Tuesday 2 January 2018

17. மக்களுக்குத் தொண்டு செய்க – மா சே துங்

நாம் அடக்கமும் விவேகமும் உடையவர்களாக இருக்க வேண்டும். இறுமாப்பு அவசரபுத்தி இரண்டுக்கும் எதிராக நம்மைப் பாதுகாக்க வேண்டும், உடல், பொருள், ஆவி மூன்றாலும் சீன மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்…
(சீனாவின் சாத்தியமான இரண்டு தலைவிதிகள் – 23 ஏப்ரல் 1945)

நமது ஊரியர்கள் அனைவரும், அவர்களுடைய அந்தஸ்து எதாயிருந்தாலும் சரி, மக்களின் சேவகர்கள் ஆவர். நாம் செய்யவதெல்லாம் மக்களுக்குத் தொண்டு செய்வதாகும். அப்படியானால் நமது தீய இயல்புகள் எல்லாவற்றையும் வீசி எறிய நாம் ஏன் தயங்க வேண்டும்?
(1945ஆம் ஆண்க்கான கடமைகள் – 15 டிசம்பர் 1944)

மக்களுக்குப் பொறுப்புடையவர்களாக இருப்பது நமது கடமை. ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கொள்கையும் மக்களின் நலன்களுக்கு இசைவாக இருக்க வேண்டும். தவறுகள் நேர்ந்தால், அவை திருத்தப்பட வேண்டும் – மக்களுக்குப் பொறுப்புடையவர்களாய் இருப்பதன் அர்த்தம் இதுவேயாகும்.
(ஜப்பானி-எதிர்ப்பு யுத்த வெற்றிக்குப் பிந்திய நிலைமையும்
நமது கொள்கையும் – 13 ஆகஸ்ட் 1945)

எங்கே போராட்டம் இருக்கிறதோ அங்கே தியாகமும் உண்டு. மரணம் என்பது அடிக்கடி நிகழ்வது. ஆனால், நாம் மக்களின் நலன்களையும், ஏகப் பெரும்பான்மையினரின் துன்பதுயரங்களையும் மனதில் கொண்டு மக்களுக்காக உயிர்விட்டால், அது தகுதியான சாவாகும். இருந்தாலும், அனாவசியமான தியாகங்களைத் தவிர்க்க நாம் இயன்றதனைத்தையும் செய்யவேண்டும்.

(மக்களுக்குத் தொண்டு செய்க – 8 செப்டம்பர் 1944)

No comments:

Post a Comment