Monday 12 June 2017

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளியின் உபரி உழைப்பு முதலாளியால் கையகப்படுத்துதல்

“உற்பத்திப் பொருள் முதலாளிக்குரிய சொத்தகுமே தவிர, அதன் நேரடி உற்பத்தியாளராகிய உழைப்பாளிக்குரியதன்று. முதலாளி ஒரு நாள் உழைப்புச் சக்திக்கு அதன் மதிப்புக்குரிய விலை கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில், இந்த உழைப்புச் சக்தியை ஒரு நாளைக்குப் பயன்படுத்திக் கொள்ள அவர் உரிமை படைத்தவர். ஒரு நாளைக்குப் பயன்படுத்திக் கொள்ள அவர் உரிமை படைத்தவர். ஒரு நாளைக்கு அவர் வாடகைக்கு அமர்த்தும் குதிரையையோ அது போன்ற வேறொன்ளையோ பயன்படுத்திக் கொள்ள அவருக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை இதிலும் உண்டு.

சரக்கின் பயன் சரக்கை வாங்கியவருக்கே உரியது. உழைப்புச் சக்தியை விற்றவர் தன் உழைப்பைக் கொடுப்பதன் மூலம் உண்மையில் செய்வதெல்லாம் தான் விற்ற பயன் மதிப்பைத் துறப்பதுதான். பட்டறைக்குள் அவர் அடிவைக்கும் தருணத்திலிருந்து, அவரது உழைப்புச் சக்தியின் பயன் மதிப்பும், ஆகவே உழைப்பாகிய அதன் பயனும்கூட முதலாளிக்கே உரியவை. உழைப்புச் சக்தியை வாங்குவதன் மூலம், முதலாளி உற்பத்திபி பொருளின் உயிரில்லாத ஆக்கக் கூறுகளுடன் நுரைக்கும் உயிர்ச்சக்தியாக உழைப்பை இணைக்கிறார். அவரது கண்ணோட்டத்தில் உழைப்பு நிகழ்முறை என்பது வாங்கப்பட்ட சரக்கின்,  அதாவது உழைப்புச் சக்தியின் நுகர்வே தவிர அதற்கு மேல் ஒன்றுமில்லை, ஆனால் உழைப்புச் சக்திக்கு உற்பத்திச் சாதனங்கள் வழங்குவதன் மூலமாக அல்லாமல் இந்த நுகர்வை நிகழச் செய்ய முடியாது. உழைப்பு நிகழ்முறை என்பது முதலாளி வாங்கியிருக்கிறவற்றுக்கு இடையில், அவரது சொத்தாகியிருப்பவற்றுக்கு இடையில் நிகழ்வதாகும்.”
(மூலதனம்- தொகுதி 1 பக்கம் 254-255)


No comments:

Post a Comment