Thursday 4 January 2018

20. விடா முயற்சிடனும் சிக்கனமாகவும் நாட்டை நிர்மணிப்பது – மா சே துங்

“நமது ஊரியர்கள் எல்லோரும், நமது மக்கள் அனைவரும் பின்வருவனவற்றை இடைவிடாது மனதில் பதித்துக் கொள்ளுமாறு நாம் கவனிக்க வேண்டும் :- நமது நாடு பிரமாண்டமான ஒரு சோஷலிச நாடு, ஆனால் பொருளாதார ரீதியில் பின்தங்கியது, வறியது. இது மிகப்பெரிய ஒரு முரண்பாடாகும். சீனாவை செல்வம் கொழிக்கும், வலுவான நாடாக்குவதற்கு பல பத்தாண்டுகள் தீவிரமான முயற்சி எடுப்பது அவசியம். இம்முயற்சி கண்டிப்பாக சிக்கனத்தைப் பயில்வது, விரையத்தை எதிர்ப்பது ஆகியவற்றை, அதாவது, விடா முயற்சியுடனும் சிக்கனமாகவும் நமது நாட்டை நிர்மாணிக்கும் கொள்கையை உள்ளடக்கியது”
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிரவரி 1957)

“அண்மையில் நமது ஊழியர்கள் பலர் மத்தியில் ஆபத்தான இயல்பு ஒன்று – மக்களுடன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் விருப்பமின்மை, தனிநபர் புகழ், தனிநபர் நயம் இவற்றுக்கான ஒரு கவலை தலை தூக்கிருக்கின்றது. இது மிக கூடாத ஒரு விசயம்.  இதைச் சமாளிக்கும் வழி யாதெனில் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் சிக்கனத்தைப் பயில்வதற்குமாக நடத்தப்படும் நமது இயக்கத்தின் போக்கில் நமது அமைப்புகள் எளிதானவையாக்கி, ஊழியர்களை கீழ்மட்டங்களுக்கு மாற்றி, இவ்வாறு குறிப்பிடத்தக்க பகுதியினரை உற்பத்தி வேலையில் ஈடுபடச் செய்வதாகும்.”
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிரவரி 1957)

“படைப் பிரிவுகள் உற்பத்தியில் ஈடுபட்டால் அவற்றால், பயிற்சி செய்யவோ, போரிடவோ முடியாமல் போய்விடும் என்றும், அரசாங்கமும், இதர அமைப்புகளும் அப்படி செய்தால், அவற்றால் தமது சொந்த வேலையைச் செய்யமுடியாமல் போய்விடும் என்றும் சிலர் கூறுகின்றனர். இது ஒரு போலி நியாயமாகும்.

சமீப ஆண்டுகளில் எல்லைப் பகுதியிலுள்ள நமது படைப் பிரிவுகள் தமக்குத் தாமே போதிய உணவும் உடையும் வழங்குவதற்காகப் பெருமளவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதே வேளையில் தமது இராணுவ பயிற்சிகைச் செய்து, அரசியல் படிப்பு, கலாச்சார படிப்பு முதலியவற்றையும் முன்னிலும் பார்க்க மேலும் வெற்றிகரமாய் நிறைவேற்றியுள்ளன. அன்றி, இராணுவத்தின் மத்தியிலும், இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையிலும் முன்னிலும் பார்க்கக் கூடுதலான ஐக்கியம் நிலவுகின்றது. சென்ற ஆண்டு போர் முன்னணியில் ஒரு பெரும் உற்பத்தி இயக்கம் நடைபெற்ற அதே வேளையில், விரிவான பயிற்சி இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதோடு, போரிலும் பெரும் வெற்றிகள் ஈட்டப்பட்டன. உற்பத்தியின் விளைவாக அமைப்புகளின் ஊழியர்களும் சிறந்த வாழ்க்கையை நடத்தி, மேலும் தியாக உணர்வுடனும் திறமையாகவும் உழைக்கின்றனர். எல்லைப் பகுதி. போர் முன்னணி இரண்டிலும் இதுவே நிலைமையாகும்.”
(பொருளாதார வேலை செய்ய நாம் கற்க வேண்டும் – 10 ஜனவரி 1945)


No comments:

Post a Comment