Monday 10 December 2018

தாராளியத்தை முறியடிப்போம் – மாசேதுங்


(COMBAT LIBERALISM)
“நாம் செயலூக்கமான கருத்தியல் போராட்டத்திற்காக நிற்கிறோம். ஏனெனில் அது நமது போராட்டத்தில் கட்சிக்குள்ளும் புரட்சிகர அமைப்புகளுக்குள்ளும் ஐக்கியத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான ஆயுதம் ஆகும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் புரட்சியாளரும் இந்த ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும்.

ஆனால், தாராளியம் (liberalism) கருத்தியல் போராட்டத்தை நிராகரித்து கொள்கையற்ற சமாதானத்திற்கு நின்று கட்சியிலும் புரட்சிகர அமைப்புகளிலும் உள்ள சில அலகுகளிலும் தனிநபர்களிடையேயும் அழுகிய, பண்பற்ற கண்ணோட்டத்தை தோற்று வித்து அரசியல் சீரழிவை கொண்டு வருகிறது.

தாராளியம் பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது.

ஒரு நபர் தெளிவாக தவறாக இருக்கிறபொழுது அவர் நன்கு பரிச்சயமானவர், சக நகரவாசி, பள்ளித் தோழர், நெருக்கமான நண்பர், நேசிக்கப்படுகிறவர், பழைய சகா அல்லது பழைய கீழ்பணியாளர் என்பதால் மன அமைதிக்காகவும் நட்புறவிற்காகவும் விஷயங்களை நழுவ விடுதலும் கொள்கைரீதியாக வாதிடுவதிலிருந்து தவிர்த்தலும் ஆகும். அல்லது நல்ல உறவுகளை தக்கவைப்பதற்காக, விஷயத்திற்குள் முழுமையாக செல்வதற்கு பதிலாக மேலோட்டமாக அதை தொடுதலே ஆகும். விளைவு அமைப்பு பாதிக்கப்படுகின்றது மற்றும் தனிநபர் பாதிக்கப்படுகின்றார். இது, தாராளியத்தின் ஒரு வகை.
…..
 தாராளியலார் மார்க்சிய கொள்கைகளை அரூவமான வறட்டுச் சூத்திரமாக பார்ப்பர். அவர்கள் மார்க்சியத்தை அங்கீகரிப்பர்; ஆனால், அதை நடைமுறைப்படுத்தவோ முழுமையாக நடைமுறைப்படுத்தவோ தயாரில்லாமல் இருப்பர்; அவர்கள் தாராளியத்தின் இடத்தில் மார்க்சியத்தை வைக்க தயாரில்லாமல் இருப்பர்; அவர்கள் மார்க்சியத்தையும் கொண்டிருப்பர்; ஆனால், அதே சமயத்தில் தங்கள் தாராளியத்தையும் கொண்டிருப்பர் - அவர்கள் மார்க்சியத்தை பேசி தாராளியத்தை நடைமுறைப்படுத்துவர்; அவர்கள் பிறருக்கு மார்க்சியத்தையும் தமக்கு தராளியத்தையும் பயன்படுத்து கின்றனர். அவர்கள் இரு வகைப்பட்ட சரக்குகளை கொண்டிருந்து அதன் ஒவ்வொன்றையும் பயன்படுத்துவர். சிலரின் மனங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது இதுவே.

தாராளியம் வாய்ப்பியத்தின் (Opportunism) வெளிப்பாடாக இருப்பதுடன் மார்க்சியத்தோடு அடிப்படையில் முரண்படுகிறது. அது எதிர்மறையானதுடன் புறவயமாக எதிரிக்கு உதவக்கூடியபாதிப்பை கொண்டிருக்கிறது; அதனால்தான் நம் மத்தியிலே அதன் இருந்தலை எதிரி வரவேற்கிறான். அதன் இயல்பு (nature) இத்தகையதாக இருக்கையில் புரட்சிகர அணிகளிடையே அதற்கு இடம் இருந்திடக்கூடாது.

எதிர்மறையான தாராளியத்தை வெல்ல மெய்க்கருத்தில் நேர் தாயாக உள்ள மார்க்சியத்தை கட்டாயம் பயன்படுத்தவேண்டும்.”
செப்டம்பர் 7, 1937
(தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்- 2)



No comments:

Post a Comment