சுரங்கங்கள் முதலானவற்றின் உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில முதலாளிகள் அடிமை செய்து விடுவதை எப்படி மூடிமறைக்கிறது என்பதை விளக்கியதன் மூலம், நவீன காலமுதலாளித்துவப் பொருளாதாத்தின் தன்மையை அது வெளிப்படுத்திக் காட்டிற்று.

நவீன கால முதலாளித்துவ வளர்ச்சி அனைத்துமே பெருமளவான பொருளுற்பத்தியானது சிற்றளவான பொருளுற்பத்தியைக் கழித்துக் கட்டிவிடும் போக்கினை வெளிப்படுத்திச் செல்வதையும், சோஷலிசத் சமூக அமைப்பை சாத்தியமும் அத்தியாவசியமும் ஆக்கும் நிலைமைகளைத் தோற்றுவிப்பதையும் அது தெளிவுபடுத்திக்காட்டிற்று.

வேர்விட்டு வளர்ந்துள்ள பழக்க வழக்கங்கள், மற்றும் அரசியல் சூழ்ச்சிகள், புரியாப் புதிர்களான சட்டங்கள், கடுஞ்சிக்கலான கோட்பாடுகள் (intricate doctrines) ஆகியவற்றாலாகிய புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்கப் போராட்டத்தை, பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடைமையற்றோர் அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்தில்லாப் பெருந் திரளாகிய பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படிக் கண்டறிந்து கொள்வதென்று அது நமக்குக் கற்றுக் கொடுத்தது.

புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுபடுத்திற்று, சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிசச் சமூகம் ஒழுங்கமைக்கப் போராட்டத்தைத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று.

இப்பொழுது நாம் கேட்கிறோம்: இந்தக் கோட்பாட்டை (this theory)புதுப்பிப்பதாய்“renovators” உரக்கக் கூறிக் கொள்கிறார்களே, இக் காலத்தில் பெருங்கூச்சல் எழுப்பி வருவோரும் ஜெர்மன் சோஷலிஸ்ட் பெர்ன்ஷ்டைனை மையமாய்க் கொண்டு திரண்டு இருப்போராகிய இவர்கள் புதிதாய் எதையேனும் இக்கோட்பாட்டில் புகுத்தியிருக்கிறார்களாஎதுவுமே இல்லை. வளர்த்திடுமாறு மார்க்சும் எங்கெல்சும் நம்மைப் பணித்துச் சென்ற இந்த விஞ்ஞானத்தை ஓரடியுங்கூட இவர்கள் முன்னேறச் செய்துவிடவில்லை, புதிய போராட்ட முறைகள் எவற்றையும் இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குக் கற்றுக் கொடுத்திடவில்லை. ( they have not taught the proletariat any new methods of struggle). மாறாக, இவர்கள் பிற்பட்ட கோட்பாடுகளில் இருந்து சிறு கவளங்களைக் கடன்வாங்கி, பாட்டாளி வர்க்கத்துப் போராட்டக் கோட்பாட்டையல்ல, விட்டுக் கொடுத்துச் செல்லும் கோட்பாடடை- பாட்டாளி வர்க்கத்தின் மிகக்கொடும் பகைவர்களுக்கு, சோஷலிஸ்டுகளை வருத்துவதற்காக அயராது புது வழிமுறைகளைத் தேடியலையும் அரசாங்கங்களுக்கும் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் விட்டுக்கொடுத்துச செல்லும் கோட்பாடடை- பிரசாரம் செய்துப் பின்வாங்கியே சென்றிருக்கிறார்கள்.
மார்க்சின் கோட்பாட்டை (Marx’s theory) நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாய், மீறவொண்ணாத ஒன்றாய்க் கருதவில்லை. மாறாக, அது சோஷலிஸ்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின் அடக்கல்லை மட்டுமே அமைத்துக் கொடுத்திருக்கிறது, சோஷலிஸ்டுகள் வாழ்க்கையுடன் சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞானத்தை எல்லாத் திசைகளிலும் வளர்த்துச் செல்வது அவசியம் என்பதை நாம் ஐயமற அறிவோம்.

மார்க்சின் கோட்பாட்டை (Marx’s theory) சுயேச்சையான முறையில் விரிவுபட (independent elaboration) வளர்த்திடுவது, முக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக் கருதுகிறோம். ஏனெனில் இந்தக் கோட்பாடு பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே (general guiding principles) அளித்திடுகிறது, குறிப்பான முறையில் (in particular) அவை பிரான்சிலிருந்து வேறுவிதமாய் இங்கிலாந்திலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜெர்மனியிலும் பிரயோகிக்கப்படுபவை (applied). ஆகவே கோட்பாட்டுப் பிரச்சினைகள் (theoretical questions) பற்றிய கட்டுரைகளுக்கு எமது பத்திரிகையில் மகிழ்ச்சியுடன் இடம் அளிப்போம், சர்சைக்குரிய விவரங்களை (controversial points) பகிரங்கமாய் விவாதிக்குமாறு எல்லாத் தோழர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்”2

(நமது திட்டம்-1899)

(லெனின் தெளிவாகத்தான் கூறியிருக்கிறார், வளர்த்திடுவது என்பதைற்குப் பொருள், அந்தந்த நாட்டின் சூழ்நிலைமைக்கு ஏற்ப போராட்ட வடிங்களை அமைத்துக் கொள்வதேயாகும். அதாவது மார்க்சியத்தை அந்தந்த நாட்டிற்கு ஏற்ப பிரயோகிப்பதை (applied) பற்றி பேசியிருக்கிறார், ஆனால் இந்த நவீன திருத்தல்வாதிகள் விஞ்ஞான கம்யூனிசத்தின் அடிப்படைகளையே திருத்த, அவர்கள் பொருளில் வளர்க்க முயற்சிக்கின்றனர். வடிவத்தை அமைத்துக் கொள்வதற்கு கூறியதை அடிப்படைக்கு மாற்றிவிடுகின்றனர்.)

No comments:

Post a Comment