Monday 8 July 2019

05)புறநிலை உண்மையை பற்றி ஸ்டாலின் :-


இயற்கையும், வாழ்வும், பருப்பொருள் உலகும் மட்டுமே முதன்மை என்றானால் - உணர்வும், சிந்தனையும் இரண்டாம் பட்சமான மூலத்திலிருந்து தோன்றியவை என்றானால் - அதைத் தொடர்ந்து என்ன முடிவு வரும்? மனித உணர்விற்கு அப்பால் சுதந்திரமாக இயங்கும் புறநிலை உண்மையைத்தான் பருப்பொருள் உலகம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

உணர்வு எனப்பட்டது இந்த புறநிலை உண்மையின் வெறும் பிரதிபலிப்பு மட்டுமே என்றானால், அதைத் தொடர்ந்து என்ன முடிவு ஏற்படும்? சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு, அதன் நிலைமை என்பவை முதன்மையானவை - சமுதாயத்தின் அறிவுசார் வாழ்வு இரண்டாம் பட்சமானது; ஒரு மூலத்திலிருந்து உதித்ததுதான். சமுதாயத்தின் பொருளாயத வாழ்வு எனப்பட்டது, மனிதர்களின் சித்தத்திற்கு அப்பாற்பட்டுச் சுதந்திரமாக இருந்து கொண்டிருக்கும் புறநிலை உண்மை - ஆனால் சமுதாயத்தின் அறிவுசார்ந்த (spiritual) வாழ்வு எனப்பட்டது, இந்தப் புறநிலை உண்மையின் பிரதிபலிப்பு மட்டுமே, யதார்த்த நிலையின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே - என்ற முடிவுகள் ஏற்படும்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும்
வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்- பக்கம் -  23-24)

No comments:

Post a Comment