Monday 12 June 2017

உற்பத்தியில் முதலாளி ஈடுபடுவதின் நோக்கம் உபரிமதிப்பை படைப்பதே – மார்க்ஸ்

“முதலாளி தனதாக்கிக் கொள்கிற உற்பத்திப் பண்டம்- உதாரணமாக, நூல் அல்லது பாத அணிகள் – பயன் மதிப்பாகும். ஆனால் ஒரு விதத்தில் பாத அணிகள் சமூக முன்னேற்றம் அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளன, நமது முதலாளி தீர்மானகர “முன்னேற்றவாதி” ஆவார் என்ற போதிலும், அவர் பாத அணிகளைப் பாத அணிகளின் நிமித்தமே தாயாரிப்பதில்லை.

சரக்கு உற்பத்தியில் பயன் மதிப்பு என்பது எவ்விதத்திலும் சரக்குகளின் உற்பத்தில் “”அதன் நிமித்தமே விரும்பப்படுகி” ஒன்றன்று. பயன் மதிப்புகள் பரிவர்த்தனை மதிப்பின் பொருளாயத ஆதாரமாக, அதன் சேமிப்பகங்களாக இருக்கிற காரணத்தாலும், இருக்கிற அளவிலுமே அவற்றை முதலாளிகள் உற்பத்தி செய்கின்றனர்.

நமது முதலாளி இரண்டு குறிக்கோள்களை மனத்திற் கொண்டுள்ளார்.

முதலாவதாக, பரிவர்த்தனையில் மதிப்புடையதான பயன் மதிப்பை, அதாவது விற்க வேண்டியதென விதிக்கப்பட்ட பண்டத்தை, சரக்கை உற்பத்தி செய்ய விரும்புகிறார், இரண்டாவதாக, உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட சரக்குகளின், அதாவது பொதுச் சந்தையில் தன் கைப்பணத்தைக் கொண்டு வாங்கிய உற்பத்திச் சாதனங்கள், உழைப்புச் சக்தி ஆகியவற்றினது மதிப்புகளின் மொத்தத்தை விடவும் அதிக மதிப்புடைய சரக்கை உற்பத்தி செய்ய விரும்புகிறார். அவர் உற்பத்தி செய்ய நினைப்பது பயன் மதிப்பு மட்டுமன்று, சரக்கும்கூட, பயன் மதிப்பு மட்டுமன்று மதிப்பும்கூ, மதிப்பு மட்டுமன்று, அதேபோது உபரி மதிப்பும்கூட.
சரக்குகள் எப்படி ஒருங்கே பயன் மதிப்புகளாகவும், மதிப்புகளாகவும் இருக்கின்றனவோ, அதே போல அவற்றை உற்பத்தி செய்யும் நிகழ்முறையும் ஒருங்கே உழைப்பு நிகழ்முறையாகவும், மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையாகவும் இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு சரக்கின் மதிப்பும் அதில் செலவிடப்பட்டு பொருள் வடிவாக்கப்பட்டுள்ள உழைப்பின் அளவால், குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் அதன் உற்பத்திக்கு அவசியமான வேலை நேரத்தால்  நிர்ணயிக்கப்படுகிறது.”

(மூலதனம்- தொகுதி 1 பக்கம் 256-257)

No comments:

Post a Comment