Saturday 6 January 2018

25. ஐக்கியம் – மா சே துங்

நமது நாட்டின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம் – இவை நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்ரவரி 1957)

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஐக்கியத்தின் மூலம் தான் முழு வர்க்கத்தினது ஐக்கியத்தையும், முழு தேசத்தினது ஐக்கியத்தையும் பெற முடியும். முழு வர்க்கத்தினதும், முழு தேசத்தினதும் ஐக்கியத்தின் மூலம் தான் எதிரியைத் தோற்கடிக்க முடியும், தேசிய ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் நிறைவேற்ற முடியும்
(ஜப்பானிய – எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணிக்கு மக்களை
கோடிக்கணக்கில் வென்றெடுப்போம் – 7 மே 1937)

மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைத் தீர்க்கும் இந்த ஜனநாயக முறை, 1942ல், “ஐக்கியம், விமர்சனம், ஐக்கயிம்” என்ற சூத்திரத்தில் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. இதை விரித்துக் கூறினால், இதன் அர்த்தம் ஐக்கியத்துக்கான ஆசையுடன் தொடங்கி, விமர்சனத்தின் அல்லது போராட்டத்தின் மூலம் முரண்பாடுகளைத் தீர்த்து, ஒரு புதிய அடிப்படையில் ஒரு புதிய ஐக்கியத்துக்கு வருவதாகும். நமது அனுபவத்தில், மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைத் தீர்க்கும் சரியான முறை இதுவே.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்ரவரி 1957)



No comments:

Post a Comment