Tuesday 2 January 2018

14. படைக்கும் மக்களுக்கும் இடையிலுள்ள உறவுகள் – மா சே துங்

மக்கள் நமது சொந்தபடை என்று கருதக்கூடிய முறையில் இராணுவம் மக்களுடன் ஒன்றாக வேண்டும், இத்தகைய படை உலகின் வெல்லப்பட முடியாதது.
(நீண்ட கால யுத்தம் பற்றி – மே 1938)

நாம் மக்களைச் சார்ந்திருக்கும் வரை, மக்களின் வற்றாத படைப்பாற்றலை உறுதியாக நம்பும்வரை, இவ்வாறு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நம்மை அவர்களுடன் இணைத்துக் கொள்ளும்வரை, நாம் எந்த இடர்பாடுகளையும் கடந்து செல்ல முடியும். எந்த ஒரு எதிரியும் நம்மை நசுக்க முடியாது, அதே வேளையில் எந்த எதிரியையும் நம்மால் நசுக்க முடியும் என்பதை ஒவ்வொரு தோழரும் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1945)

எமது தோழர்கள் தாம் செல்லுமிடமெங்கும் மக்களுடன் நல்ல உறவுகளை அமைத்து, அவர்கள் மீது அக்கறை செலுத்தி, அவர்கள் தமது இடர்பாடுகளை கடந்து செல்ல உதவி செய்ய வேண்டும். நாம் மக்கள்திரளுடன் ஐக்கியப்படவேண்டும், நாம் எவ்வளவுக்கு அதிகமாக மக்களுடன் ஐக்கியப்படுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது.
(சுங்கிக் பேச்சு வார்த்தைப் பற்றி- 17 அக்டோபர் 1945)


No comments:

Post a Comment