Monday 8 July 2019

01)இயற்கையில் காணப்படும் ஒவ்வொரு பொருளும் மற்றொன்றுடன் சார்ந்து இருப்பதின் இயக்கவியல் பற்றி ஸ்டாலின்:-


இயற்கைப்பொருள்களும் அவற்றின் தோற்றங்களும் ஒன்றோடொன்று உள்ளார்ந்த முறையில் பிணைக்கப்பட்டவை என்றும், ஒரு முழுத்தன்மை உடையவை என்றும், ஒன்றையொன்று சார்ந்து இருக்கிறது என்றும் ஒன்றின் தன்மையை மற்றொன்றின் தன்மை நிர்ணயிக்கும்படி உள்ளதென்றும் இயக்கவியல் தத்துவம் கருதுகிறது.

எனவே, இயற்கையின் தோற்றம் எதையும் அதைச் சூழ்ந்துள்ள பிற தோற்றங்களிலிருந்து பிரித்துத் தனியாக ஆராய்ந்தால், அதைப் புரிந்து கொள்ளவே முடியாது என இயக்கவியல் தெளிவாகக் கூறுகிறது. அதாவது ஒரு தோற்றத்தைச் சுற்றியுள்ள மற்ற இயற்கைத் தோற்றங்களிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்த்தால், அந்தக் குறிப்பிட்ட தோற்றத்தின் தன்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது; மேலும், அப்படிப் பார்த்தால் அந்தத் தோற்றமே பொருளற்றதாகக் காணப்படும். வேறு விதமாக விளக்குவோம். ஒரு குறிப்பிட்ட இயற்கைத் தோற்றம் உள்ளது ; அதைச் சுற்றி வேறு பல தோற்றங்கள் உள்ளன; இந்தச் சுற்றுப்புறத் தோற்றங்களால் பாதிக்கப்பட்டு, அது குறிப்பிட்ட தோற்றமாகக் காட்சியளிக்கிறது. எனவே அந்தக் குறிப்பிட்ட தோற்றத்திற்கும் சுற்றுப்புறத் தோற்றங்களுக்கும் இடையே உள்ள இணைப்புஉறவு பிரிக்க முடியாததாகும். இந்த உறவோடு அந்தக் குறிப்பிட்ட தோற்றத்தைப் பரிசீலனை செய்தால்தான், அதைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும்.”
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்பக்கம்-6)


No comments:

Post a Comment