Monday 8 July 2019

07)பொருளாயத வாழ்வு வளர்வதற்கு வேண்டிய உண்மையான தேவைகளை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும் என்று மார்க்சை ஆதாரப்படுத்திக் கூறியுள்ளார் ஸ்டாலின்:-


மார்க்ஸ் கூறுவதாவது: "மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல; அதற்கு மாறாக, மனிதர்களின் சமூக வாழ்நிலைதான் அவர் களின் உணர்வை நிர்ணயிக்கிறது.'' (அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு)

ஆக, கொள்கையில் தவறாமலிருக்க வேண்டுமானால் - வீண் கனவு காண்பவர்களைப் போல ஆகாமலிருக்க வேண்டுமானால் - பாட்டாளி வர்க்கத்தின் கட்சி என்ன செய்ய வேண்டும்? புறநிலைக்கப்பால் நிற்கும் ''மனிதப் பகுத்தறிவுக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்யக் கூடாது. சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும் சக்தி எது ? சமூகத்தின் பொருளாயத வாழ்விலுள்ள பருண்மையான நிலைமைகள்தாம் அந்த சக்தி. எனவே, அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும். ''பெரிய மனிதர்களின்'' நல்லெண்ணங்களை ஆதார மாகக் கொள்ளவும் கூடாது. அதற்குப் பதிலாக, சமூகத்தின் பொருளாயத வாழ்வு வளர்வதற்கு வேண்டிய உண்மையான தேவைகளை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும்.

நரோத்னிக்குகள், அராஜகவாதிகள், சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் அடங்கலாக, கற்பனை உலகில் உலவியவர்கள் பலர் வீழ்ச்சியடைந்தார்களே - அதற்குக் காரணமென்ன? காரணங்கள் பல உண்டு. அதில் ஒன்று, சமூகம் வளர்வதில் சமுதாயத்தின் பொருளாயத வாழ்க்கை நிலைமைகள் வகிக்கும் முதன்மையான பாத்திரத்தை அவர்கள் அங்கீகரிக்காததே. அதோடு கூட, கருத்து முதல்வாதக் குட்டையில் இறங்கி விட்டனர். சமுதாய பொருளாயத வாழ்வு வளர்ச்சியின் தேவைகளை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் வேலைகளைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, இந்தத் தேவைகளைப் புறக்கணித்து அவற்றிற்குத் தொடர்பில்லாத வகையில், சமுதாயத்தின் யதார்த்த வாழ்வுடன் தொடர்பற்ற "இலட்சியத் திட்டங்களையும்'', ''அனைத்தும் தழுவிய திட்டங்களையும்' 'தங்களுடைய வேலைகளுக்கு ஆதாரமாகக் கொண்டனர்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் -பக்கம் 25)

No comments:

Post a Comment