Monday 1 January 2018

13. அதிகாரிகளுக்கும் படையினருக்கும் இடையிலுள்ள உறவுகள் – மா சே துங்

நமது படையிடம் எப்பொழுதும் இரண்டு கொள்கைகள் உண்டு. முதலாவதாக, நாம் எதிரிகள் மீது ஈவிரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்களை அடக்கித் துடைத்தொழிக்க வேண்டும். உயர் அதிகாரிகள், கீழ்ப்பணியாளர்கள் ஆகியர்வர்களுடன் அன்பாக இருக்க வேண்டும். அவர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.
(பின்னணி படை வரிசையிலிருந்து வந்த முன் மாதிரியாகப்
பயின்றோரின் பிரதிநிதிகளுக்குக் கட்சி மத்தியக் கமிட்டி
அளித்த வரவேற்வில் ஆற்றிய உரை -18 செப்டம்பர் 1944)

உழைப்பாளி மக்கள் மத்தியில் வேலை செய்யும் பொழுது கம்யூனிஸ்டுகள் இணங்கச் செய்வது, பயிற்றுவிப்பது என்ற ஐனநாயக முறையைக் கையாள வேண்டும் எவ்விதத்திலும் கட்டளைவாதத்திலே பலவந்தத்திலோ ஈடுபடக் கூடாது. சீனக் கம்யூஸ்ட் கட்சி இந்த மார்க்சிய லெனினியக் கோட்பாட்டை நம்பிக்கையோடு கடைப்பிடிக்கின்றது.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்வரி 1958)

சித்தாந்தப் புனர் உருவாக்கம் நீடித்த பொறுமையான, பிரயாசையான வேலையை உள்ளடக்கியது என்பதை நமது தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வில் பல பத்தாண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த மக்களின் சித்தாந்தத்தை ஒரு சில சொற்பொழிவுகள் கொடுப்பதன் மூலம் அல்லது ஒருசில கூட்டங்கள கூட்டுவதன் மூலம் மாற்றலாம் என முயற்சிக்கக் கூடாது. அவர்களை நம்பச் செய்யும் ஒரே ஒரு வழி இணங்கச் செய்தன்றிப் பலவந்தப்படுத்துவதல்ல. பலவந்தப்படுத்துவதன் மூலம் ஒருபோதும் நம்பச் செய்ய முடியாது. பலாத்காரத்தின் மூலம் அவர்களை நம்பச் செய்ய முயல்வது ஒருபோதும் வேலை செய்யாது. எதிரியைச் சமாளிக்கும் பொழுது இத்தகைய முறை அனுமதிக்கக் கூடியது. ஆனால் தோழர்களுடன் அல்லது நண்பர்களுடன் படிக்கும் பொழுது இது முற்றிலும் அனுமதிக்கக் கூடாது.
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை
பற்றிய தேசிய மாநாட்டுரை – 15 மார்ச் 1957)

எதிரிக்கும் நமக்குமிடையில் நாம் ஒரு வேறுபாடு செய்து கொள்ள வேண்டும். தோழர்கள் மீது ஒரு பகை நிலைபாட்டை மேற்கொண்டு எதிரிகளை நடத்துவது போல் அவர்களை நடத்தக் கூடாது. நாம் மக்களின் இலட்சியத்தைப் பாதுகாத்து, அவர்களுடைய அரசியல் உணர்வை உயர்த்தும் பேரார்வத்துடன் பேச வேண்டும், நம்முடைய அணுகுமுறையில் எள்ளி நகையாடுதலோ தாக்குதலோ இருக்கக் கூடாது.
(சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை

பற்றிய தேசிய மாநாட்டுரை – 15 மார்ச் 1957)

No comments:

Post a Comment